Telegram Vs. WhatsApp : What You Need To Know...???

Telegram Vs. Whatsapp : Why Use Telegram instead of WhatsApp...?

A detailed comparison of these two hottest apps in the market right now!

Whatsapp செயலி குறித்த அறிமுகம் தேவையில்லை. Instant Messaging சேவையில் அதிக பயனாளர்களை (1 Billion Monthly Active Users) கொண்டு இவ்வகையில் முதல் இடத்தை தக்கவைத்து கொண்டிருக்கிறது. ஆனால் அந்த செயலிக்கு ஒரு போட்டி / மாற்று உண்டு என்றால் அது நிச்சயம் Telegram செயலிதான்…

என்ன ??? இத்தனை நாள் பயன்படுத்திய whatsapp ஐ விட்டுவிட்டு புதிய செயலியை பயன்படுத்த வேண்டுமா??? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.. whatsapp ல் உள்ள குறைகளையும் , telegram ல் உள்ள நிறைகளையும் நீங்களே தெரிந்துகொண்டு பின் முடிவு எடுங்கள்…. நிச்சயம் telegram க்கு நீங்களும் மாறிவிடுவீர்கள் , மற்றவர்களையும் மாற சொல்லுவீர்கள்…. whatsapp ம் நமக்கு ஒரு காலத்தில் புதிதாக அறிமுகம் ஆன ஒரு செயலி தான் ….

Telegram மும், Whatsapp பும் சேவையிலும், தோற்றத்திலும் ஒன்றுபோல் காட்சியளித்தாலும், அதன் பயனம்சங்கள் Whatsapp ஐ கருத்துகையில் பன்மடங்கு அதிகம். அதன் காரணமாகவோ என்னவோ, 2009 ல் துவங்கிய Whatsapp சேவையின் வளர்ச்சி விகிதத்தை காட்டிலும் 2013 ல் துவங்கிய Telegram செயலியின் வளர்ச்சி விகிதம் உச்சத்தை தொடுகிறது…

வாருங்கள் நேரத்தை கடத்தாமல் இரண்டு செயலிகளுக்கும் உண்டான பயனாம்ச வித்யாசம் குறித்து விரிவாக பார்ப்போம்…

பின்குறிப்பு : இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்ட லிங்க்குகளை telegram messenger app ஐ உங்கள் மொபைலில் நிறுவிய பிறகு கிளிக் செய்தால் நேரடியாக அந்தந்த குழுவிற்கு எடுத்து செல்லும்… இணைந்து கொள்ளுங்கள்.

Telegram Messenger — What’s Unique:

Whatsapp ஐ கருதுகையில் எண்ணற்ற வசதிகள் Telegram-ல் உண்டு.. அவற்றுள் Telegram செயலிக்கென்றே உள்ள தனிச்சிறப்பு வாய்ந்த வசதிகளை இந்த பதிவில் பார்ப்போம்...

1. Cloud Sync., Cross-Platform and Multi-Device Enabled:

Telegram செயலியானது முற்றிலும் மேகக்கணினி (Cloud Computing) முறையில் இயங்கும் தன்மையுடையது. ஆகையால் ஒரு telegram account-ஐ வைத்து ஒரே நேரத்தில் Google Android, Apple iOS, Windows Mobile OS, Google Chrome OS, Windows, Linux, மற்றும் Web Version உள்ளிட்ட வெவ்வேறு இயங்குதளத்திலும், Desktop, Laptop, Smartphone, Tablet உள்ளிட்ட வெவ்வேறு சாதனத்திலும் உபயோகிக்க முடியும்.

இதன் மூலம் ஒரு device ல் பதிவு செய்ததை வேறு ஒரு device ல் edit செய்துகொள்ளலாம். வீட்டில் tablet கருவியில் தொடர்ந்த ஒரு பதிவை, பயணத்தின் போது மொபைல் போனில் தொடர்ந்து, பின் அலுவலகம் சென்றடைந்ததும், கணினியில் அந்த பதிவை தட்டச்சி செய்து முடிக்கலாம். அனைத்தும் ஒரே டெலெக்ராம் account இன் வாயிலாக, எந்த கருவியிலும் logout ஆகாமல்... நினைத்து பாருங்கள், எத்தகைய உயரிய வசதியென்று...

