இந்த சர்க்கரை பொங்கல் தான் திருப்பத்தூர் ஸ்ரீ சக்தி சாய்பாபா ஆலயத்தில் ( வேலூர் மாவட்டம்) ஒவ்வொரு வருடம் தைத்திருநாள் அன்று வழங்கப்படும் தெய்வம்சமான பிரசாதம்.

ஒவ்வொருகும் இந்த பிரசாதம் தீபாரதனைக்கு ( காலை ஆரத்தி) பிறகு பரிமாறப்படும். நாம் அனைவரும் சாப்பிடும் சமயத்துல நமது நாவும், மனமும் இந்த பிரசாதம் அடுத்த வருடத்திற்கு தான் கிடைக்கும் என்று ஏங்கி கொண்டே சாப்பிடுவதை நம்மால் அறிய முடியும்.

தேவையான பொருட்கள்
புது பச்சை பொங்கல் அரிசி 1/2 கப்
பாசிப்பருப்பு 4 மேஜைக்கரண்டி
சமையல் நிறுவனம் கரும்பு சர்க்கரை 1/2 கப்
பசும்பால் 3 1/2 கப்
ஆவின் பால்கோவா 200 கிராம்
பசுநெய் 5 மேஜைக்கரண்டி
வெண்ணிலா எசன்ஸ் 4 துளிகள்
முந்திரி பருப்பு 15
கிஸ்மிஸ் பழம் 10
ஏலக்காய் 1

செய்முறை
1. வடச்சட்டியில் 1 மேஜைக்கரண்டி பசுநெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அதில் கிஸ்மிஸ் பழங்களை சேர்த்து நன்றாக வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.

2. ஒரு கெனமான அகன்ற பாத்திரத்தில் 3 1/2 டம்ளர் பாலை நன்றாக பொங்க வைத்து , அதை சிறுதீயில் வைத்து சுண்ட வைக்கவும்.

3. இப்பொழுது அந்த சுடுபாலில் ஆவின் பால்கோவாவை பிச்சு போட்டு நன்றாக கிளறவும். பால்கோவா முழுவதுமாக கரைந்து , பால் கலவை 2 1/2 டம்ளராக வந்த உடன் அடுப்பை அணைத்து விடவும்.

4. அரிசியை நன்றாக சுத்தமாக கழுவி வைக்க வேண்டும்.

5. இப்பொழுது பிரஷர் குக்கரில் 1/2 தேக்கரண்டி பசுநெய்யை விட்டு காய்ந்ததும் , அதில் பாசிபருப்பை போட்டு நன்றாக மணம் வீசும் வரை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

6. இப்பொழுது பிரஷர் குக்கரில் கழுவிய புதிய பச்சை அரிசியை போட்டு அதில் சுண்ட காய்ச்சி வைக்கப்பட்டுள்ள பால்கோவா பாலை ஊற்றி , குக்கரின் மூடியை மூடி குறைந்தபட்சம் 4 விசில் வரை விட்டுகோங்க.

7. இச்சமயத்துல நன்றாக சமையல் நிறுவன நாட்டு சர்க்கரையை வடச்சட்டியில் போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சிறுதீயில் கொதிக்க வைக்கவும். ஏலக்காயை தூள் செய்து சேர்த்து கொள்ளவும்.

8. சமையல் நிறுவன நாட்டு சர்க்கரை முழுவதுமாக கரைந்த உடன் அதை வடிக்கட்டிய உடன். பிரஷர் குக்கரின் ஆவி அடங்கியதும் , பிரஷர் குக்கரின் மூடியை திறந்து அந்த நாட்டு சர்க்கரை கரைசலை ஊற்றவும்.

9. பிறகு அடுப்பை சிறுதீயில் வைத்து நன்றாக கிளறவும். இந்த சமயத்துல வெண்ணிலா எசன்ஸ் துளிகளை சேர்த்து நன்றாக கிளறவும்.

10. இப்பொழுது பொன்னிறமாக வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு மற்றும் கிஸ்மிஸ் பழங்களை சேர்த்து , அதனுடன் மீதமுள்ள பசுநெய்யை சேர்த்து நன்றாக சூடு பறக்க கிளறவும்.

11. நன்றாக கலந்தவுடன் சூடு பறக்க பரிமாறவும்.

மேலும் இதுபோன்ற சமையல் குறிப்புகள் கீழ்காணும் லிங்க்கில்

https://t.me/CookWALL

One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.