Inception புடிச்சிகிடுச்சி

வாழ்க்கையில‌ ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்துக்கு போகும்போது தெரிஞ்சு வச்சிருந்த பல விஷயங்கள பயன்படுத்தாம விடும்போது அப்படியே காணாம‌ போயிடுது. கொஞ்ச நாள் அப்படிங்கிறது கொஞ்ச வருடம்ன்னு ஆகும்போது எல்லாமே மறந்துடுது. சில சமயம் அந்த மாதிரி ஒரு விஷயத்த கடந்து வந்தோமா அப்படிங்கறதே சந்தேகம் வற்ற அளவுக்கு வந்திடுது.

இப்போ ஒவ்வொரு நாளும் புதுசு புதுசான விஷயங்கள் நெறய படிக்கறதாலயோ என்னவோ நம்ம தலைக்குள்ள இருக்குற Hard Dicலயும் சரி Heartலயும் சரி எடம் பத்தாம நம்மகிட்ட கேக்காமயே Recyle Binல தூக்கி போட்டுடுது நம்ம மூளை. கொஞ்சம் கூட மூளையே இல்லாம இப்படி மூளை கெட்டதனமா நம்ம மூளை நடந்துகுது. சரி நமக்கு மூளை இருந்தாதான நம் மூளைக்கு மூளை இருக்கும்னு சமாதானம் ஆகலாம்னு பாத்தா, அட நமக்கு மூளை இருக்கு ஆனா நம்ம மூளைக்குதான் மூளை இல்லைன்னு சொன்னா, இவனுக்கு Inception புடிச்சிகிச்சி அதான் இப்படி Regression கெட்டதனமா பேசிகிட்டு திரியறான். போய் புள்ள குட்டிகளுக்கு OOPSசொல்லிகுடுங்கடான்னு திட்டறாங்க. என்ன செய்ய சிஸ்டம் டிசைன் அப்படி. படைத்தல் காத்தல் அழித்தல்னு (CRUD) பரமசிவன் ஆர்க்கிடெக்சரும் நம்ம அப்ளிகேசம் போல‌தான் இருக்கு. என்ன User Base கொஞ்சம் அதிகம்.

அப்படி என்னதான்யா மறந்துட்ட? காந்திய சுட்டதயா? இல்ல அம்மாவ உள்ள போட்டதயான்னு கேட்டா, அம்மாவா பத்தி தெரியல ஆனா காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லன்னு பிஜேபி கவர்மெண்ட் சொல்லிருச்சாம்கிறது வரைக்கும் பதிவாய் இருக்கு.

ஒரு பத்து வருஷம் ஆகிடுச்சு இந்த எஞ்சினியரிங் கவுன்சிலிங், என்ட்ரன்ஸ் கோச்சிங், பப்ளிக் எக்ஸாம் (எல்.கே.ஜி, யு.கே.ஜி பீ.ஏ பி எல்) அப்படின்னு அலைஞ்சது. கிட்டதட்ட தமிழ்நாட்டுல இருந்த அத்தனை காலேஜ் பத்தி கொறைஞ்ச பச்ச அறிவும், கோயமுத்தூர் ஜோன்ல இருக்கற எல்லா காலேஜ்லயும் எத்தன டிபார்ட்மென்ட் இருக்கு, ஒவ்வொன்னுலயும் எத்தன சீட் இருக்குங்கற வரைக்கும் RAM(ஃபிங்கர் டிப்ல‌)ல இருந்துச்சு. கலெஜ் சேர்ந்த ஒன்னு இரண்ரு வருசதுல்ல, அப்பபப்ப சொந்தகராங்கள்ள யாராவது +2 முடிச்சா அவிங்க அப்பா அவன இழுத்துகிட்டு நம்ம வீட்டுக்கு வற, பையன் என்ன கெள்வி கேட்டாலும் நாம அப்படியே ஒரு கூகிள் மாதிரி பீல் பண்ணி அப்படியே பதில் அள்ளி கொட்ட, மொதல் பேஜில பதில் இல்லன்னாலும் நெக்ஸ்ட் கிளிக் பன்னி ரெண்டாவது பேஜில பதில புடிச்சிகிட்டு போணாங்க. அது அப்படி ஒரு ரண்டு மூனு வருசம் ஓடிச்சு. அப்பறம் காலேஜ் முடிச்சுட்டு வெலைக்கு வந்தது கொஞ்ச‌ நாள் ஆச்சு.

அப்படி ஒரு காலேஜா?, கோயமுத்தூர்லயா? புதிசா இருக்கும் அப்படினு சொன்னா. இல்ல அது 20 வருஷமா இருக்கான்னு அவங்க சொன்னபோதுதான் தெரிஞ்சுது நாம கத்துகிட்ட வித்த மறந்து போயிருச்சுன்னு. அந்த Google to Bing transformation phase தவிர்க்க இயலாதது.

தகவல்கள் இருக்கும் Hard disc மட்டுமல்ல மனிதர்களை, உணர்ச்சிகளை வைத்திருக்கும் Heartம் Reccyle Bin க்கு தள்ளி விடுகிறது. சில மாதங்களா சில வருடங்களா என்ப‌து மட்டுமே வித்தியாசபடுகிறது.