ஸ்மார்ட்போனில் ஒரு பதிவை தட்டச்சி செய்துகொண்டிருக்கும்போது பேட்டரி சார்ஜ் தீர்ந்து விட்டால், உங்கள் tablet கருவியில், அல்லது கணினியில் அந்த பதிவை விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடரலாம்.. மறுமுறை முதலிலிருந்து தட்டச்சி செய்யவேண்டிய அவசியமில்லை…

மேலும் இந்த வசதியினால் உங்களுடைய அனைத்து chat பதிவுகளும் மொபைலில் local storage ஆக save ஆகாமல், அனைத்தும் cloud storage ல் சேமிக்கப்படுவதால், உங்களுடைய முக்கிய பதிவுகள் அனைத்தும் அழியாமல் எத்தனை ஆண்டு வேண்டுமானாலும் பாதுகாப்பாக இருக்கும். Telegram ல் இயல்பாகவே Complete On-Line Backup வசதி உண்டு. Telegram செயலியின் உருவாக்கமே / இயக்கமே மேகக்கணினியை சார்ந்து இருப்பதால், இயற்கையாகவே அனைத்துப்பதிவுகளும் (Secret Chat தவிர்த்து) பாதுகாப்பான சர்வர்களில் backup ஆகின்றன. Whatsapp-ல் உள்ளது போல் பதிவுகளை backup செய்வதற்கு Google Cloud account ஐ integrate செய்யவேண்டிய அவசியமில்லை. உங்கள் மொபைல் internal memory மற்றும் SD கார்டு மெமரியையும் Whatsapp-ஐ போன்று வீணாக்குவதில்லை. Whatsapp ல் அனைத்துமே local storage என்பதால், மொபைல் போனை format செய்தாலோ , மொபைல் தொலைந்து போகும் சூழல் ஏற்பட்டாலோ, பதிவுகள் அனைத்தும் திரும்ப பெற முடியாது... Google cloud மூலம் cloud ல் சேமிப்பது போன்ற மாயையை whatsapp ஏற்படுத்தினாலும், அது 3-rd party service integration முறையில் இருக்கிறதே தவிர, Telegram-ன் சொந்த cloud sync கட்டமைப்பிற்கு ஈடாகாது... .

உதாரணத்திற்கு: Whatsapp ல் web version பயன்படுத்த, நீங்கள் இன்டர்நெட் பிரவுசரில் Whatsapp-ஐ ஓபன் செய்து, அதில் தெரியும் QR Code ஸ்கேன் செய்து, பின் அது இயங்க, உங்கள் மொபைல் போனிலும் Whatsapp செயலி online ல் இயங்கிக்கொண்டிருக்க வேண்டும். அதுவும் சரியான, முழுமையான network இணைப்பு, இன்டர்நெட் இணைப்பு இல்லையென்றால், இந்த Whatsapp Web Version பயன்படுத்துவது மிகவும் சிரமம். Retry, Retry என்று வெறுப்பேத்தும்…

அந்தமாதிரி இம்சைகளே Telegram App ல் கிடையாது. போனே இல்லாமல், அல்லது போனில் Telegram app ஐ நிறுவாமலும் Telegram Web Version ஐ பயன்படுத்தலாம்.

2. Complete Security, Secret Chats and Custom Privacy Options:

Security, Encryption, Privacy ஆகிய இந்த வார்த்தைகள் இந்த வருட துவக்க காலத்திலிருந்தே அதிகமாக பேசப்பட்டது. அதற்கு காரணம் சமீபத்திய Whatsapp செயலியின் update-ல் வெளியிட்ட பிரைவசி பாலிசி தான். அதில் குறிப்பிட்டதாவது, Whatsapp செயலியையும் முகநூலையும் (Facebook) ஒன்றிணைக்கப்போவதாகவும், இரண்டு applicationகளும் பயனாளர் தகவல்களை பகிர்ந்துகொள்ளும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

