கல்லூரி பொழுதுகள்Add a photo caption

மீள்

நட்பு காலம்


வாழ்க்கையில சில பேர மட்டும் நம்மளால வெறுக்கவே முடியாது. ஒண்ணு அவுங்க இப்போ வரைக்கும் உங்க கூடவே இருக்கலாம்,அப்படி இருந்தாங்கன்னா உங்க வாழ்க்கை இன்னும் சந்தோசங்கள் நெறஞ்சதா இருக்கும்.இல்ல சில காலம் வரை உங்க கூட இருந்தவங்களா இருக்கலாம்.அவுங்கள நீங்க நினைக்கும் போது புன்னகையும் கண்ணீரும் சேர்ந்தே வரும்.

அவுங்க வேற யாரும் இல்லங்க.

உங்க நண்பர்கள் தான்.

இப்ப நீங்க எவ்ளோ தூரத்துல இருந்தாலும் உங்கள் இளமையின் பெரும்பகுதி தொலைவின்-நாட்களை நட்புடன் தான் கடந்திருப்பீர்கள். தற்போதைய காலநிலையில் உங்களின் நட்புக்குள் எவ்வளவோ இடைவெளிகள் இருக்கலாம்.

இருந்தாலும் இன்னும் சிலரது புன்னகைகள் உங்கள் மனதில்,இலையுதிர் கால மரங்களைப் போல நீங்கள் ஏதுமின்றி நிற்கும் பொழுதுகளில் சின்னதாய் தூவானமிடும் சாரலைப் போல உங்கள் மனதின் ஒரு சிறு ஓரத்தினை எப்போதும் ஈரமாக்கி நனைத்துக் கொண்டு தான் இருக்கும்.

இறுதி நாளின் பிரிவின் போது உதிர்ந்த கண்ணீரை துடைத்த கைகளின் விரல்களுக்கு தெரியும் உங்கள் கண்ணீரின் கனம் இன்னும்.

Email me when Its My Life publishes stories