*☦🅾7 கறி கூட்டு குழம்பு*

இந்த ஏழு கறி குழம்பு , திருவாதிரை மற்றும் புது பானை பொங்களுடன் இதை வைப்பார்கள். அந்த சமயத்தில் இதை கூட்டு கறி குழம்பு என்று தருமபுரி, கிருஷ்ணகிரி , சேலம் , வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மிகவும் பிரசித்தம்.

இதன் சுவையை நீங்கள் அனுபவித்து பார்த்தால் தான் தெரியும்.
தேவையான பொருட்கள்

வாழைக்காய் 1 ( பொடியாக நறுக்கியது)
வெள்ளை பூசணி 1/2 கப் ( பொடியாக நறுக்கியது)
கத்திரிக்காய் 4 ( பொடியாக நறுக்கியது)
உருளை கிழங்கு 2 ( பொடியாக நறுக்கியது )
பச்சை பட்டாணி 1/4 கப்
வள்ளி கிழங்கு 1/2 கப் ( பொடியாக நறுக்கியது)
சௌசௌ 1/2 கப் ( பொடியாக நறுக்கியது)
துவரம் பருப்பு 1/4 கப்
கடலைப்பருப்பு 3 மேஜைக்கரண்டி
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
சாம்பார் தூள் 1 தேக்கரண்டி
வரமிளகாய் தூள் 1 தேக்கரண்டி
புளி 1 எலுமிச்சை பழ அளவு
மரசெக்கு கடலெண்ணய் 2 மேஜைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
கடுகு 1/2 தேக்கரண்டி
கறிவேப்பில்ல 2 கொத்து
கொத்தமல்லி இலைகள் 1 கைப்பிடி
சின்ன வெங்காயம் 2 ( பொடியாக நறுக்கியது)
பூண்டு பற்கள் 2 ( பொடியாக நறுக்கியது)
வரமிளகாய் 1
தேங்காய் பால் 1 கப்

மசாலா அரைக்க
வரமிளகாய் 6
கொத்தமல்லி விதை 1 மேஜைக்கரண்டி
கடலை பருப்பு 1/2 மேஜைக்கரண்டி
வெந்தயம் 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் 1 சிட்டிகை
முந்திரி பருப்பு 10
சின்ன வெங்காயம் 1/2 கப் ( பொடியாக நறுக்கியது)
பூண்டு பற்கள் 6

செய்முறை

1. ஒரு வடசட்டியில் எண்ணெய் விடாமல் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வறுத்து , பின்பு மிக்ஸியில் போட்டு நன்றாக நைசாக விழுதாக அரைத்து கொள்ளவும்.

2. இப்பொழுது பிரஷர் குக்கரில் துவரம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து அதனுடன் மஞ்சள்தூள் மற்றும் தண்ணீர் ஊற்றி நல்ல குழைய வேக வைத்து கொள்ளவும்.

3. பிறகு அனைத்து பொடியாக நறுக்கிய காய்கறிகளை தண்ணீரில் நன்கு அலசி , தண்ணீர்ல் நன்றாக வேகவைத்து கொள்ளவும்.

4. இப்பொழுது வேகவைத்துள்ள காய்கறிகளை , பிரஷர் குக்கரில் உள்ள வேகவைத்து மசித்து வைத்துள்ள பருப்பு கலவையில் சேர்த்து கொள்ளவும்.

5. அதில் புளியை சுடு தண்ணீரில் ஊற வைத்து , பின் நன்றாக பிசிறி புளி கரைசலை எடுத்து கொள்ளவும். அந்த புளி கரைசலை பிரஷர் குக்கரில் உள்ள பருப்பு கலவையில் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

6. இப்பொழுது அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்துகோங்க , பின்பு அதில் சாம்பார் தூள் மற்றும் வரமிளகாய் தூள் சேர்த்து நன்றாக சிறுதீயில் கொதிக்க வைக்கவும்.

7. இப்பொழுது அதில் 1 கப் தேங்காய் பால் சேர்த்து மற்றும் தேவையான அளவு உப்புத்தூள் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்கவும்.

7. இப்பொழுது ஒரு வடச்சட்டியில் மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு போட்டு வெடிக்க ஆரம்பித்ததும் , அதில் கறிவேப்பில்லை சேர்த்து நன்றாக வதக்கவும்.

8. பிறகு அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் , வரமிளகாய்யை கிள்ளி மற்றும் பூண்டு பற்களையும் சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் பெருங்காய தூளை சேர்த்து வதக்கி பருப்பு குழம்பு கலவையில் கொட்டி கிளறி இறக்கவும்.

மேலும் இதுபோன்ற சமையல் குறிப்புகள் , கீழ்காணும் லிங்க்கில் உள்ளது….

https://t.me/CookWALL

ChennaiPALS™

Chennai Pure Air Lovers Society™ — Lets Make Chennai Green Again™

Balajee S Gunasekaran

Written by

ChennaiPALS™

Chennai Pure Air Lovers Society™ — Lets Make Chennai Green Again™

Welcome to a place where words matter. On Medium, smart voices and original ideas take center stage - with no ads in sight. Watch
Follow all the topics you care about, and we’ll deliver the best stories for you to your homepage and inbox. Explore
Get unlimited access to the best stories on Medium — and support writers while you’re at it. Just $5/month. Upgrade