இதை பல நாடுகளை சார்ந்த அனைத்து தரப்பு மக்களும் எதிர்த்தனர். Facebook நிறுவனம் Whatsapp நிறுவனத்தை கைப்பற்றியது முதல் இதுபோன்ற இணைப்பு நேரும் என்று பலர் கருதினாலும், Facebook நிறுவனம் அதை மறுத்துவந்த நிலையில், இதுபோன்ற அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த இணைப்பை ஏற்படுத்துவதில் எதிர்ப்பு இருப்பினும் Facebook அதனை கண்டுகொள்ளாததால், பலரும் Whatapp செயலி போன்ற மாற்று செயலி தேடுகையில், Telegram செயலியே சிறந்த தேர்வாக அமைந்தது. அதற்கு காரணம் Telegram செயலியின் பாதுகாப்பு, நம்பகத்தன்மை, எண்ணற்ற வசதிகள் முதலியவை. அதனை தொடர்ந்து Telegram செயலியின் பயனாளர் விகிதம் தொடர்ந்து ஏற்றுமுகமாகவே அமைந்துள்ளது.

Telegram செயலியில் உள்ள பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அமைப்புகள் குறித்து பார்ப்போம்: (Privacy and Security Options)

___________________________________________________________________

01. Hide Last Seen for Particular or Selected contacts

Whatsapp ல் Last Seen status ஐ Everyone, My Contacts, Nobody என்ற மூன்று optionகள் மட்டுமே இருக்கும். இதன் மூலம் Last Seen ஐ அனைவரும் பார்ப்பது, நமது மொபைலில் Contacts save செய்த நபர்கள் மட்டும் பார்ப்பது, அல்லது யாருமே பார்க்காதபடி set செய்வது. அதுதான் முடியும். ஆனால் Telegram ல் நாம் Everybody என்று set செய்தாலும் குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பார்க்காதபடி set செய்யலாம். Nobody என்று set செய்தாலும், குறிப்பிட்ட நபர்கள் மட்டும் நமது Last Seen ஐ பார்க்கும்படி அமைக்கலாம்.

02. Avoid others adding to Groups without permissions

நம்மை பலமுறை நம் சொந்தங்களோ , நண்பர்களோ நாம் விரும்பாத பல whatsapp குழுக்களில் இணைப்பதுண்டு.. பின் நாம் அதிலிருந்து விலகினாலும் நம்மை மீண்டும் மீண்டும் பல குழுக்களில் இணைத்து அன்புத்தொல்லை செய்வர்.. இது போன்று Whatsapp ல் தடுப்பதற்கு, அந்த நபரையே Block செய்ய வேண்டும். ஆனால் Telegram ல் நம்மை யார் மற்ற குழுக்களில் இணைக்கலாம் வேண்டாம் என்று set செய்து வைக்கலாம். எந்த நபர்களையும் பகைத்துக்கொள்ளாமல். :-)

03. End to End Encrypted Secret Chats

Google Allo வில் incognito chat என்ற option இருப்பதுபோல், Telegram-மிலும் Secret Chat என்ற வசதி உள்ளது. அதன் மூலம், நாம் எந்த ஒரு தனி நபரிடமும் உரையாடுவதை, எந்த சர்வரிலும் சேமிக்காது, யாரும் இடைமறித்து தகவல் திருடாதவாறு, பாதுகாப்பான முறையில் தகவல் பரிமாறலாம். நாம் தகவல் அனுப்பும் கருவியிலும் , தகவல் பெறும் நபரின் கருவியிலும் மட்டுமே அந்த தகவல் இருக்கும். வேறெங்கும் அந்த தகவல் சேமிக்கப்படாது. கூடுதல் வசதி என்னவென்றால், இந்த secret chat வசதி மூலம் நாம் அனுப்பும் தகவலை, நாம் யாருக்கு அனுப்பினோமா அவரால் கூட அதை மற்றவருக்கு forward செய்வதோ, Screenshot எடுப்பதோ முடியாது. அப்படி அவர் screenshot எடுக்க முற்பட்டால் Telegram நமக்கு அந்த தகவலை உடனே தெரிவிக்கும். எந்த அளவிற்கு பாதுகாப்பு பாருங்கள்…!

