சதுரங்கத்தில் பிழை

Venkada Ramanujam
hw2tamil
Published in
1 min readOct 11, 2019

சதுரங்க ராணி ராணியே அல்ல.

சதுரங்க விளையாட்டை அறியாதவர் யாரும் இல்லை. அதை விளையாட தெரியாதவரும் அறிந்து வைத்திருப்பார். 8x8 என்ற சதுர வரிசையில் 64 வெள்ளை மற்றும் கருப்பு நிற கட்டங்கள் கலந்து அமைக்கப்பட்ட அந்த களத்தில் வெள்ளை மற்றும் கருப்பு சேனைகளிடையேயான சாமர்த்திய நகர்வே இந்த சதுரங்கம்.

சேனைகளில் 8 சிப்பாய்கள், 2 யானைகள், 2 குதிரைகள், 2 மந்திரிகள், ஒரு ராஜா மற்றும் ஒரு ராணி என்று அமையப் பெற்றிருக்கும்.
ஆனால் யாரேனும் சிந்தித்ததுண்டா, எவ்வாறு ஒரு ராணி போரில் பங்கு கொள்ள இயலும் என்று? அதுவும் ராஜாவை விட ராணிக்கே ஒரு போரில் ஆதிக்கம் அதிகம். இது எவ்வாறு சாத்தியம்? ராணிய இருந்தாலே போதும் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகம் மற்றும் ராஜாவை காக்க ராணி ஓடோடி வந்துவிடும். எங்கோ இடிக்கிறதே.

இப்படி பட்ட ஒரு விளையாட்டில் இப்படியான ஒரு விசித்திர அமைப்பை யார் உருவாகியது? நிச்சயம் எங்கோ பிழை உள்ளது.

உங்களுக்கும் இது போன்ற சிந்தனை வந்ததுண்டா? எனில் நீங்களும் எனை போலத்தான்.

உங்களால் அந்த பிழையை என்ன என்று கண்டு பிடிக்க முடிந்ததா?

மேலும் போரில் பங்கு கொள்ளும் முக்கிய அம்சமான ஒருவர் இந்த சதுரங்க விளையாட்டில் இருந்து மறைக்கப்படுள்ளார். அவர் யார்?

ராணியை தூக்கிவிட்டு அவரை வைத்தால் மட்டுமே இந்த சதுரங்கம் ஒரு உண்மையான போரின் ஒப்புமையாக எடுத்துக்கொள்ளப்படும்.

தளபதி

ஒரு படைத்தளபதியே ஒரு போருக்கு பிராதானம், அவரே அணைத்து சேனையையும் வழிநடத்தி காப்பார். மேலும் போரில் அவரின் ஆதிக்கமே அதிகம். ஏன், ராஜவைவிட ஒரு தளபதிக்கே போரில் செல்வாக்கு அதிகம். அவரின் சொல்லிருக்கே அனைத்து சேனையும் செவி மடுக்கும்.

ராஜாவின் அருகில் இருப்பதாலேயே அது ராணி என்று மருவி இருக்கலாம். நிச்சயம் ராணி என்று சொல்லப்படும் அந்த காய், ஒருபோதும் ராணியாக இருக்க முடியாது. அது தளபதி என்று பொருள் கொன்றிருக்க வேண்டும். வரலாற்றுப்பிழை போல், நிச்சயம் இது ஒரு விளையாட்டு பிழை என்றே கூறுவேன்.

நன்றி.

--

--