கக கிகீ கொக்கரக்கோ..!

Supa Thamiziniyan
NiNee Tales
Published in
1 min readJun 7, 2023

நிலன் குட்டி, நீபன் குட்டி…

இன்னும் கொஞ்ச நேரத்துல சூரியன் அதோட வீட்டுக்குப் போயிடும். நாம, அதுக்குள்ள மொட்டை மாடிக்குப் போகலாம் வாங்க.

மொட்டை மாடியில், உங்களைப் பார்க்க ஒரு காக்கா வந்திருக்கு. நீலுவைப் பார்த்ததும் அந்தக் காக்கா சொல்லுச்சு

“க..கா..கக்கா… காக்காக்கா…”

ரெண்டு துண்டு ரொட்டியை ஆளுக்கு ஒண்ணா அந்தக் காக்காவுக்குப் போடுங்க…

“கி… கீ… க்கி… க்கீ… கிக்கிக்கீ…”

பாடிகிட்டே மைனாக்குருவி ஒன்னு வட்டம் போட்டுகிட்டே பறந்து வந்தது, திராட்சைப் பழம் நாலு எடுத்து நான் போட்டேன் அந்த மைனாவுக்கு.

அப்போ மரத்திலே ஒளிஞ்சிருந்த குயில் கத்துச்சு…

“குக்கூ… குகக்குக்கூ… குக்கூ… குக்குக்கூ…”

நிலனையும், நீபனையும் பார்க்க கூச்சப்பட்டு தத்தி தத்தி வந்துச்சு அந்த குயில். மிச்சமிருந்த இன்னும் நாலு திராட்சை எடுத்து வச்சேன் அந்தக் குயிலோட லட்டு குரலுக்கு.

அப்போ, தினமும் காலையில் உங்களை எழுப்பி விடும் அந்த சேவல் சண்டைக்கு வந்துச்சு. எனக்கு எங்கே அரிசின்னு அது கேட்டுச்சு…

என் நீலுவுக்கும், நீபுவுக்கும் நீ ஒரு பாட்டு பாடு, நான் அரிசி போடுறேன்னு சொன்னதும்

“கொக்கக்கோ… கொக்கரக்கோ… கொகக்கொக்கரக்கோ” அப்படின்னு கூவுச்சு அந்த சேவல்.

அதைக் கேட்ட சூரியன் கோவத்துல முறைச்சுப் பார்த்துச்சு…

அடேய் ‘நிநீ’ குட்டிகளா…

என் கோவத்தை தணிக்க நீங்க ஒரு பாட்டு பாடுங்கன்னு சொல்ல…

நிலனும் நீபனும்

க..கா..கக்கா… காக்காக்கா

கி… கீ… க்கி… க்கீ… கிக்கிக்கீ…

குக்கூ… குகக்குக்கூ… குக்கூ… குக்குக்கூ…

கொக்கக்கோ… கொக்கரக்கோ… கொகக்கொக்கரக்கோ

அப்படின்னு பாடுனாங்களாம்.

நிநீ குட்டீஸ் பாடும் போது சூரியனும் சிரிச்சுப்புட்டு வீட்டுக்குப் போனானாம்…

வாங்க குட்டிகளா நாமளும் வீட்டுக்குப் போவோம்…

--

--

Supa Thamiziniyan
NiNee Tales

INTP-LOGICIAN, Journalist, Social Media Editor, Few BOTS, Inactive WordPress developer, Bibliophile, Coffee Addict. Previously @vikatan now @tamilnadunow