Whatsapp ல் இதுபோன்று எந்த வசதியும் இல்லை. அவர்கள் அனைத்து தகவலுக்கும் End to End Encryption உள்ளது என்கிறார்கள், பின் எப்படி Government உளவுத்துறை , நமது தகவல்களை படிக்கிறது, தவறான செய்தி பதிந்தால் கைது செய்கிறது என்பது தெரியவில்லை. Whatsapp ன் தகவல் பரிமாற்ற பாதுகாப்பை, இதை கேள்விப்பட்டும் நாம் நம்புகிறோம் என்பது தான் வியப்பின் உச்சம். :-)

04. Timed Self-Destructed Secret Message

இந்த வசதி மூலம், நாம் ஒருவருக்கு அனுப்பும் தகவல் நாம் செட் செய்த நேரத்தில் தானாக அழியும்படி அனுப்பலாம். உதாரணமாக, திருமணத்திற்காக வரன் தேடும் பையன் வீட்டுக்காரங்களிடம், பெண் வீட்டார் பெண்ணின் புகைப்படத்தை அவர்கள் குறிப்பிட்ட நேரம் மட்டும் பார்க்கும்படி செட் செய்து அனுப்பினால், பெண்ணுடைய புகைப்படம் தவறானவர்கள் கைகளில் , தேவையில்லாமல் பகிரப்படுவதை தவிர்க்கலாம். இது உதாரணம் தான், பல வகையில் இந்த வசதி பலபேருக்கு உதவும்.

05. Two-Factor Authentication

2FA என்று சொல்லப்படுகிற இந்த வசதி, நீங்கள் ஜிமெயில் செயலியில் பார்த்திருப்பீர்கள். நான் ஏற்கனவே Telegram ஒரு Cloud Computing முறையில் இயங்கும் செயலி எனவும், பல கருவிகளில் (Smartphone, Tablet, Laptop என) ஒரே account பயன்படுத்தி, அனைத்திலும் ஒரே நேரத்தில் online ல் இருக்கலாம் என்றேன். அப்படி இருக்கும் போது, நாம் எந்தெந்த கருவிகளில் account ஐ பதிந்தோம் என்பதையும், நமக்கு தெரியாமல் யாரேனும் நமது account ஐ பயன்படுத்தாதவாறு பாதுகாக்கும் முறைதான் இது. இதை Enable செய்வது மூலம், வேறு ஒரு கருவியில் Telegram ல் நமது account ஐ பயன்படுத்த நேரிட்டால், வழக்கமான OTP message உடன் கூடுதலாக இன்னொரு Password-ம் பூர்த்தி செய்தால் தான் அந்த கருவியில் பயன்படுத்த இயலும். இது போன்றும் Whatsapp ல் கிடையாது.

06. In-Built Passcode Lock for App

இது இன்னொரு சூப்பரான பாதுகாப்பு அம்சம். நம் செல் போனை நாம் PIN no போட்டு பாதுகாப்பது போல் , இந்த Telegram செயலியை open செய்யும் போதும் PIN no கேட்கும்படி செட் செய்யலாம். இதனால், போனின் PIN no போட்டு ஒருவருக்கு போனை பயன்படுத்த குடுத்தாலும், அந்த நபர், நமது Telegram உரையாடல்களை பார்க்காதபடி தடுக்க முடியும். மேலும் குழந்தைகள் விளையாட்டாக மொபைலை பயன்படுத்தினாலும், அவர்கள் தெரியாமல், Telegram குரூப்பிலோ , வேறு நபர்களுக்கோ தேவையில்லாத மெசேஜ் களை அனுப்புவதை தடுக்கலாம். குழந்தைகள் போனை வைத்து விளையாடும்போது, whatsapp குழுக்களில் அவர்கள் தெரியாமல் போட்டோவோ , ஏதோ தட்டச்சி செய்து போடுவதை பார்த்திருக்கிறோம்… அது Telegram ல் தடுக்கலாம்.

