இருள்
அடர்த்தியான காரிருள் 
எங்கெங்கிலும் இருள் மட்டுமே
எனை சூழ்ந்திருக்கிறது

அவ்விருள் அரக்கனிடம் அகப்பட்டு
தேடவியலாமல் தேடுகிறேன் என்னையே

பல முறை முயன்று முயன்று தோற்கிறேன்

இறுதியில் இருளே வெல்ல போவதாக நினைக்கையில்

அதோ அங்கேதான்

ஆகா என்னே

வெகு தூரத்திலிருந்து மங்கிய ஒளி

சிறிதாய் தோன்றிய வெளிச்சம் இப்போது எனை நோக்கியே வந்து கொண்டிருக்கிறது

கடற்கரையில் வழி தெரியாமல் படகிற்கு கிடைத்த கலங்கரை விளக்கம் போல

அடர் காட்டினுள் மின்னிடும் சிறு மின்மினிபூச்சி போல

எனக்கென வந்த அவ்வொளியை
கட்டித் தழுவிக் கொண்டேன்
எனக்குள் எனைச்சுற்றி என எங்கெங்கிலும் பரவினான் ஒளிஅரசன்

நெடுங்கால இருள் பிராயத்தமும்
இவனுக்காகவே என்றது போல் உணர்ந்தேன்

இனி வேறேன்ன? என்றும் சந்தோசமே.. எல்லா திசைகளிலும் அரசன் போல் வீற்றிருந்து எனைச் சூழ்ந்து ஆட்சி செய்கிறான்

திடிரென ஒருநாள் ஓர் உணர்வு எனக்குள்ளே
இது பொய்யாகி போய்விடில்
இது நிரந்தரமாகவிடில்?

கேள்விகளின் விடை அறிய வேண்டாதலின்
தேடி ஓடுகிறேன் மீண்டும் 
அக்கரிய பெரும் பூதத்திடையே

விடவில்லை அவன் வெளிச்சம்
மீண்டும் எனையே சூழ்கிறான் சூரியனையை போல எல்லா கை நீட்டி எனை அணைக்கிறான்

பயம்.... வேண்டாம் எனைவிட்டு விடு
நான் ஒரு சாபக்கேடு என்று அழுகிறேன்

என் கவலை தாளாமல் எனை விட்டு பிரிகிறான்
பெருங்கடலென இருந்தவன் சிறு புள்ளியென தேய்கிறான்

மீண்டும் ஓடி ஒளிந்து கொண்டேன்
எனை சிறைபடுத்திக் கொண்டேன் 
அக்கரிய காரியகாரனிடமே

ஆனால் ஒன்று மட்டும் உறுதி
இனி வெளிவரப் போவதும் இல்லை
அதற்கு ஆசைபடுவதும் இல்லை
இல்லை என்றுமே இல்லை
One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.