கதையா .. நிஜமா ? — சவுக்கு Vs சன்டிவி மகா லட்சுமி

இது தான் சவுக்கு சங்கர் மீது சன் டிவி மகாலட்சுமி வழக்கு தொடுக்க காரணமான கதை. கதையா உண்மையா என்பது பற்றி நமக்கு எதுவும் தெரியாது. ஆனாலும் வழக்கு தொடுத்த மகாலட்சுமி மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பதன் பின்னணியை அனைவரும் அறிந்துகொள்ள அந்த கதையை உங்களுக்காக பகிர்கிறோம். இந்த வழக்கின் தற்போதைய நிலவரம், சவுக்கு சங்கர் பதிவிலிருந்து….

சன் டிவி செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்.
சவுக்கு இணையதளத்தில் தன் மீது அவதூறான கட்டுரை வெளி வந்தது குறித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சன் டிவியின் செய்தி வாசிப்பாளர் மற்றும் வழக்கறிஞரான மகாலட்சுமி காவல்துறையில் புகார் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சில மாதங்கள் கழித்து, சவுக்கு தளத்தில் வந்த கட்டுரையை நீக்க வேண்டுமென்றால் 50 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று சவுக்கு தளம் சார்பாக யாரோ ஒருவர் போனில் மிரட்டியதாக மற்றொரு புகாரை கொடுத்தார். காவல்துறை இதன் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. மகாலட்சுமி, இந்தப் புகாரின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். உயர் நீதிமன்றம் முன்பாக இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதோடு, வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.
சிபிஐ இரண்டு வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. மகாலட்சுமி மீது அவதூறான கட்டுரை எழுதிய வழக்கில் என் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
50 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டியதாக பதிவு செய்யப்பட்ட புகாரின் பேரில் ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் மகாலட்சுமி, ஒரு ஒலிநாடாவை சமர்ப்பித்திருந்தார். அந்த ஒலிநாடாவில் யாரோ அடையாளம் தெரியாத ஒருவர் சவுக்கு தளத்தில் கட்டுரையை நீக்க வேண்டுமென்றால் 50 லட்ச ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியதாக கூறினார் மகாலட்சுமி.
வழக்கில் விசாரணையை மேற்கொண்ட சிபிஐ, வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரின் குரலையும் பதிவு செய்து, டெல்லிக்கு சோதனைக்கு அனுப்பியது. அந்த பரிசோதனையின் முடிவில், மகாலட்சுமியின் தம்பி சதீஷ்தான், தொலைபேசியில் மிரட்டியுள்ளார் என்பது வெளியானது. இதையடுத்து, பொய்யான புகாரை அளித்ததற்காகவும், போலியான ஆதாரங்களை தயார் செய்ததாகவும், சன் டிவி செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி மீது சிபிஐ சென்னை எழும்பூர், கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கையின் நகலை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, மகாலட்சுமி மற்றும் அவரது தம்பிக்கு ஆகஸ்ட் 1 அன்று ஆஜராக வேண்டுமென்று, சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
தீதும் நன்றும் பிறர் தர வாரா

இனி அந்த கதையை படியுங்கள்…

இரண்டு பேர் ஏழு காதல்..

என்னடா இது.. இரண்டு பேர் ஏழு காதல் என்று வியப்பாக இருக்கிறதா. ஆம். இது ஒரு
வித்தியாசமான காதல் கதைதான். கண்றாவிக் கதை என்றும் சொல்லலாம்.
முக்கோண காதல் கதை கேள்விப்பட்டிருப்பீர்கள். நாற்கோண காதல் கதை கூட
கேள்விப்பட்டிருப்பீர்கள். இது ஏழு முனையான ஹெப்டகனாக இருந்து இறுதியில் ஆக்டகனாக மாறிய காதல் கதை. கதையின் இறுதியில் காதல் அஷ்டகோணலாவது தனிக்கதை.

