Shruti Bhatt
PhonePe
Published in
2 min readAug 30, 2019

--

வணிக மோசடிக்காரர்களிடம் பாதுகாப்பாக இருங்கள்!

வாடிக்கையாளர்களிடம் பணம் பறிக்க மோசடிக்காரர்கள் ஒவ்வொரு நாளும் புதுப்புது வழிகளைக் கண்டுப்பிடித்துக்கொண்டே வருகின்றனர். ஒருபக்கம் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, மறுபக்கம் வணிக மோசடிக்காரர்களின் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டே வருகிறது. அப்படிப்பட்ட மோசடிக்காரர்களிடமிருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பது குறித்து இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

“ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருள் வரவே இல்லை” என்பதை நாம் அனைவரும் நிச்சயம் எங்காவது படித்திருப்போம் அல்லது யாரேனும் சொல்லிக் கேட்டிருப்போம். வணிக மோசடிக்கு இது ஒரு எடுத்துக்காட்டு! உங்களிடம் பணம் பறிப்பதற்கு மோசடிக்காரர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். முதலில் ஒரு வணிகர்/விற்பனையாளர் பொருட்களை ஆர்டர் செய்வதற்கான போலி வணிகத்தளத்தை உருவாக்குவார்கள். அந்த நிறுவனத்தின் முகவரி, தொடர்பு எண், ரத்துசெய்தலுக்கான கொள்கைகள், பொருளைத் திருப்பியளித்தல் மற்றும் பணம் திரும்பப்பெறுதலுக்கான கொள்கைகள், பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான பேமண்ட் நுழைவாயில் என அனைத்தும் போலியானதாகவே இருக்கும்.

வணிக மோசடிக்காரர்களிடம் பாதுகாப்பாக இருங்கள்

அடுத்து, வாடிக்கையாளர்களிடம் பணம் ஏற்க வேண்டுமெனில் ஏதேனும் பேமண்ட் நுழைவாயில் (பேமண்ட் கேட்வே) சேவையுடன் அந்த வணிகர் கூட்டமைக்க வேண்டும். ஒரு வணிகருக்கு பேமண்ட் சேவைகளை வழங்கும் முன்னர், பேமண்ட் நுழைவாயில் சேவைகளை வழங்கும் நிறுவனம் அந்த வணிகரின் பின்புலத்தை முறையாகச் சரிபார்க்க வேண்டும்.

இதில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, வாடிக்கையாளர்களிடம் NEFT மூலம் பணம் பெறுவதற்கு ஒரு தனிப்பட்ட வங்கிக் கணக்கை உருவாக்குவார்கள் அல்லது வணிகர் QR குறியீட்டிற்குப் பதிலாக தனிப்பட்ட QR குறியீட்டைப் பயன்படுத்துவார்கள். இதன் மூலம் முறையான பேமண்ட் நுழைவாயிலைப் பயன்படுத்துவது போல் காட்டிக்கொள்ள முடியும் என்பதால், அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் சமூக வலைதளங்களில் அவர்களது வணிகத்தை விளம்பரப்படுத்தி, வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனைகளைச் செய்யும்வரை காத்திருப்பது மட்டுமே.

நினைவூட்டல்: தற்போது செயலிலுள்ள பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்களைப் பயன்படுத்தி மட்டுமே PhonePe-வில் வணிகர்களுடன் கூட்டமைக்கிறோம். வணிகர்களுடன் கூட்டமைக்கும் முன்னர், அவர்களைக் கடுமையான சரிபார்ப்புச் செயல்முறைக்கு உட்படுத்துகிறோம். அவர்களின் KYC ஆவணங்களைச் சரிபார்ப்போம், தீடிரென அவர்களின் கடைகளுக்குச் சென்று ஆய்வுகளையும் மேற்கொள்வோம். அதற்கு பின்னரே PhonePe மூலம் பணம் ஏற்க அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். நீங்கள் PhonePe மூலம் பணம் செலுத்தும் போது மோசடி குறித்த எந்த கவலையும் இல்லாமல் பரிவர்த்தனைகளைச் செய்யலாம்.

பெரும்பாலான வணிக மோசடிகளில், பணம் செலுத்திய பிறகு அல்லது ஆர்டர் செய்த பொருளின் டெலிவரி தேதியைக் கடந்த பிறகு மட்டுமே ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை வாடிக்கையாளர்கள் உணர்கிறார்கள். வணிகத்தளத்தின் வாடிக்கையாளர் ஆதரவுக் குழுவைத் தொடர்புகொள்ள முயற்சிக்கும் போதுதான் வணிக மோசடியாளரிடம் பணம் பறிகொடுத்ததையே அறிகிறார்கள்.

இவ்வாறு நீங்கள் ஏமாறாமல் இருக்க, இவற்றை எப்போதும் நினைவில்கொள்ளுங்கள்.

  • அனைத்து ஷாப்பிங் வணிகத்தளங்களையும் நம்ப வேண்டாம். ஒரு பொருளை வாங்கும் முன்னர் வாடிக்கையாளர்களின்மதிப்புரைகள், மதிப்பீடுகள், வணிகத்தளத்தின் சமூக வலைதளப் பக்கம் (இருந்தால்) ஆகியவற்றைப் பாருங்கள்.
  • நம்பகமான ஷாப்பிங் வணிகத்தளங்கள் மற்றும் வலைதளங்களில் மட்டுமே பொருட்களை ஆர்டர் செய்யுங்கள்.
  • மோசடித்தளங்கள் குறித்து Google இடம் புகாரளியுங்கள்.
  • இழந்த பணத்தைத் திரும்பப்பெற, மோசடி வணிகத்தளத்தில் பணம் செலுத்த பயன்படுத்திய டெபிட்/கிரெடிட் கார்டு, வங்கிக் கணக்கின் (UPI) மீது திருப்பியளித்தல் (சார்ஜ் பேக்) மனு ஒன்றைத் தாக்கல்செய்யுங்கள்.

--

--