Queer Lens பொறுப்பாளர் குறிப்பு:

***சென்னை சுயாதீனத் திரைப்பட விழா***

moulee
bumpahead.net
3 min readFeb 5, 2019

--

சென்னை சுயாதீனத் திரைப்பட விழாவில் (Independent Film Festival of Chennai — IFFC, 2019) திரையிடப்பட இருக்கும் பால்புதுமையினர் (Queer) திரைப்படங்களை தேர்வுசெய்யவும், தொகுக்கவும் ஒருங்கிணைப்பாளர் தமிழ் ஸ்டூடியோ அருண் அழைத்தபோது முதலில் தயக்கமாக இருந்தது. அதற்கு முன்னரே நான் திரைப்பட விழாக்களின் தேர்வு மற்றும் தொகுப்புக் குழுக்களில் இருந்திருந்தாலும் அதுபால்புதுமையினருக்கான திரைப்பட விழாக்களாகவே இருந்து இருக்கின்றன. பால்புதுமையினர் அல்லாதோர் பால்புதுமையினருக்காக ஏதாவது செய்தோம் என்று சொல்லிக்காட்டவே பால்புதுமையினரோடு பெரும்பாலான இடங்களில் இணைந்து வேலை செய்வது வழக்கமாகி வருகிறது. மேலும் அவர்களது இடங்களும் பால்புதுமையினர்இயல்பாக அணுக முடியாததாகவே இருக்கிறது. எனவே இம்மாதிரியான இடங்கள் எனக்கு அவ்வளவு விருப்பமானதாகஇருந்ததில்லை. நான் சென்று சேர வேண்டிய இடத்துக்கு செல்ல உதவாத ஒன்றின் பகுதியாக இருக்க வேண்டுமாஎன்கிற கேள்வி எனக்கு எப்போதும் இருக்கிறது.

IFFC 2018-ல் தேர்வு செய்யப்பட்ட பால்புதுமையினர் திரைப்படங்களில் எனக்கு மாற்றுக்கருத்துகள் உண்டு. பால்புதுமையினர் அல்லாதவர்கள் பால்புதுமையினருக்கான முடிவுகள் எடுப்பதிலும் எனக்கு மாற்றுக் கருத்துகள்உண்டு. பால்புதுமையினருக்கு ஆதரவானவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் கலை மற்றும் இலக்கியம் சார்ந்தமுற்போக்காளர்கள் அவர்களுடைய படைப்புகளில் பால்புதுமையினர் சார்ந்த விடயத்தை சேர்க்கின்றனர். இப்படி செய்யும் போது யாருக்காக அதைச் செய்கிறார்கள் என்கிற கேள்வியும் எழுகிறது.

சிறுவனாக இருக்கும் போது எந்த இடத்திலாவது பால்புதுமையினருடன் தொடர்புடைய சிறு விஷயங்கள் நடப்பதுகூட எனக்கு மகிழ்ச்சியே அளித்திருக்கிறது, என்னைப் போல் மற்றவர்கள் இருக்கிறார்கள் என்ற ஆறுதல் எனக்குவருவதுண்டு. அதே போல் சென்னையில் நடக்கும் திரைப்பட விழாக்கள் பால்புதுமையினர் சார்ந்த திரைப்படங்களைத்திரையிடுவது கூட எனக்கு ஒரு பெரிய விஷயமாகவே இருந்திருக்கிறது. நான் தனியாக இல்லாதது போலவும், சேர்த்துக் கொள்ளப்பட்டது போலவும் உணர்ந்திருக்கிறேன். ஆனால் அந்த நிகழ்வுகள் பால்புதுமையினர் இயக்கம் அல்லது போரட்டங்கள் சார்ந்து பெரிய உரையாடல்கள் எதையும் ஏற்படுத்தியதில்லை.

IFFC 2019-ன் பால்புதுமையினருக்கான பிரிவான குயர் லென்ஸின் (Queer Lens) படங்களைத் தேர்வு செய்வதிலும், தொகுப்பதிலும் முழுக்கட்டுப்பாட்டை நான் எடுத்துக்கொள்வதன் பேரிலேயே நான் இந்நிகழ்வை ஒப்புக்கொண்டேன். இதன் மூலம்பால்புதுமையினர் அல்லாதோருக்கு மத்தியில் பால்புதுமையினருக்கான இடத்தை பெறமுடிகிறது. தொடக்கம் முதல்முடிவு வரை எந்த இடமாக இருந்தாலும் முடிவு எடுப்பதில் பால்புதுமையினரும் இருக்க வேண்டும் என்பதே எனதுநோக்கமாக இருக்கிறது. இதன் மூலம் அந்த இடத்தை பால்புதுமையினருக்கான இடமாகவும் உணர வைக்க முடியும்.