மகாலட்சுமி. மங்களகரமான பெயர். சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல் படிக்கிறார். அப்படி படிக்கையில் அறிமுகமானவர்தான் ரூபன். அவரும் மகாலட்சுமியோடு அதே கல்லூரியில்
படிக்கிறார். மகாலட்சுமி ரூபனை சந்தித்ததும் பாரதிராஜா திரைப்படங்களில் வருவது போன்று வெள்ளை உடை அணிந்த தேவதைகள், ரீங்காரமிட மன்மதன் அம்பு இருவரையும் தாக்குகிறது. பார்த்தவுடன் பரவசம். காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கத் தொடங்குகிறார்கள். இது ஓரு தலைச்சிறந்த காதல் கதையாக உருவாகியிருக்க வேண்டியது. சட்டக்கல்லூரியின் பல காதல் கதைகளைப் போன்றே அமரக் காதல் கதையாக உருவாகியிருக்க வேண்டியது… ஆனால், இந்தக் காதலுக்கு மகாலட்சுமியின் கணவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
அதிர்ச்சியடையாதீர்கள். மகாலட்சுமியும் ரூபனும் காதலாகி, கசிந்துருகியபோது,
மகாலட்சுமிக்கு திருமணமாகி, 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான். ஆனால் அமர காதலை தடுக்க முடியுமா என்ன ? மகாலட்சுமி மற்றும் ரூபனின் காதல் தங்கு தடையின்றி தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த இடத்தில் கதையில் ஒரு ஃப்ளாஷ்பேக்.
மகாலட்சுமி ரூபன் காதல் கதை தொடங்குவதற்கு முன்பாகவே ரூபன் பத்து வருடமாக தனது பள்ளித் தோழியை காதலித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் பெண்ணை திருமணம் செய்யலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். இப்படித் திட்டமிட்டுக் கொண்டிருக்கையிலேயே மகாலட்சுமியோடு ஏற்கனவே குறிப்பிட்ட அந்த அமரக் காதல் உருவாகிறது. இந்த நேரத்தில் ரூபன் பழைய காதலை தொடருவதா… மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகருவதா என்று இருதலைக் கொள்ளியாய் தவிக்கிறார். அவர் தவிப்பைப் பார்த்து பார்வையாளர்களும்
துடிக்கிறார்கள். இந்த இடத்தில் மகாலட்சுமியே பிரச்சினையை முடித்து வைக்கிறார்.
அந்தப் பெண்ணை நீ திருமணம் செய்யக் கூடாது என்று கட்டளையிடுகிறார். அந்தப் பெண் வீட்டுக்கும் இந்த விவகாரம் அரசல் புரசலாக தெரிந்து அந்தப் பெண்ணுக்கு வேறு இடத்தில் திருமணம் முடிக்கிறார்கள். இந்த இடத்தில்தான் திரைக்கதையில் ஒரு ட்விஸ்ட் வருகிறது. மிகப் பெரிய ட்விஸ்ட். ரூபனுக்கு திருமணமாகிறது. திருமணமான விவகாரம் மகாலட்சுமிக்கு தெரியாமல் மறைத்து வைக்கப்படுகிறது. திருமணமானால் ரூபன் தன்னை விட்டு விலகிப் போய் விடுவார் என்று
ரூபனுக்கு திருமணமானதை எப்போதுமே மகாலட்சுமி எதிர்த்தே வந்திருக்கிறார். அதனால், ரூபன் மகாலட்சுமிக்கு தெரியாமல் திருமண ஏற்பாடுகளைச் செய்கிறார். ஒரு வழியாக திருமணமும் நடந்து முடிந்து விடுகிறது. பாரம்பரியமான கிறித்துவ குடும்பத்திலிருந்து ரூபனுக்கு திருமணம் செய்யப்படுகிறது. மணப்பெண் ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார்.
ரூபனுக்கு தடபுடலாக திருமணம் நடக்கிறது. 2008 மே மாதம் திருமணம் நடக்கிறது. ஒரு லட்ச ரூபாய் வரதட்சிணை, வைர மோதிரத்தோடு மொத்த திருமண செலவுகளையும் பெண் வீட்டாரே ஏற்றுக் கொண்டு திருமணம் நடத்தி வைக்கிறார்கள். ரூபன் வீட்டாருக்கு சொந்தமான பள்ளி ஒன்று இருக்கிறது. படித்த பெண்ணான மருமகள் அந்தப் பள்ளியை பார்த்துக் கொள்வார் என்ற திட்டத்தில்
