வீடுகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபடவே வருமான வரித்துறை — ராஜேஷ் லக்கானி தகவல்

சென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானி, வீடுகளில் தேடுதல் வேட்டை நடத்துவதற்காகவே வருமான வரித்துறை ஈடுபடுத்தப்படுவதாக தெரிவித்தார். பறக்கும் படை வீடுகளில் நுழைந்து சோதனை நடத்த முடியாது என்பதால் வருமான வரித்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்படுவதாக குறிப்பிட்டார். விமானங்கள் மூலம் பணம் எடுத்துச் செல்வதை தடுக்கவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார். இதற்காக விமான நிலையம், துறைமுகங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறினார். முன் எப்போதும் இல்லாத வகையில் கண்காணிப்பு பணியில் பல்வேறு துறையினரை தேர்தல் ஆணையம் ஈடுபடுத்தியுள்ளதா தெரிவித்தார். வரும் 29ம் தேதி 122 பொதுப் பார்வையாளர்கள் தமிழகம் வர உள்ளதாகவும் கூறினார். ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தான் பொதுப் பார்வையாளர் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறினார். பணப்பட்டுவாடா குறித்து சந்தேகம் ஏற்பட்டால் பொது மக்கள் உடனே புகார் தெரிவிக்கலாம் என்ற அவர், கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளிக்கும் 2 நிமிடத்தில் பறக்கும் படைக்கு மற்றும் வருமான வரித்துறைக்கும் தகவல் சென்று விடும் என்றார்.

Read more tamil news on newshunt tamil.