07. Username Option — Thus Hiding Phone Number from Unknown persons

Telegram செயலியில் நமக்கென ஒரு நிரந்தர பெயரை பதிவு செய்துகொள்ளலாம். அதாவது Facebook ல் நம் account ற்கு , ஒரு நிரந்தர அடையாள பெயர் வைப்பதுபோல்..( https://www.facebook.com/BalajeeSGunasekaran ) மாதிரி… Telegramமிலும் , இதுபோன்று நிரந்தர Username செட் செய்துகொள்ளலாம். இதன் மூலம், உங்கள் மொபைல் எண்ணை மற்றவருடன் பகிராமல் உங்கள் Username ஐ ( https://telegram.me/BalajeeG ) குடுத்து மட்டும் chat செய்துகொள்ளலாம். இது பெண்களுக்கு மிகவும் பயனுள்ள பாதுகாப்பு வசதி.

எவரேனும் உங்களுக்கு Username பயன்படுத்தி தவறான மெசேஜ் அனுப்ப நேர்ந்தாலும், அவர்களை நிரந்தரமாக Block செய்துவிடலாம். அந்த நபரால் உங்களை தொடர்புகொள்ள இயலாது. ஏனென்றால், அவர்களால் உங்கள் மொபைல் எண்ணை பார்க்க இயலாது. ஆக, block செய்த பின் நம்பரை வைத்து call செய்வது, மிரட்டுவது போன்ற தொந்தரவுகள் கிடையாது.

08. Account Self-Destruction after particular time period

இந்த வசதி மூலம், உங்களுடைய Telegram account ஐ நீங்கள் குறிப்பிட்ட காலம் சில காரணங்களால் பயன்படுத்தாவிட்டால் தானாக account delete ஆகும்படி செட் செய்து கொள்ளலாம்.

09. Completely Open Privacy Policy

Whatsapp ல் உள்ளது போல் குளறுபடியான Privacy Policy இதில் கிடையாது. Whatsapp ஒரு Commercial செயலி, அவர்கள் பணம் சம்பாதிப்பதற்கு ஏற்றவகையில் policy ஐ மாற்றிக்கொண்டே இருப்பர். நாம் facebook ன் privacy policy பற்றி பல ஊடகங்களில் நாறடித்தது அனைவருக்கும் தெரியும். Whatsapp ம் அவர்களுடையதுதானே.. Telegram ஒரு open source செயலி என்பதால், அந்த மாதிரி இல்லாமல், திறந்தநிலை பாலிசி யாகவே உள்ளது.

Security and Privacy options பற்றி பார்த்தோம். Telegram ன் அடுத்த தன்னிச்சையான வசதிகளை பார்ப்போம்.

03. Groups, Super Groups and Channels:

Whatsapp ல் Groups பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். குழு போன்று அமைக்கும் வசதி. Whatsapp ல் 256 நபர்கள் மட்டுமே ஒரு குழுவில் இருக்கலாம். Broadcast என்றும் கேள்விப்பட்டிருக்கிறோம். Whatsapp ல் Broadcast மூலம் நமது Contacts ல் உள்ளவர்களுக்கு மட்டும் எத்தனை நபர்களுக்கு வேண்டுமானாலும் மெசேஜ் அனுப்பலாம்.

ஆனால், இந்த வசதிகளை கொஞ்சம் வித்யாசமாக, Telegram வழங்குகிறது.

Telegram ல் குழுக்களை Groups மற்றும் Super Groups என்று இரண்டு வகையாக அமைக்கலாம். இது அல்லாமல், Channels என்ற வசதியும் உண்டு. அவற்றை பற்றி பார்ப்போம்.

