Shruti Bhatt
PhonePe
Published in
3 min readAug 30, 2019

--

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

2018 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதத்திற்கான UPI எண்ணிக்கையை NPCI வெளியிட்டது, எப்போதும் போல் இந்த முறையும் அதில் மகிழ்ச்சியடைவதற்குப் பல விஷயங்கள் இருந்தன. UPI-இன் வளர்ச்சியை இந்தியாவின் முதல் மற்றும் மிகப் பெரிய வங்கிச்சாரா UPI செயலி என்ற முறையில் பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாகவே உள்ளது. அதன் கடந்தாண்டு வளர்ச்சி அனைவரின் எதிர்பார்ப்புகளையும் கடந்துவிட்டது.

இதுவரை கவனித்த வரையில், UPI-இன் அபார வளர்ச்சி நுகர்வோர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஊடகம் மட்டுமில்லாமல் பேமண்ட்ஸ் துறையையே அதன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. தீடிரென அனைவரும் UPI அமைப்புக்குள் வர விரும்புகிறார்கள். UPI இயங்கும் அதே நடையில் வாலட்டுகளையும் மேம்படுத்த எண்ணுகிறார்கள். வங்கிகள் நிகழ்கால மொபைல் செயலிகளை உருவாக்க முயற்சித்து வருகின்றன. Google, Amazon மற்றும் WhatsApp போன்ற மிகப்பெரிய சர்வதேச நிறுவனங்களும் UPI அடிப்படையில் இயங்கும் பேமண்ட் சேவைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல், நமது இந்திய அரசாங்கமும் ஓர் பேமண்ட் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் UPI ஏற்படுத்தியுள்ள தாக்கம் நேர்மறை தாக்கமாக இன்னும் பல காலத்திற்குத் தொடரும் என்பதிலும், இந்திய நுகர்வோர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.

எனினும், UPI குறித்து சமீபத்தில் வந்த ஊடகக் கட்டுரைகள் அனைத்தும் வெறுமென அதன் பரிவர்த்தனை எண்ணிக்கைகளைப் பற்றி மட்டுமே பேசுவது போல் தோன்றுகிறது . அதாவது கதையின் ஒரு பாதியை மட்டுமே கூறுவது போல் உள்ளது. மறு பாதியையும் கூற வேண்டுமெனில், பரிவர்த்தனை எண்ணிக்கைகளுடன், மொத்த பரிவர்த்தனைகள் மற்றும் தனித்துவமான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும், சராசரி பரிவர்த்தனை மதிப்பு (ATV) மற்றும் வாடிக்கையாளரின் சராசரிப் பரிவர்த்தனைகளின் (ATPC) பதின்மான குறிப்பும் அடங்கிய ஓர் சமநிலையான UPI மதிப்பெண்ணை வழங்குவதே சரியாக இருக்கும் எனக் கருதுகிறோம்.

பொதுவெளியில் கிடைக்கும் தகவலின்படி இதுவே ஒட்டுமொத்த எண்ணிக்கைகளின் தொகுப்பாகும்.

மேலோட்டமாகப் பார்த்தால், Paytm நிச்சயமாகச் சந்தையில் முன்னிலையில் உள்ளது. சந்தையின் 40% பங்கை தன்வசப்படுத்துவது அவ்வளவு சாதரணமான விஷயமில்லை. ஆனால், அவர்களின் பிற எண்ணிக்கைகளின் உண்மை நிலை என்ன? இதுகுறித்த தரவு பொதுவெளியில் கிடைக்கவில்லை…

அதிர்ஷ்டவசமாக, Paytm-இன் மொத்தப் பரிவர்த்தனையான 68 மில்லியன் பரிவர்த்தனைகளில் 21 மில்லியன் பரிவர்த்தனைகள் Paytm வாடிக்கையாளர்கள் PhonePe வாடிக்கையளர்களுக்குப் பணம் அனுப்பியவை (@YBL VPA-வைப் பயன்படுத்தி) ஆகும். எனவே அவர்களின் ATV, ATPC ஆகியவற்றைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினோம்.

அதன் மூலம் நாங்கள் கண்டுபிடித்தது இதுவே!

அதாவது, ஃபிப்ரவரி மாதம் Paytm-இல் 40,000 தனித்துவமான வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் ஐநூறுக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளைச் செய்துள்ளார்களாம்.

ஆனால், Paytm-இன் சராசரி பரிவர்த்தனை மதிப்பு ₹40-க்கும் குறைவாகவே உள்ளது.