எனக்கு கொடுக்கப்பட்ட குறைவான நேரத்தில் தேர்ந்தெடுத்து IFFC 2019ல் திரையிடப்படும் படங்கள் ஒருஉரையாடலை உருவாக்கும் என நம்புகிறேன். அதே போல் IFFC பால்புதுமையினர் சுலபமாக அணுக முடியும்இடமாகவும் எதிர்காலத்தில் மாரும் என நம்புகிறேன்.

சென்னை சுயாதீனத் திரைப்பட விழா 2019இன் குயர் லென்ஸ் பகுதிக்கான திரைப்படங்களை வழங்குவதில் பெருமை கொள்கிறேன்.

குறும்படம்: ஹாப்பி பர்த்டே, மார்ஷா!
இயக்குனர்கள்: டூர்மலின் கோஸட் மற்றும் ஷாஷா வொட்சல்
14:23 நிமிடம, ஆங்கிலம், 2018, அமெரிக்க

ஸ்டோன்வால் இன்னில் 1969ம் ஆண்டு காவலர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் மார்ஷா ஜான்சன் எனும் கறுப்பினத் திருநங்கையின் பங்களிப்பை இப்படம் பதிவு செய்கிறது. ஸ்டோன்வால் இன் கலவரம் ‘ஓர்பாலீர்ப்பு கொண்ட ஆண்கள்’ போராட்ட வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மார்ஷா ஜான்சன் திருநங்கை களப்பணியாளர் மற்றும் பன்முக திறமையாளர் ஆவார். ஆவணக்காப்பகம் மூலமாக சேகரிக்கப்பட்ட காட்சிக்கோப்புகளுடன் சில சம்பவ மறுஉருவாக்க காட்சிகளும் சேர்க்கப்பட்டு இப்படம் இயக்கப் பட்டிருக்கிறது.

குறும்படம்: சிஸக்
இயக்குனர்: பரஸ் அரிப் அன்சாரி
15:36 நிமிடம், மௌனப்படம், 2017, இந்தியா

சிஸக் — இக்கதை சுய வாழ்க்கையில் நடப்பதற்கான நம்பகத் தன்மையோடு இருப்பதோடு, தனி மனிதனுக்கு தனிப்பட்ட நிலையில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை நிச்சயமாக உண்டு பண்ணும். பேசப்படாத, சொல்லப்படாத மற்றும் அனைவருக்கும் சமமான காதலை நுணுக்கங்களோடு மனிதம் மாறது படைத்திருக்கிறார்கள்.

ஆவணப்படம்: ஜரா நசர் உட்டா கே தேக்கோ
இயக்குனர்: அனிந்த்யா ஷங்கர் தாஸ்
24:00 நிமிடம், 2018, பல மொழி, இந்தியா
இந்த ஆவணப்படம் நகர்புற சூழலில் வாழும் பால்புதுமையினரின் (Queer) பாலியல் தேவைகளுக்கான தேடலைப் பதிவு செய்கிறது. மேலும் பன்முகத் தன்மை கொண்ட இந்திய நகர்புறத்தில் வாழ்பவர்களின் தேடலின் கூறுகளையும் சிக்கல்களையும் வெளிப்படுத்துகிறது.

முழுநீளப்படம்: ரஃபிக்கி
இயக்குனர்: வானூர் கஹயு
82:00 நிமிடம, ஆங்கிலம் மற்றும் ச்வஹிலி, 2018, கென்யா
ரஃபிக்கி — குடும்பம் மற்றும் சமூக அழுத்தங்களுக்கு மத்தியில், கேனா — ஜிக்கி எனும் இளம்பெண்களுக்கிடையில் ஏற்படும் நட்பையும் மென்மையான காதலையும் சொல்கின்ற கதை. இது பெண் இயக்கிய பெண் மையத் திரைப்படம், அதுமட்டுமின்றி இதில் பணியாற்றிய எழுத்தாளர்கள், ஒலியமைப்பாளர்கள், படக்குழுவினர் என அனைவரும் பெண்களே. இப்படத்தின் தாய் நாடான கென்யா-வில் இந்தப்படம் தடைச்செய்யப்பட்டது.

--

--

moulee
bumpahead.net

Diversity, Equity & Inclusion Strategist. Trainer and Coach. Co-Founder Queer Chennai Chronicles.