Groups:

சிறிய குழுவாக இயக்குபவர்களுக்கு என்று இந்த வகை. இந்த குரூப்பில் 200 நபர்கள் வரை அதிகபட்சம் உறுப்பினர்களாக இருக்கலாம். இந்த குழுக்களை Private ஆக பயன்படுத்துபவர்களுக்கு என்ற நோக்கில் உள்ளது. அதாவது, பள்ளி தோழர்கள், நெருங்கிய உறவினர்கள், அலுவலக நண்பர்கள் என்று சிறிய, 200 நபர்களுக்கு கீழ் இணைத்து தகவல் பகிர்பவர்களுக்கு பொருந்தும். இந்த குழுவிற்கு என நிரந்தர Username அமைக்க முடியாது. Invite Link மூலம் மட்டுமே நபர்களை இணைய சொல்லலாம். அல்லது நாமாக குழுவில் நபர்களை இணைக்கலாம்.

Super Groups:

இந்த வகை குழுக்கள், 5000 நபர்கள் வரை அதிகபட்சமாக உறுப்பினர்களை கொண்டிருக்கலாம். இந்த குழுவிற்கு என்று ஒரு நிரந்தர Username அமைக்க முடியும். அதாவது, http://telegram.me/ShareWALL (இதில் @ShareWALL என்பது குழுவின் நிரந்தர பெயர்) என்று அமைக்கலாம். இதை Public ஆக share செய்வதன் மூலம் யார் வேண்டுமானாலும் இணையலாம் என்ற நோக்கில் குழு துவங்குபவர்களுக்கு என்று ப்ரத்யேகமாக உள்ள வசதி. மேலும் இவ்வகை குழுக்களில், நாம் ஒரு பதிவை தவறுதலாக பதிந்துவிட்டால், அதை நம் போனில் delete செய்தால் அனைத்து உறுப்பினர்களுக்கும் delete ஆகும் வசதி உள்ளது.

நாம் Whatsapp ல் பலர், ஒரு குழுவை ஆரம்பித்து, 256 நபர்கள் என குழு நபர் வரைமுறை முழுவதும் நிரம்பி, மற்றொரு குழு ஆரம்பித்து, அதற்கு குரூப்பெயர்-2 ,குரூப்பெயர்-3 என்று ஒன்றன்பின் ஒன்றாக துவங்கி , ஒரே பதிவை அனைத்து குழுக்களிலும் பதிவதை பார்த்திருக்கிறோம்…. இந்த மாதிரி தேவையில்லாத data waste ஐ 5000 நபர் வரை வைத்து குழு துவங்கும் வசதி telegram ல் நிச்சயம் பயன் தரும்.

Channels:

Whatsapp ல் Broadcast என்ற வசதி மூலம், நம் போனில் உள்ள contact களுக்கு அனைவருக்கும் மட்டுமே ஒரே நேரத்தில் மெசேஜ் அனுப்பமுடியும்.

Telegram ல் உள்ள இந்த Channel வசதியும் தகவல்களை Broadcast செய்வதற்காக உள்ளதுதான். ஆனால், Telegram Channel களில் (Unlimited) எண்ணற்ற நபர்களை இணைக்க முடியும். நிரந்தர பெயர் செட் செய்து கொள்ளமுடியும். Group லும் , Super Group லும் உறுப்பினர்களும் பதிவுகள் போடலாம். ஆனால், Channel ல் அதை create செய்தவர் மட்டுமே பதிவுகள் போட முடியும். உறுப்பினர்கள், பதிவுகளை பார்வையிட்டு, மற்ற குழுக்களில் வேண்டுமானால் Forward செய்யலாம்.

உதாரணமாக, இது ஒரு தொலைக்காட்சி சேனல் போன்றது தான். விருப்பப்பட்ட சேனலை வைத்தால், அவர்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சியினை மட்டுமே நாம் காண முடியும். நம்மால் டிவி யில் ஏதும் செய்ய முடியாது அல்லவா. இந்த வசதி மூலம், பொது குழுக்களான, தமிழ் மருத்துவம், சமையல் குறிப்புகள், சினிமா செய்திகள் என்று சன் டிவி , ராஜ் டிவி என்று சேனல்களுக்கு நிரந்தர பெயர் இருப்பதுபோல் நிரந்தர பெயர் வைத்து சேனல்களை அமைக்கலாம். Business பயன்பாட்டிற்கு கூட இந்த வகை சேனல்கள் பெரிதும் பயன்படும்.

