சிறந்த MozFest முன்மொழிவுகளுக்கான 7 படிகள்

நீங்கள் ஒரு சிறந்த MozFest முன்மொழிவுகளுக்கு பின்னால் உள்ள ரகசியத்தை அறிய வேண்டுமா?

Mozilla
Mozilla Festival
4 min readJul 16, 2018

--

(Translated from English by Makilan Rajkumar.)

MozFest 2018 க்கு ஒரு அமர்வைச் சமர்ப்பிக்கும் எண்ணம் உள்ளதா? எங்களிடம் அதற்கான சிறந்த ஏழு குறிப்புகள் உள்ளன மேலும் நீங்கள் ஒரு சிறந்த முன்மொழிவை எழுதுவதற்கு உதவ தேர்ந்தெடுக்கபட்ட MozFest வீரர்கள் தயாராக உள்ளனர்.

1. MozFest- பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

  • MozFest உங்களது வழக்கமான சந்திப்புகளிலிருந்து வேறுபட்டது _ இது எல்லா திறன் நிலைகள், துறைகள் மற்றும் பின்னணியிலிருந்தும் வரும் மக்களை வரவேற்க வடிவமைக்கப்பட்டுள்ளது. MozFest என்பது இணையத்தைப் பற்றிய ஆர்வம் உடையவர்களுக்கானது. எங்களது பங்கேற்பாளர்கள் மற்றும் அவர்கள் நிகழ்ச்சி எடுத்து வரும் அவரகளின் பல்வேறு கருத்துகள், நுண்ணறிவு மற்றும் படைப்பாற்றல் ஆகியன எங்களுடைய அமர்வுகளைப் போல் மதிப்புமிக்கவையாகும். MozFest அனுபவம் என்பது ஆயிரக்கணக்கான துடிப்பான மற்றும் கூட்டு செயல்கள், உள் மற்றும் வெளி அமர்வுகளின் விளைவுகளாக உள்ளது.
  • இந்த கொண்டாட்டத்தின முழுமையான உணர்வைப் பெற இந்த MozFest 2017 காணொளியைக் காணுங்கள்.
  • மொசில்லா வலைப்பதிவினைப் பாருங்கள் அது கொண்டாட்டத்தின் நிகழ்வுகள் மற்றும் பல்வேறு பங்கேற்பாளர்களின் கருத்துகள் பற்றிய ஒரு யோசனையை உங்களுக்கு வழங்கும். வித்தியாசமான கண்ணோட்டத்தில இந்த நிகழ்வினைக் காண பேட்ரிக், வின்சென்ட் மற்றும் கிம் ஆகியோரின் இந்த வர்ணனையைப் படியுங்கள்.

2. வெற்றி என்பது அவ்வளவு இரகசியமானது இல்லை என்ற சூத்திரத்தைப் புரிந்து கொள்ளுங்கள்: PIP- Participatory, Inclusive, Productive ( பங்கேற்பு, உள்ளடக்கம், ஆக்கம்)

  • பங்கேற்பு — தலைப்பு உடனான பங்கேற்பாளரின் செயல்திறன் அனுபவமே அமர்வின் மையமாகும். பங்கேற்பாளர்களின் பங்கேற்பினை மையமாகக் கொண்டு அமர்வை வடிவமையுங்கள், மேலும் அமர்வில் எப்படி பங்கேற்பார்கள், செயலாற்றுவார்கள் என்பதை விவரியுங்கள்.
  • உள்ளடக்கம் — பல்வேறு பின்னணிகள், பார்வைகள் மற்றும் திறன்கள் கொண்ட பங்கேற்பாளர்கள் வரவேற்கிறார்கள்; அனைவரும் கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளது. ஒரு உள்ளடக்கிய அமர்வு என்பது, ஒரு மாறுபட்ட பல்வேறு வகையான மக்களைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும்.
  • ஆக்கம் — பங்கேற்பாளர்கள் அமர்வை விட்டு செல்லும்போது புதிய கருத்துக்கள், யோசனைகள் மற்றும் தொடர்புகளுடன் செல்கிறாரகள். ஒரு பயனுள்ள அமர்வு என்பது பங்கேற்பாளர்கள் தங்களின் சொந்த திறன்களை வளர்க்க உதவும் அறிவு மற்றும் அனுபவத்தைப் பெற உதவுகிறது. அவர்கள் சில மாதிரிகளையும் உருவாக்கி தங்களுடன் எடுத்துச் செல்லலாம்.