அதே சமயம், ஃபிப்ரவரி மாதம் PhonePe-வில் 6,000,000 தனித்துவமான வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் வெறும் 5 பரிவர்த்தனைகளை மட்டுமே செய்துள்ளனர்.

எனினும், எங்களின் சராசரி பரிவர்த்தனை மதிப்பு ₹1,800-க்கும் அதிகமாக உள்ளது.

இப்படி ATV-இல் உள்ள இந்த மிகப்பெரிய வித்தியாசத்திற்கும் (Paytm-இன் ₹40 மற்றும் PhonePe-வின் ₹1,820) Paytm-இன் ஆச்சரியமூட்டும் அதிக எண்ணிக்கையிலான ATPC-க்கும் (525/பயனர்/மாதம்) உள்ள தர்க்கரீதியிலான ஒரே விளக்கம் என்னவெனில், வாடிக்கையாளர்கள் செய்யும் பரிவர்த்தனையின் மீது கேஷ்பேக் வழங்கியதன் மூலம் மட்டுமே Paytm இந்த எண்ணிக்கையைப் பெற்றுள்ளது என்பது வெட்டவெளிச்சமாகிறது.

இதன் மூலம் நாம் மூன்று முடிவுகளுக்கு வரலாம்:

  1. Paytm-இல் வாடிக்கையாளர்கள் இன்னும் பெரியளவில் UPI-க்கு மாறவில்லை: அதாவது 40,000 தனித்துவமான வாடிக்கையாளர்கள் மட்டுமே 21 மில்லியன் பரிவர்த்தனைகளைச் செய்துள்ளனர் எனில், இதைப் பொதுப்படுத்திப் பார்த்தால் Paytm-இல் மொத்தமாக UPI பரிவர்த்தனைகளைச் செய்வது வெறும் 40,000 * 68 / 21 = 1.3 லட்சம் வாடிக்கையாளர்கள் மட்டுமே.
  2. வாடிக்கையாளர்களுக்கான பரிவர்த்தனை எண்ணிக்கைகள் வழக்கமான UPI பயன்பாட்டு வழக்குகளுடன் ஒத்துபோகவில்லை: ஒரு PhonePe வாடிக்கையாளர் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 5 பரிவர்த்தனைகளைச் செய்கிறார், ஆனால் ஒரு Paytm வாடிக்கையாளர் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 525 பரிவர்த்தனைகளைச் செய்வதாக மேலே போடப்பட்டுள்ள கணக்குகள் காட்டுகின்றன. உண்மையில் UPI நெட்வொர்க்கின் களநிலவரப்படி ஒரு வாடிக்கையாளர் சராசரியாக இத்தனை பரிவர்த்தனைகளைச் செய்வதென்பது நம்பும்படியாக இல்லை.
  3. Paytm பரிவர்த்தனைகளின் சராசரி மதிப்பு UPI சராசரியை விட குறைவாக உள்ளது: மொத்த நெட்வொர்க் அளவில், UPI-இன் சராசரி பரிவர்த்தனை மதிப்பு ₹1,116 ஆகும். Paytm-இன் சராசரி பரிவர்த்தனை மதிப்பு ₹38 மட்டுமே. அதுவும் கேஷ்பேக் சலுகையின் மூலம் அடைந்த ASP பரிவர்த்தனைகளாகும்.

இவை அனைத்தையும் வைத்து பார்க்கும்போது, UPI நெட்வொர்க்கில் முதன்மை வகிப்பதாக Paytm கூறிக்கொள்வது ஒற்றைக்காரணி அடிப்படையிலானது எனவும் தவறானது எனவும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

இந்திய நுகர்வோர்கள் எந்தளவிற்கு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு மாறிவருகின்றனர் என்பது குறித்த கட்டுரைகளைச் சந்தைப்படுத்துவதே சரியான வழிமுறையாக இருக்கும் எனக் கருதுகிறோம். அதில் அதகளிவில் தனித்துவமான வாடிக்கையாளர்கள் இருப்பதுடன் பரிவர்த்தனையின் ஒட்டுமொத்த மதிப்பும் அதிகமாக உள்ளது. பரிவர்த்தனைகளின் மொத்த எண்ணிக்கையையும் மதிப்பையும் NPCI எப்போதும் வெளிப்படையாகவே பகிர்வதை நாங்கள் வரவேற்கிறோம். இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் டிஜிட்டல் பேமண்ட்ஸ் துறையின் முகத்தை முழுமையாகக் கட்டமைக்க, தனித்துவமான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையையும் வெளியிட்டால் மேலும் சிறப்பாக இருக்கும்.

--

--