04. Rich Multimedia - Stickers, GIFs, Photo Editor, Audio, Video Player

Telegram ல் மேம்பட்ட பல்லூடகம் (Rich Multimedia) support இருக்கிறது. Hike Messenger ல் உள்ளதுபோல் Stickers பயன்படுத்த முடியும். மேலும் GIF அனிமேஷன்கள், Smiley கள் , Telegram ன் உள்ளேயே இயங்கும் Internal Audio, Video player கள், GIF அனிமேஷன் உருவாக்கும் creator, HD விடியோவை சிறிய file size ஆக சுருக்கும் வீடியோ compressor கள், File Compression ஆகாத,image clarity குறையாத Photo பதிவேற்றங்கள், Mask கள், Photo Editor கள் என இதன் மல்டிமீடியா வசதிகள் நீண்டு கொண்டே போகிறது.

இந்த மாதிரி வசதிகள் Whatsapp உட்பட எந்த தகவல் பகிரிகளிலும் கிடையாது.

05. Rich Message Communication — BOTs, Message Editing / Revoking

Telegram ல் மட்டுமே முதன் முதலில் BOT Support எனப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) உதவியில் செயலியில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளும் அமைப்பு இருந்தது. பின்னர் தான் இவ்வசதி Facebook Messenger, Google Allo, Wine Private Messenger போன்ற செயலிகளில் வர தொடங்கியது. மேலும் பல வசதிகளும் (Invite Link, Forward Arrow, 2FA, Message Editing / Revoking, BOT Support போன்றவை) , Telegram செயலியில் இருந்து copy அடித்தே பல செயலிகள் அந்த வசதியினை தங்கள் செயலிகளில் ஏற்படுத்தி இருக்கிறது.

Telegram ல் BOT Support இருப்பது போல் மேலே சொன்ன வேறு எந்த செயலியிலும் அவ்ளோ சிறப்பாக இருப்பதில்லை. எல்லாவற்றிற்கும் ஒரு BOT உள்ளது Telegram ல். ஆடியோ file ஐ தேட, வீடியோ file ஐ தேட , விக்கிபீடியா article தேட, குழுவை நிர்வகிக்க, youtube வீடீயோக்களை பதிவிறக்க, ஆங்கிலம் கற்றுக்கொள்ள, ஒரு மொழியிலிருந்து, இன்னோரு மொழியில் கோப்புகளை மொழிபெயர்க்க, எந்த நாட்டுடைய நேரம் மற்றும் Weather Report பார்க்க, நாம் courier அனுப்பிய parcel ன் shipment track செய்ய என பல Value Added சேவைகள் உண்டு. BOT களுக்கென்றே வெப்சைட் உள்ளது இந்த லிங்க்கில் . (Whatsapp ல் BOT support வருவதற்கே பல காலம் ஆகும்.. ;-( )

அது போல், Telegram ல் எந்த ஒரு பதிவையும், Chat ஐ யும் அனுப்பிய பிறகு 48 மணி நேரம் வரை Edit செய்யும் வசதியும், பெறுபவர்கள் பார்க்கும் முன் Delete செய்யும் வசதியும் உள்ளது. இந்த வசதி இனிமே தான் Whatsapp ல் வரப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். :-(

6. Instant Views, HTML5 Games, Telegra.ph Publishing Platform, etc..

Telegram ன் வசதிகளை எழுதுவதற்கே கை வலிக்கிறது. வசதிகளை எப்போதும் பெருக்கிக்கொண்டே போகிறது இந்த Telegram செயலி. சமீபத்திய Update ல் Instant View, மற்றும் Telegra.ph என்னும் Publishing வசதிகளை அறிமுகப்படுத்தி அசத்தியது. இந்த வசதிகள் மூலம் website களை , telegram உள்ளேயே , browser உதவி இல்லாமல் , page load தாமதம் ஆகாமல் Instant ஆக Blog Article களை படித்து பார்க்க முடியும். News தயாரிப்பு நிறுவனங்களுக்கும், news களை படிக்கும் மக்களுக்கும் Telegra.ph என்னும் wordpress போன்ற blogging platform ஐ அறிமுகம் செய்திருக்கிறது. இது மாபெரும் வசதி.