3. அமர்வு வகைகளைப் புரிந்து கொள்ளுங்கள்

  • கற்றல் கருத்துக்களம்: இந்த வடிவமைப்பிலான அமர்வுகள் மேம்பாடு, மாற்றம் அல்லது மீளாய்விற்கான யோசனைகளை உருவாக்குகின்றன மற்றும் நடைமுறைப்படுத்துகின்றன. கற்றல் கருத்துக்கள மாதிரி அமர்வு: பயனர்கள் தங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க உதவும் விளையாட்டு மாதிரிகளை உருவாக்கும் அமர்வு.
  • காட்சியகம்: இந்த வடிவமைப்பானது ஊடாடக்கூடிய காட்சிகள், நிறுவல்கள், விளையாட்டுகள், அரங்குகள் ஆகியவற்றைக் கொண்டது. இது 1: 1 சுய இயக்க அனுபவங்கள் அல்லது சிறிய குழு நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்டது.பெரும்பாலும் இந்த அமர்வுகள் அல்லது செயல்பாடுகள் கால அட்டவணை கொண்டிருப்பதில்லை, இவை எந்த நேரத்திலும் அணுகும் வண்ணம் மற்றும் உரையாடும் வண்ணம் நாள் முழுவதும் அல்லது வார இறுதியில் நடைபெறுகிறது. மாதிரி அமர்வு: செல்பிகளைப் பற்றய அரங்கு.
  • கொட்டகை: இந்த வடிவமைப்பிலான அமர்வுகள் ஹேக்கிங் மற்றும் மாதிரி உருவாக்கலைக் கொண்டுள்ளது. இந்த அமர்வில் பங்கேற்பாளர்கள், நிரல்கள், பொருள்கள் அல்லது கைவினைகளை உருவாக்க தயாராக இருத்தல் வேண்டும். இந்த வகை அமர்வுக்கு சிறந்த எடுத்துக்காட்டு பங்கேற்பாளர்கள், சத்தம் எழுப்பும் சிறு செயல்கள் செய்யும் மின்சுற்றுகள் மற்றும் ரோபோக்களை வடிவமைக்கும அமர்வு.

4. உங்களுடைய முன்மொழிவில் பயன்படுத்த வேண்டிய நான்கு — ஆறு குறிப்புச் சொற்களை ஆராயுங்கள்:

  • உங்கள் சிந்தனையிலுள்ள MozFest அமர்வில், பங்கேற்பாளர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் வெறுமனே அமைதியாக அமர்ந்து நீங்கள் பேசுவதை மட்டும் கேட்கிறார்கள் என்றால், உங்கள் அமர்வில் மாற்றங்கள் தேவைப்படுகிறது! MozFest மறைமுக பங்கேற்பு நிகழ்வு அல்ல. ஒரு நல்ல அமர்வில் பங்கேற்பாளர்கள் கேள்வி கேட்டல், பகிர்தல், உருவாக்குதல், விளையாடுதல், மாதிரிகளைச் செய்தல்போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபடுகிறார்கள். சிறந்த அமர்வில் பங்கேற்பாளர்கள் சிறு குழுக்களாகவோ, அணிகளாகவோ அல்லது இரண்டு இரண்டு நபர்களாகவோ சேர்ந்து இவற்றை செய்கிறார்கள். “உங்கள் அமர்வில் என்ன நடைபெறுகிறது?” என்றCFP கேள்விக்கு பதிலளிக்கும்போது உங்களுடைய குறிப்புச் சொற்களைப் பயன்படுத்துங்கள். எடுத்துக்காட்டு: இந்த அமர்வில் பங்கேற்பாளர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு எண்ம (டிஜிட்டல்) தனியுரிமை விளையாட்டிற்கான விதிமுறைகளைப் பற்றி விவரிப்பார்கள். பின்னர் அவர்கள் ஒன்றிணைந்து ஒரு மாதிரி விளையாட்டை உருவாக்குவார்கள்.

5.உங்கள் அமர்விற்காண இலக்கை நிர்ணயுங்கள்

  • பங்கேற்பவர்கள் உங்கள் அமர்வை விட்டு வெளியேறும்போது, அவர்களிடம் எதில் மாற்றம் ஏற்பட்டிருக்கும்? நீங்கள் ஒன்றிணைந்து உருவாக்கி இருப்பது என்ன? அமர்வை நடத்துபவராக, அமர்வை விட்டு வெளியேறும்போது பங்கேற்பாளர்களிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொண்டது என்ன ? பங்கேற்பாளர்கள் இந்த அமர்வை அடுத்து என்ன செய்வார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? இந்த அமர்வில் இருந்து பெற்ற கருத்துக்கள் பங்கேற்பாளர்களின் திட்டங்களுக்கு எப்படி உதவும்? கண்களை மூடி உங்களுடைய அமர்விலிருந்து கிடைக்கும் சிறந்த பயன்களைப் பற்றிச் சிந்தியுங்கள். பங்கேற்பாளர்கள் தங்களுடன் எடுத்துச் செல்லக்கூடிய மற்றும் அவர்கள் முன்னெடுத்துச் செல்லக்கூடிய மற்றும் அவர்கள் தங்களுடைய ஆர்வமிக்க திட்டங்களில் பயன்படுத்த கூடிய அறிவு மற்றும் அனுபவத்தை இந்த அமர்விலிருந்நு பெறவேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். “இந்த அமர்வின் இலக்கு அல்லது வெளிப்பாடு என்ன?” என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது நீங்கள் இந்த பார்வையினை மனதில் கொள்ளுங்கள்.

