ஒரு ரசவாதியும் ஒரு வில்லாளனும் — “The Archer” by Paulo Coelho

Supa Thamiziniyan
Page Number 51
Published in
2 min readJan 9, 2021
‘O Caminho do arco’ By Paulo Coelho

முன் குறிப்பு : முதல் பத்தியில் மூச்சடைச்சுக்குச்சுன்னா நேரடியா பின்குறிப்புக்குப் போகவும்.

எச்சரிக்கை : அடுத்த பத்தி படிக்குறதுக்கு முன்னாடி இன்னொரு முறை ‘முன் குறிப்பு 1 ‘ படிக்கவும்.

பெருமழை அடித்துச் சாய்த்துப்போட்ட ஓர் ஊழிக்காலத்தாண்டவத்தையொத்த காலத்திலிருந்து தெளிவில்லாத ஒரு சமநிலை காலத்தை நோக்கி நகரும் பயணத்துக்கு உடன் வர ஓர் உற்றத்தோழன் இருந்தால் எப்படி இருக்கும்?

தேங்கிக் கிடக்கும் சகதியைக் கண்டு முகம் சுளிக்கும் போது, அதன் பிம்பங்களில் வீழ்படிந்த ஒரு கோபுரத்தின் உச்சியில் இருந்து பறந்து செல்லும் புறாவை அந்தச் சகதிக் குழம்பில் தரிசிக்க கோரும் உற்றத் தோழனாக அவன் இருந்தால் எப்படி இருக்கும்?

பெரும் சுமையென அகவுலகை சுமந்து நோக்காட்டோடு அலைந்து திரிந்து ஆதரவைத் தேடும் அந்தப் பயணத்தை மயிற்தோகையை அச்சுமுறியா அளவுக்கு சுமந்து செல்லும் மன அமைதிக்கான யாத்திரையாக மாற்றும் மாயவித்தைக்காரன் உடன் இருந்தால் எப்படி இருக்கும்?

இன்னும் ஒரு இழுப்பில் இது முறிந்து விழும் அளவுக்கான முதுகுச்சுமையைத்தூக்கி நடக்கும் போது, முறிந்துவிடாத, கூர்நோக்கும் வாகான தோதில் அம்பின் கட்டையை வளைக்கும் லயத்துக்குக் கரத்தை சேர்த்திழுக்கும் தோதான வில்லாளனாக அந்த நண்பன் இருந்தால் எப்படி இருக்கும்?

அப்படி ஓர் உற்றத் தோழனாக ‘ஒரு வில்லாளன்’ வாழ்க்கைப்பாடத்தைப் போதிக்கிறான். வழக்கமான நீதிநூல் போதனையாக இருந்தாலும் Paula Coelho எனும் ரசவாதியின் ஜாலத்துக்கு கொஞ்சம் பணிந்து செல்லலாம்.

The Archer By Paulo Coelho

பின்குறிப்பு 1 : சுயமுன்னேற்றமே வாழ்வின் முன்னேற்றம், வாழ்க்கை அழகானது வாழ்ந்துதான் பார்க்கனும், என் தவளையை தின்றது யார், என் பாலாடைக்கட்டியை நகர்த்தியது யார் டைப்பான அன்பின் வழியது உயிர்நிலை புத்தகங்கள் அலர்ஜியானவர்களுக்கு முதல் பார்வையில் இப்புத்தகம் தோதானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஒரு முறை படிச்சுப் பாருங்க… ஒருவேளை பிடிக்கலாம்…

பின்குறிப்பு 2 : எச்சரிக்கைக்கும் பின்குறிப்புக்கும் இடைப்பட்ட பத்திகளில் இருந்த மாதிரியான திருகல் மொழியில் இல்லாமல் புத்தகம் எளிமையான ஆங்கிலத்திலும், அட்டகாசமான வடிவமைப்பிலும், நேர்த்தியான ஓவியங்களிலுமாக ஒரு முறை படித்துவிடலாம்.

--

--

Supa Thamiziniyan
Page Number 51

INTP-LOGICIAN, Journalist, Social Media Editor, Few BOTS, Inactive WordPress developer, Bibliophile, Coffee Addict. Previously @vikatan now @tamilnadunow