மேலும் Telegram ன் உள்ளேயே Games விளையாடும் வசதியினையும் அறிமுகம் செய்து சிரியவர்களையும் அசத்தி இருக்கிறது.

7. File Sharing — Any Types, Any Formats and Any Size

Telegram ல் மட்டுமே எந்த வகை கோப்பாக இருந்தாலும் பகிரும் வசதி உண்டு. மேலும் 1.5 GB வரையிலான கோப்புகளை அனுப்பலாம். HD படங்களே பகிர முடியும்.

MP3, MP4, JPG, MOV, AVI, ZIP, RAR, DOC, XLS, PPT, PDF, என எந்த format ல் file கள் இருந்தாலும் support ஆகும்.

அதிலும் மற்ற செயலிகள் காட்டிலும் DATA optimization technique மூலம் Data செலவு பெரிதாக ஆகாமல் மேற்கூறிய பெருவாரியான வசதிகளையும் தருவதென்பது மற்ற செயலிகளால் முடியாத காரியம். Whatsapp மற்றும் Facebook செயலிகளை நீக்கினாலே நமது மொபைல்களில் 30% சதவிகிதம் Battery Charge நீடிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் Telegram இயங்குவதற்கு அதிக திறன்வாய்ந்த phone களோ, அதிக battery Chargeஜோ தேவையில்லை.

இப்படி பல வசதிகள் Telegram ல் இருப்பினும் சிலர் நீண்ட நாள் Whatsapp பயன்படுத்திவிட்டு, திடீரென Telegram செயலியில் மாறுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இது ஒரு adamant மற்றும் addicted behaviour என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.

Whatsapp ல் உள்ள Voice Calling, மற்றும் Video Calling வசதிகள் தான் உங்களை Telegram செயலிக்கு மாறுவதை தடுக்கிறது என்றால், Video மற்றும் Voice Calling வசதியை HD தரத்தில் Telegram செயலிஅடுத்த update ல் வழங்க இருக்கிறது. HD துல்லியதில் அழைப்புகளை மேற்கொள்ளலாம். Whatsapp ன் வீடியோ மற்றும் வாய்ஸ் அழைப்புகள் வசதி பல பேருக்கு சலிப்பை தந்ததே தவிர வசதியாக இருந்ததில்லை. விட்டு விட்டு கேட்கும் அழைப்புகள். நாம் பேசுவது நமக்கே கேட்கும் கொடுமைகள், வீடியோ அழைப்பை துவங்கிய உடனே போன் hang ஆகும் செயல் என வசதி என்ற பெயரில் நம் மொபைல் போனையும் ,data வையும் , நேரத்தையும் பதம் பார்த்ததே அதிகம்.

Whatsapp போல் Telegram ஒரு Commercial application இல்லாததால், விளம்பர செலவுகள் செய்வதில்லை. எங்களை போன்ற பயன்படுத்துவர்கள் வாயிலாகவே இந்த Telegram இவ்ளோ பயனாளர்களை கொண்டிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நீங்களும் சீக்கிரம் மாறிவிடுங்கள் மக்களே!.

புதிது புதிதாக வசதிகள் எங்கு கிடைக்கிறதோ பயன்படுத்தி பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். பழகிவிட்டோம் என்பதற்காக பழைய மாவையே அரைத்துக் கொண்டிருக்காதீர்கள் . மாற்றம் ஒன்றே நிரந்தரம். :-)

இந்த Telegram App ஐ Android போனில் Play Store றிலும், Apple iOS போனில் App Store றிலும் search option சென்று Telegram என்று தட்டச்சி செய்தால் கிடைக்கும் பக்கத்தில், பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். நிறுவும் வழிமுறைக்கு கீழே வீடியோ வை காண்க …!

தொடர்ந்து இது போன்ற Technology சம்பந்தப்பட்ட பதிவுகள் பெறுவதற்கு கீழ்காணும் லிங்க்கை அழுத்தி Subscribe செய்துகொள்ளுங்கள்..
— — — -> @TechWALL