“ஸ்னோடன்: ஹீரோவா…? துரோகியா..?” Permanent Records புத்தகம் என்ன சொல்கிறது?

Supa Thamiziniyan
Page Number 51
Published in
2 min readOct 14, 2019
எட்வர்ட் ஸ்னோடனின் புதிய புத்தகம்.

அன்று அவனுடைய பிறந்த நாள்.

அவனுக்கு இப்போது வயது 29.

அமெரிக்க அரசின் மிக உயரிய ரகசிய கோப்புகள் அடங்கிய சர்வர்களில் புதைந்து கிடக்கும் ரகசியங்களைக் காப்பாற்ற வேண்டிய வேலை அவனுடையது. அவனுடைய வேலையின் ஒரு பொருட்டாக ஒரு மென்பொருளை உருவாக்குகிறான். அந்த மென்பொருளைப் பார்ப்பவர்களுக்கும் பயன்படுத்துபவர்களுக்கும் அவன் வேலையை எளிதாக்கியதாகவே தோன்றும். ஆனால், அவன் ரகசியமான கோப்புகளை ஓரிடத்தில் ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறான். ரகசியங்களைப் பேணிக் காக்கும் உயரதிகாரிகளுக்குத் துளியும் சந்தேகமே இல்லை, ஒரே ஒருவரைத் தவிர. அந்த மென்பொருளைப் பயன்படுத்திப் பார்த்ததும் அவருடைய சந்தேகம் மறந்துவிட்டது அவருக்கு.

ரகசியக் கோப்புகளை ரகசியமாகப் படிக்கிறான். அதுவும் அரசாங்கத்தின் உயர் ரகசியங்களை.

உலக மக்களை வேவு பார்க்கும் அரசாங்கத்தின் ரகசிய ஆவணங்களை அரசுக்குத் துளியும் சந்தேகம் வராமல் வேவு பார்க்கிறான். உளவாளிகளை உளவு பார்க்கிறான்.

தனக்குக் கிடைத்த ரகசியத்தை ஊடகங்களில் அம்பலப்படுத்துகிறான். தலைமறைவாகிறான். அயல் தேச தூதரகத்தில் தஞ்சமடைகிறான்.

சகோதரியின் கடிதத்தைப் பிரிப்பது தனி நபர் உரிமை மீறல் என வளர்க்கப்பட்ட சிறுவன், அரசாங்கத்தின் உயர் ரகசியங்களை அத்துமீறி அம்பலப்படுத்தியவனாக மாறிய கதையை தானே விவரிக்கும் சுயசரிதைதான் “Permanent Records”.

Photo by Lianhao Qu on Unsplash

மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் புத்தகத்தின் முதல் பகுதி அவருடைய இளம் பருவத்தின் கதையும் இணையம் வளர்ந்த கதையையும் விவரிக்கிறார். இரண்டாம் பகுதியில் அரசின் உளவுத்துறைகளான CIA, NSA ஆகியவற்றில் அவர் பணிபுரியத் தொடங்கிய விதத்தையும் இந்த அமைப்புகளின் குறைகளையும் விமர்சிக்கிறார். அரசின் மிக முக்கிய துறைகளாக விளங்கும் உளவுத்துறையில் முக்கிய பணிகளைக் கையாளும் பணியாளர்களே ஒப்பந்த ஊழியர்களாக நியமிக்கப்படும் அவலத்தையும் அதன் குறைபாடுகளையும் அவர் விமர்சிக்கும் அத்தியாயங்களைப் படிக்கும்போது அமெரிக்க அரசு இயங்கும் விதத்தின் போதாமை பெரும் அதிர்ச்சியையே தருகிறது.

புத்தகத்தின் மூன்றாம் பகுதியில் தனிநபர் உரிமைகளையும், அவை மீறப்படுவதன் அபத்தத்தையும், உளவுபார்க்கும் அமைப்புக்குள் பணிபுரிந்து கொண்டு தனிநபர் உரிமைகள் சார்ந்த அறத்தை யோசிப்பவருக்கு எழும் மனச் சிக்கல்களையும், அரசின் இந்த உளவுபார்க்கும் ரகசியத்தை வெளிப்படுத்த முனைந்த முயற்சிகளையும் வெளிப்படுத்தியதன் பின்விளைவுகளை விவரிக்கிறது. அவர் வெளிப்படுத்திய ரகசியங்கள் ஊடகங்களில் வெளிவரத் துவங்கியவுடன் அமெரிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளும் ஹாங்காங்கிலிருந்து வெளியேறி ஸ்னோடன் மாஸ்கோவில் தஞ்சமடைந்ததையும் அதன்பிறகு ஸ்னோடனின் மனைவி உளவுபார்க்கப்பட்ட விதத்தையும் விவரிக்கிறது இந்த பகுதி.

அரசின் உலகளாவிய வேவு பார்ப்பது குறித்த ரகசியங்களை ஸ்னோடன் வெளியிட்டு ஏழு ஆண்டுகள் ஆகிறது. இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகு அவர் வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகத்தின் மூலம் முந்தைய ரகசியங்களைத் தாண்டி நான் என்ன புதிதாகத் தெரிந்துகொள்ள முடியும்?

இந்தக் கட்டுரையின் முழு வடிவத்தை விகடன் தளத்தில் வாசிக்கலாம்.

Originally published at https://www.vikatan.com on October 14, 2019.

--

--

Supa Thamiziniyan
Page Number 51

INTP-LOGICIAN, Journalist, Social Media Editor, Few BOTS, Inactive WordPress developer, Bibliophile, Coffee Addict. Previously @vikatan now @tamilnadunow