டிராப் டெஸ்ட்

ஒரு ஆறு ஏழு வருஷ எக்ஸ்பீரியன்ஸ் சாப்வேர் என்ஜினியர் ஆவுரேஜா எத்தன போண் மாத்தியிப்பான்னு பாத்தா மூனு இல்ல நாலு இருக்கலாம். காலேஜ்ல சேர்ந்து கொஞச நாள்லயே சிலர் மொத போண் வாங்கியிருக்கலாம், இல்லன்னா ஃபைனல் இயர் ப்ராஜெக்ட் காசுல வாங்குனவங்க அதிகம். அப்பறம் வேலைக்கு சேர்ந்து சம்பளம் வந்த ஒடனே, இந்த ரோடென்ன வெல, எல்ஐசி பில்டிங் என்ன வெல, மெரினா பீச் என்ன வெலன்னு திமிரெடுத்து திரியும்போது, வெச்சிருக்கற போண வீட்டுல குடுத்துட்டு நாம வேற போண் வாங்கியிருப்போம்.

அப்பறம் ரண்டு மூணு வருஷம் கழிச்சு வேற கம்பெனி சிஃப்ட் ஆனவுடனே திடிர்னு மறுபடியம் பணபுழக்கம் அதிகமாகி இந்த தடவ மறுபடியும் மவுண்ட் ரோடென்ன வெலன்னு ஆரம்பிச்சு, பாகிஸ்தான் எவ்ளோன்னு கேளு மச்சான், வாங்கி போட்டா என்னைக்கு இருந்தாலும் ஒரு நாளைக்கு அமெரிக்காகிட்ட நல்ல வெளைக்கு வித்துறலாம்னு பேசிகிட்டே ஒரு போன் வாங்கியிருப்போம். இப்போ வீட்டுல இருந்த பழைய போன அம்மாவுக்குன்னு குடுத்துட்டு, நாம் வெச்சிருந்த போன அப்பாவுக்கு குடுத்துருப்போம்.

அப்பறம் ஆன்சைட்டு போய்ட்டு வரும்போது iPhone வாங்கிட்டு வந்தோம்னா கிட்டதட்ட பிறவிபயன் அடைஞ்ச மாதிரி வாழ்க்கையில ஒரு திருப்தி உண்டாயிடுது. அது Thinner, Faster, Biggerன்னு எல்லா adjectiveயும் சொல்லி Tim Cook அடுத்த iPhone ரிலிஸ் பண்ற‌ வரைக்கும்தான்கிறது நமக்கு தெரியறதில்ல.

இந்த கணக்குபடி பாத்தா, எல்லா வீட்டுலயும் கிட்ட தட்ட ரெண்டு இல்ல மூனூ போண் இருக்கும். வீட்டுல சின்ன பசங்க இருந்தாலே போண விடமாட்டாங்க. இப்பெல்லாம் கொழந்தைங்களுக்கு வெளையாட்டு பொருளே போண்தான். என்னதான் சின்ன கொழந்தையா இருந்தாலும் கரட்டா காஸ்லியானா போனே வேனும்னு அடம் புடிக்கும்.

டேய், பாப்பா சாப்பட மாட்டேங்குற அந்த போனை குடு, சாப்படத்துக்கு அப்பறம் வாங்கிகுவா.
அம்மா,அதுதான் உங்க‌ போண் இருக்குல்ல அத குடுங்க. இல்லனா அப்பா போனை குடுங்க.
டேய் நீதான் பாக்கறல்ல, அது வேண்டாங்கறா. உன் போனை குடு. iPhone இல்லாம அவ சாப்பட மாட்டாளா? நான் காலெஜ் ஃபைனல் இயர்லதான் போனையே மொத தடவ தொட்டு பாத்தேன். ஒழுங்கா நடக்க கூட தெரியல இவளுக்கு சப்படும்போது வெளையாட iPhone கேக்குதா? நாப்பதாயிரம் ஒரு செகண்ட்ல தூளாயிரரும். அதெல்லாம் தரமுடியாது. அவள மெரட்டி சாப்பாடு ஊட்டுங்க.
ஏன்டா, நீ காலேஜ்ல போய் வாங்குனா எம்புள்ளயும் அபப்டிதான் இருக்குமா? உனக்கு எம்புள்ள பசியவிட பணம் பெருசா போச்சான்னு இந்த அக்காங்க டெரர்ரா நம்மகிட்ட சன்டபோடுவாங்க.

கொழந்த சாப்பாடு சாப்படறதவிட உன் போண் உனக்கு முக்கியாபோச்சுன்னு நம்மள ஏதோ வில்லன் ரேஞ்சிக்கு பேச ஆரம்பிச்சுடுவாங்க. நாமலும் நம்ம இமேஜ காப்பதிக்க போணை குடுத்துட்டு Slip ல‌ Dravid நிக்கற மாதிரி புல் கான்சென்ரேஷ்னோட போனையே பாத்துகிட்டு இருப்போம்.
கொஞ்சம் கொஞ்சமா தட்டு காலியாக, நமக்கு எப்படா சாப்புட்டு முடிக்கும் டென்ஷனா காத்துகிட்டு இருப்போம்.
யாரோ கூப்பிடர‌ மாதிரி இருக்கேன்னு ஒரே ஒரு மைக்ரோ செகண்ட் தலைய திருப்பிட்டு பாக்கும்போது அங்க ஒரு iPhone drop Test நடந்து முடிஞ்சிருக்கும்.

One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.