நாகரீகம் அப்படிங்கற வார்த்தைய தமிழ் படுத்துனா டீசன்ட் அப்படின்னு வச்சுகலாம்.

நம்ம ஊருல செல்போன் இல்லாத ஆளே கெடையாது. அட நல்ல விஷயம்தான அப்படின்னு நெனைச்சாலும், இவிங்க பன்ற அழிச்சாட்டியம் தாங்க முடியறதில்லை. பக்கத்து ரூம்ல இருக்கறவனுக்கு போன் பன்றதெல்லாம் அக்சப்டபுள் லிமிட்குள்ள வருது, சரி ஓகேன்னு விட்டுடலாம்.

பஸ்ல பக்கத்து சீட்டுல உக்காந்து பேசுறவன் பேசுறது பஸ்சு ஃபுல்லா கேக்கும். அவன் பேசுறது கேட்டா கூடா பரவாயில்லை போனுக்கும் அந்த பக்கம் இருக்கறவன் பேசுறதே நாலு சீட்டுக்கு கேக்கும்.
அஞ்சு நிமிஷம் அவன் பேசி முடிக்கறதுக்குள்ள அவன் இராசி நட்சத்திரம் தவிற எல்லா டீடெயிலும் நமக்கு தெரிய ஆரம்பிச்சுடும்.
அப்பறம் உங்க வொய்ஃபா? ரொம்ப ஸ்ட்ரிக்ட் போல. எங்க வீட்டுலயும் அப்படிதான் சார். ஆபிஸ்விட்டு ஒரு மனி நேரம் லேட்டா போனபோதும் கண்ட படி திட்டுவா சார்னு, ஒய் பிள்ட் சேம் பிளட்னு அன்யோன்யம் ஆயிடுவாங்க. லேட்டா போன உன்னையெல்லாம் வீட்டுலயே சேக்க கூடாதுன்னு நமக்கு தோனும்.

சரி, பஸ்லதான் இப்படின்னா, நம்மாளு கோயில்ல வந்தும் இதையேதான் பன்றான். சாஸ்டாங்கமா விழுந்து சாமி கும்பிட்டுகிட்டு இருக்கும்போது திடீர்ன்னு போன் அடிச்சவொடனே அத அப்படியே படுத்துகிட்டே பேசுறான். அடேய் உன்னையெல்லாம் சாமி கண்ண குத்தாமாவிடாதுடான்னு தோனும்

அப்பறம் இந்த தியேட்டர்ல போன் பேசவனதான் மொதல்ல குண்டர் சட்டதுல போட சொல்லனும். (டெக்னிகலி Tamil Nadu Act 14 of 1982 படி சைபர் கிரைமெல்லாம் குண்டர் சட்டத்துல அரெஸ்ட் பண்னலாம், பெயில் கூட வரமுடியாது. அட அதாங்க பேஸ்புக்ல லைக் பன்றது, கமென்ட் போடறது இதெல்லாம் இதுல தான் வருது. ஸ்டேடஸ்க்கு 7 வருஷம், கமென்டுக்கு 4 வருஷ்ம் , லைக்குக்கு 2 வருஷ்ம், lol, smily இதெல்லாம் போட்டா எக்ஸ்டரா தலா ஒரு வருஷம் அப்படிங்கற நெலம கூட வரலாம். )

யாருக்கும் டீசன்சியே இல்ல, ஒரு பொது எடத்துல இப்படி சத்தம் போட்டா மத்தவங்களுக்கு தொந்தரவா இருக்கும்கற காமன்சென்ஸ் கூட இல்ல, ஊருக்கு வரதே கடுப்பா இருக்குன்னு வியாக்கானம் பேசினேன் என் அம்மாவிடம்.

உன்னய யாரு வர சொன்னா? அங்கயே இருக்க வேன்டியதான?
ஆமா, போனதடவ ஊருக்கு வந்தப்ப அந்த பிளைட்ல இருந்த ஏர் ஹோஸ்டர் பொன்னு போன ஆப் பன்னுங்கன்னு எத்தன தடவ சொல்லிச்சு. செல்போன் சிக்னல், ஏரோபிளான் சிக்னல், ஜிபிஸ்னு அந்த பொன்னு எவ்ளோ விளக்கும் சொல்லுச்சு, ஆனா ஆப் பன்ற மாதிரி ஆப் பன்னிட்டு அந்த ஏர் ஹோஸ்டர் அந்த பக்கம் போன வொடனே ஆன் பன்னனுயே, அந்த பொன்னு சொன்னத புரிஞ்சகற அளவுக்கு உனக்கு கமான்சென்ஸ் இல்லையான்னு எங்கம்மா கேட்டார்.

நாம மட்டும்தான் நல்லவன் அப்படின்னு நமக்குள்ள வச்சுருந்த என்னம் துக்குநூறாயிடுச்சு. இருந்தாலும், அம்மா அதுவும் இதுவும் ஒன்னா? டெக்னிகலி பாத்தா செல்போன் சிக்ன‌ல ப்ரிகொயன்சியும், ஏரோபிளேன் ஜிபிஸ்ல ப்ரிகொயன்சியும் வேற.. என்ற‌ சமாளிப்பிகேஷனை என் அம்மா காதில் வாங்கியாதாய் தெரியவில்லை.

டிராபிஃக் சிக்னலை சாத‌ரான மனிதன் மீறுவதும், சட்டங்களை ஏமாற்றி அரசியல்வாதி ஊழல் செய்வதும் அவரவர் இருக்கும் பதவி, இடத்தை பொறுத்து பெறும் இலாபம் மாறுபடுகிறது. டிராபிக் சிக்கனில் சாத‌ரான மனிதன் பலன் பெறுவது பல வினாடிகள், அரசியல்வாதிக்கு பல இலட்சங்கள். விதிமுறை மீறல் என்ற‌ அடிப்படையில் இரன்டுமே ஒன்றுதான் என்பதை நாம் ஒப்புக்கொள்வதேயில்லை.

One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.