படித்த பெண்ணாகப் பார்த்து ரூபனுக்கு திருமணம் முடிக்கிறார்கள்.
திருமண விவகாரம் மகாலட்சுமிக்கு தெரிந்ததும் ருத்ர தாண்டவம் ஆடுகிறார். ரூபன், சாஷ்டாங்கமாய் மகாலட்சுமி காலில் விழுந்து, மன்னிப்பு கேட்டு எனக்கு நீதான் எல்லாமும் என்று மன்றாடுகிறார். சரி.. சரி… எழுந்து தொலை. நான் சொல்வது போலத்தான் நடக்க வேண்டும். மீறி ஏதாவது செய்தால் அவ்வளவுதான் என்று மிரட்டுகிறார். நீ சொல்வது போலவே கேட்கிறேன் என்று சரணடைகிறார் ரூபன். அதன் பிறகு மகாலட்சுமி ஆட்டுவித்தபடியெல்லாம் ரூபன் ஆடுகிறார். திருமணமான இரண்டு நாட்களுக்குப் பிறகு, மகாலட்சுமி தினந்தோறும் ரூபனை இரவு 12 மணிக்குதான் வீட்டுக்கு அனுப்புவார். இப்படி முழு போதையில் தினந்தோறும்
தாமதமாக ரூபனை வீட்டுக்கு அனுப்பினால் ரூபனும், அவர் மனைவியும் நெருக்கமாக மாட்டார்கள் என்று மகாலட்சுமி கணக்கு போடுகிறார்.
ரூபன் தன் பங்குக்கு தன் மனைவியிடம் நடிப்பார். தன்னுடைய செல்போனில் மகாலட்சுமியின் பெயரை MLXI என்ற சேமித்து வைத்திருப்பார். அடிக்கடி மகாலட்சுமியிடம் இருந்து போன் வருவதை தன் மனைவி பார்த்ததும், “அய்யோ… இவ என் ஜுனியர்.. எப்போப் பாத்தாலும், இதுல சந்தேகம், அதுல சந்தேகம்னு ஒரே தொல்லை… நானும் எவ்வளவு நாள்தான் சொல்லிக் குடுக்கறது” என்று புது மனைவியிடம் நடிப்பார். புது மனைவியும் சரி.. நம்ப வூட்டுக்காரருதான்
இந்தியாவிலேயே பெரிய வக்கீல் என்று நினைத்து ஏமாந்தார்.
திருமணமாகி ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, மகாலட்சுமி வீட்டில் ரூபனுக்கும் அவர் புது மனைவிக்கும் விருந்து அளிக்கப்படுகிறது. இந்தக் காட்சி, படத்தில் மிக மிக முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்துகிறது. ரூபனும் அவர் புது மனைவியும் மகாலட்சுமி வீட்டுக்கு விருந்துக்கு செல்கின்றனர். அப்போது ரூபனும், அவர் புது மனைவியும் சிரித்துப் பேசி அந்நியோன்யமாக பழகுவதாக காட்சி
அமைகிறது. இந்தக் காட்சியைப் பார்த்து, சீரியல்களில் வரும் வில்லி போல மகாலட்சுமி முறைக்கிறார். ரூபனின் மனைவி பார்க்காத நேரத்தில் ரூபனை கண்களாலேயே எரிக்கிறார். ரூபனோ, புது மனைவியை சந்தோஷப்படுத்துவதா, மகாலட்சுமியை சந்தோஷப்படுத்துவதா என்று குழப்பத்தில் ஆழ்கிறார். அப்போது ரூபன் கேரக்டர் மீது பரிதாபம் ஏற்படுவதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் இது வரை சாதாரண கேரக்டராக உருவாக்கப்பட்டிருந்த மகாலட்சுமியின் கதாபாத்திரம் விஸ்வரூபம் எடுக்கிறது. இவர்கள் இருவரையும் பிரிக்காமல் விட மாட்டேன் என்று சபதமெடுக்கிறார் மகாலட்சுமி. இந்த இடத்தில் இன்டர்வெல் ப்ளாக். வெறித்த பார்வையோடு மகாலட்சுமி முறைக்கும் இடத்தில் காட்சி ஃப்ரீஸ் செய்யப்படுகிறது. இன்டர்வெல்லுக்குப் பிறகு, மகாலட்சுமி ரூபனை மிரட்டும் இடத்தில் படம் தொடங்குகிறது. நீ அவளை டைவர்ஸ் செய்தே ஆக வேண்டும் என்று மிரட்டுகிறார் மகாலட்சுமி. ரூபனும் சரி அப்படியே செய்கிறேன்… என்ன காரணம் சொல்வது என்று கேட்கிறார். நானே அதற்கெல்லாம் ஏற்பாடு
செய்கிறேன் என்று மாஸ்டர் ப்ளானாக போடுகிறார். மகாலட்சுமியின் மாஸ்டர் ப்ளான் என்ன என்பது அடுத்தடுத்த காட்சிகளில் விரிகிறது.