6.MozFest நிகழ்வினைக் கடந்து சிந்தியுங்கள்

  • உங்களுடைய MozFest அமர்வு வளரந்து வரும் உங்களுடைய பெரும் திட்டத்தின ஒரு பகுதியாக இருக்க வேண்டும். உங்கள் திட்டத்தில் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, நீங்கள் இந்த MozFest அமர்வினை ஒரு யோசனையை, செயல்முறையை அல்லது அம்சத்தைத் சோதித்துப் பார்ப்பதற்கு, மற்றும் ஒரு புதிய திசையில் செல்வதற்கு, ஒரு முன்னெடுப்பைப் பிரதிபலிப்பதற்கு அல்லது மதிப்பிடுவதற்கு, ஒரு புதிய சமூகத்தைக் கட்டமைப்பதற்கு அல்லது ஏற்கனவே உள்ள சமூகத்தை சீரமைப்பதற்குப் பயன்படுத்தலாம். உங்கள் வெற்றிகரமான அமர்வுக்குப் பின்னர், உங்கள் திட்டத்திற்கான சரியான அடுத்த படியினை எண்ணிப் பாருங்கள் (# 3 பார்க்கவும்) உங்களுடைய எதிர்கால திட்டங்களில் இந்த அற்புதமான அமர்வின் பங்கேற்பாளர்களுடன் எப்படி இணைந்து பணியாற்றலாம்? அவர்கள், மற்றும் MozFest ல் நீங்கள் கலந்து கொள்வது உங்களுடைய திட்டத்திற்கு எப்படிப் பங்களிக்கும் என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள்!

7. நெகிழ்வுத் தன்மையுடன் சிந்தியுங்கள்

  • Mozfest எப்போதும் மாற்றம் கண்டு வருகின்றது. நீங்கள் திட்டமிட்டபடி எப்போதும் விஷயங்கள் நடைபெற வேண்டும் என்பதில்லை என உணர்ந்து அதற்கு ஏற்றார்போல் தயாராக இருத்தல் முக்கியமானதாகும். குறிப்பாக:
  • பங்கேற்பாளர்கள். உங்கள் அமர்வில் பல்வேறு விதமான மக்கள் கலந்துகொள்வார்கள். பல்வேறு கண்ணோட்டங்கள், பின்னணி, திறமை நிலை, வயது மற்றும் புவியியல் இடத்திலிருந்து வருவார்கள். உங்களது அமர்வானது அவர்களையும் இணைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
  • அளவு. உங்களுடைய அமர்வின் பங்கேற்பாளர்கள் எண்ணிக்க வேறுபடலாம் (3லிருந்து 30 வரை). எத்தனை பேர் கலந்து கொண்டால அமர்வு வெற்றிகரமாக இருக்கும் என்பதை எங்களுக்குத் தெரிவியுங்கள், அதற்கு ஏற்றவாறு திட்டமிடுங்கள்
  • தேவையான பொருட்கள் MosFest ல் கிடைக்கும் வளங்கள் வரம்புடைய அளவிலேயே உள்ளன, எல்லாருடைய கோரிக்கையையும் நிறைவு செய்ய முயற்சிக்கையில், சில சமயங்களில் தேவையான பொருட்கள் தொலைந்து போகலாம் அல்லது மறந்துவிடப்படலாம் அல்லது உறுதியில்லாமல் இருக்கலாம். உங்களுடைய அமர்வை நடத்துவதற்கு உங்களுக்க பொருட்கள் தேவைப்படுகிறதா அல்லது குறைந்த பொருட்களுடன் அமர்வை வடிவமைத்துக் கொள்ள உங்களால் இயலுமா என்பதை நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம்.

உதவி தேவையென்றால் கேளுங்கள்! கேள்வி உள்ளதா? ஆலோசனை தேவையா ? முன்பு இதைச் செய்தவர்களின் உதவி தேவையா? ட்விட்டரில் #MosFest என்ற ஹேஷ்டேக்கினைக் கவனியுங்கள். உங்கள் முன்மொழிவை மேம்படுத்துவதற்கு உதவக்கூடிய நபர்களைக் கண்டறிய MozFest கிட்டர் சேனலில் இணையுங்கள்.

கூடுதல் குறிப்புகள் தேவையா?

இதோ அமர்வினை வடிவமைக்க உதவும் பயனுள்ள வளங்களின் பட்டியல்!

--

--

Mozilla
Mozilla Festival

We're a global community dedicated to making the web better and more open for all. Join us to imagine, build & teach the web's future.