Letters From an Astrophysicist — Neil De Grasse Tyson - புத்தக அறிமுகம்

Supa Thamiziniyan
Page Number 51
Published in
2 min readMar 30, 2020
Letters from an Astrophysicist by Neil De Grasse Tyson

உங்களுக்கு அமெரிக்காவில் எத்தனை அரை வேக்காடுகளைத் தெரியும்?

ஒன்று… (நோ… நான் அவரை சொல்லல)

இந்த புத்தகம் படிங்க சில நூறு பேரையாவது தெரிஞ்சுக்கலாம்… அத்தனை மனிதர்கள். அத்தனை பேருக்கும் மனுசன் சளைக்காம பதில் சொல்றார். அதற்காக புத்தகம் மொத்தமும் அரைவேக்காட்டுத்தனமான கேள்விகள் இல்லை.

அறிவியலில் ஆக அடிப்படையிலான சந்தேகங்கள், அரை வேக்காட்டுத்தனமான சந்தேகங்கள்/புரிதல்கள், அறிவியலை மறுக்கும் ஹீலர் பாஸ்கர்களின் கேள்விகள், இலுமினாட்டிச் சதிகள், புளூட்டோ பிரியர்களின் கொடூர கண்டனங்கள், கம்யூனிச/சோசியலிச பூச்சாண்டிகளைக் கண்டு கலங்கும் கேள்விகள், மூன்றாம் வகுப்பு மாணவனின் உளக்குமுறல், போலி அறிவியல், Pseudo Science தனமான கேள்விகள்… மூன்றாம் வகுப்பு மாணவனின் கேள்வி முதல் சக அறிவியலாளரின் கேள்வி வரை அத்தனைக்கும் சளைக்காமல் பதில் எழுதி இருக்கிறார்.

Neil deGrasse Tyson on stage with Richard Dawkins at Howard University in Washington D.C. | Bruce F Press / CC BY (https://creativecommons.org/licenses/by/3.0)

இந்த மாதிரியான கேள்விகளுக்கு பதில் எழுத வேண்டிய கட்டாயம்/ஆசை எனக்கிருந்தா… இவர் எழுதியிருக்க மாதிரி பதில்கள் எழுதுறதுக்கு முன்னாடி சில வேலைகள் செய்வேன்.

எழுத மாட்டேன், அதையும் மீறி எழுதினால், இந்த வரிசையில் தான் இருக்கும்.

* 5 நிமிசம் மூச்சு விடாம கேள்வி கேட்டவனை திட்டுவேன்.
* இந்த வேலையை எடுத்துகிட்டதுக்காக 35 நிமிசம் என்னையே திட்டிக்குவேன்.
* 90% திட்டியும், 10% பதில் சொல்லியும் முதல் வெர்சன் எழுதுவேன்.
* இந்த லிஸ்ட்ல இருக்க முதல் வேலையை செய்வேன்.
* அதை திருத்தி 75% திட்டு, 10% பதில்
* அதையும் திருத்தி 30% திட்டு, 30% சர்க்காசம், 10% பதில்
* இந்த லிஸ்ட்ல இருக்க முதல் வேலையை செய்வேன்.
* அதையும் திருத்தி 10% திட்டு, 80% சர்க்காசம், 10% பதில் எழுதுவேன்.
* அதையும் திருத்தி 10% சர்க்காசம், 80% பதில், 5% திட்டு மீதியெல்லாம் வெட்டு.
* திரும்ப இந்த லிஸ்ட்ல இருக்க இரண்டாவது வேலை செய்வேன்.
* திரும்ப முதல் வேலை செய்வேன்.
* இனி இந்த வேலை வேண்டாம்னு முடிவெடுப்பேன்.

ஆனா, இந்த மனுசனோட Working Style என்னன்னு தெரியலை. ஆனா, முழுக்க பதில்கள், கடைசி வரியில் ஒளிச்சு வைச்ச சர்க்காசம்னு அதகளம் பன்றாரு.

எப்படி இப்படி சளைக்காம லூசுத்தனமான புரிதல்களுக்கு விளக்களிக்குறீங்கன்னு கேட்டாலும்,

“நான் ஒரு அறிவியலாளன், தவறான புரிதல்களைக் கண்டு எள்ளி நகையாடுவது என் வேலையல்ல, அவற்றை விளக்கி உண்மையைச் சொல்வதுதான் என் வேலை”ன்னு மனுசன் புல்லரிக்க வைக்குறாரு…

Surely You’re Joking Mr.Feynmamn புத்தகம் படிச்சவங்க, புடிச்சவங்க “Letters from an astrophysicist” இந்தப் புத்தகத்தை கண்டிப்பா படிங்க.

#IniQuoteChallenge

இயற்பியல் படிச்ச சர்க்காஸம் தெரிஞ்ச மூன்று நபர்களுடன் தான் கடந்த சில மாதங்களா சகவாசம். Richard Feynman, Neil De Grasse Tyson, மூனாவது ஆள்… அட, அதை விடுங்க தற்பெருமை அடிச்சுக்க எனக்குப் புடிக்காது.

--

--

Supa Thamiziniyan
Page Number 51

INTP-LOGICIAN, Journalist, Social Media Editor, Few BOTS, Inactive WordPress developer, Bibliophile, Coffee Addict. Previously @vikatan now @tamilnadunow