இதன் நடுவே, போலியாக பல பத்திரங்களை தயாரித்து, தன் கணவரின்

கையெழுத்தை தானாகவே போட்டுக் கொண்டு, மகாலட்சுமி தனக்கு விவாகரத்து வாங்கிக் கொள்கிறார். அவர் கணவரும், சனியன் விட்டு ஒழிஞ்சாப் போகுது என்று வெறுத்து ஒதுங்குகிறார். ரூபனின் மனைவி வேலை பார்க்கும் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் ரூபனின் மனைவியிடம் வயதுக் கோளாறு காரணமாக தேவையற்ற முறையில் அதிகப்பிரசங்கித் தனமாக நடந்து கொள்வான். அவரைக் காதலிப்பது போல கற்பிதம் செய்து கொண்டு சில நேரங்களில் வரம்பு மீறி நடந்து
கொள்வான். இது ஓரு சாதாரண உரையாடல் சமயத்தில் ரூபனின் மனைவி கூறியதை, சின்ன கட் சீனாக ஃப்ளாஷ் பேக்கில் காட்டப்படுகிறது.
ரூபனின் மனைவி போனிலிருந்து, அந்தப் பையனின் மொபைலுக்கு காதல் ரசம் சொட்டும் எஸ்.எம்.எஸ்களை ரூபன் அவர் மனைவிக்கு தெரியாமல் அனுப்புகிறார். இது எதுவும் தெரியாமல், ரூபனோடு அவர் மனைவி இயல்பாக பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு நாள் ரூபன் திடீரென்று மூன்று நாட்களுக்கு காணாமல் போகிறார். அந்த மூன்று நாட்களில் ஒருநாள் ரூபனின் தாயாருக்கு நள்ளிரவு 12 மணிக்கு போன் வருகிறது. அந்த மகாலட்சுமி பேசுகிறார். ரூபனின் தாயாரிடம், உங்கள் மருமகளுக்கு வேறு ஒரு ஆணோடு தொடர்பு இருக்கிறது. நள்ளிரவு நேரத்தில் அவர் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருக்கிறார். உங்கள் மகன் இல்லாத நேரத்தில் அவர் இரவு நேரத்தில் போனில் பேசுகிறார். நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது அவர் அறைக்குச் செல்லுங்கள், அவர் யாருடனோ போனில் பேசுவார் பாருங்கள் என்று தெரிவிக்கிறார் மகாலட்சுமி. ரூபனின் தாயாரும், அவர் மருமகளின் அறைக்கு வெளியே நின்று யாரிடமாவது போனில் பேசுகிறாரா என்று கேட்கிறார். அந்த நேரத்தில், மகாலட்சுமி, ரூபன், மற்றும் அந்தப் பையன் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து ரூபனின் மனைவிக்கு போன் அடிக்கிறார்கள். போன் அடிக்கும் ஒலி, வெளியில் நிற்கும் ரூபனின் தாயாருக்கு கேட்கிறது. போனை எடுத்த ரூபனின் மனைவி, யார் இது இந்த நேரத்தில் என்று எரிச்சலோடு ராங் நம்பர் என்று சொல்லி விட்டு இணைப்பை துண்டிக்கிறார். ஆனால் வெளியில் இருந்த ரூபனின் தாயாருக்கு இந்த விபரம் தெரியாது. போன் மணி ஒலித்ததும் அவர் நகர்ந்து விடுகிறார். மறுநாள் காலை, ரூபனின் தாயார், மருமகளை கடுமையாக கண்டிக்கிறார். எந்தத் தவறும் செய்யாத தன்னை இப்படி கண்டிக்கிறார்களே என்று மனமுடைந்த அந்தப் பெண், தற்கொலைக்கு முயல்கிறார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவர் காப்பாற்றப்பட்டதும், அவரை பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி விடுகின்றனர். பெற்றோர் வீட்டில் இருந்த அந்தப் பெண்ணை மகாலட்சுமி சந்திக்கிறார். “நீ அந்தப் பையனோடு தொடர்பு வைத்திருக்கும் விஷயம் எனக்குத் தெரியும். ரூபனுக்கும் தெரியும். நீ, இத்தனை நாட்கள், இந்தந்த தேதிகளில் அந்தப் பையனோடு ஊர் சுற்றியிருக்கிறாய். செக்ஸ் வைத்திருக்கிறாய். இது எல்லாம் ரூபனுக்கு தெரியும். அவன் உன்னோடு வாழ மாட்டான். ” என்று கூறி விடுகிறார்.
இதற்குப் பிறகு, அந்தப் பெண்ணுக்கு தினந்தோறும் அனாமதேய அழைப்புகள். அந்தப் பெண்ணின் மொபைல் போன், லேன்ட் லைன் என்ற எல்லா இணைப்புகளிலும் அனாமதேய அழைப்புகள். யார் யாரோ நபர்கள் “உனக்கு என்ன ரேட்… எங்க மீட் பண்ணலாம்.. நீ கால் கேர்ள் தானே…” என்று கன்னா பின்னாவென்று பேசுகிறார்கள். அந்தப் பெண் மனமுடைந்து போகிறார். அந்தப் பெண்ணை மன ரீதியாக
உடைக்க வேண்டும் என்று மகாலட்சுமி தொடர்ந்து முயற்சி எடுப்பதாக அமைக்கப்பட்டுள்ள திரைக்கதை, மகாலட்சுமியின் பாத்திரம், பார்வையாளர்கள் மனதை ஆக்ரமித்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண் எப்படியாவது ரூபனைத் தொடர்பு கொண்டு அவருக்கு புரிய வைக்கலாம் என்று தொடர்ந்து முயற்சிக்கிறார். ஆனால் பல தடவைகள் ரூபன் போனை எடுப்பதேயில்லை. ஒரு சில நேரங்களில் எடுத்தாலும், கான்பரன்சில் மகாலட்சுமி இருக்கிறார். இதன் நடுவே, ரூபனின் மனைவிக்கு வேறு ஒருவரோடு கள்ளத்தொடர்பு இருக்கிறது என்ற அடிப்படையில், நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு ரூபன் சார்பில் தொடுக்கப்படுகிறது. அந்த வழக்கில், ரூபனின் மனைவி மீது, அபாண்டமான பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.

அவருக்கு திருமணத்துக்கு முன்பாகவே ஒரு மாணவரோடு தொடர்பு இருந்தது போலவும், திருமணத்துக்குப் பிறகும், அவர் அந்த மாணவனோடு எஸ்எம்எஸ் தொடர்பில் இருந்ததாகவும், அந்த வழக்கில் குற்றம் சுமத்தப்படுகிறது.
இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, ரூபனின் மனைவிக்கு யாரோடு தொடர்பு இருந்ததாக கூறப்பட்டதோ அந்த பையன் நீதிமன்றத்துக்கு வருகிறான். ஒரு கார் அருகே நின்று கொண்டிருந்த அந்தப் பையன், ரூபனின் மனைவியை அழைக்கிறான். ரூபனின் மனைவி அந்தப் பையனிடம் சென்று, ஏன் என் வாழ்க்கையில் விளையாடுகிறாய்.. என்று கேட்கிறார். தூரத்திலிருந்து இதை
மகாலட்சுமி ஒரு ஒளி ஓவியராய் புகைப்படம் எடுக்கிறார். புகைப்படம் எடுத்து, அதை
நீதிமன்றத்தில் மகாலட்சுமி சமர்ப்பிக்கிறார். ஒரு கட்டத்தில் அந்தப் பையனையே நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வைக்கிறார் மகாலட்சுமி. அந்தப் பையனுக்கு இதற்காக ஒரு பெரிய தொகையை கொடுக்கிறார் மகாலட்சுமி. அந்தப் பையன், நீதிமன்றத்தில், எனக்கும் இந்தப் பெண்ணுக்கும் நெடுநாட்களாக தொடர்பு இருக்கிறது. நாங்கள் இருவரும் பல இடங்களில் சுற்றியிருக்கிறோம். ஒன்றாக இருந்திருக்கிறோம் என்று கூறுகிறார். அந்தப் பெண் மனமுடைந்து போகிறார். ஒரு கட்டத்தில் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாகவே வெடித்துக் கதறி அழுகிறார். இந்த மகாலட்சுமி என் புருஷனை வச்சுருக்கா.. அதனாலதான் என் மேல இப்படி அபாண்டமா பழிசுமத்தறா… எப்படியாவது என் புருஷனை என்கிட்ட சேத்து வையுங்க
என்று நீதிபதி முன்பாகவே கதறுகிறார்… இந்த இடத்தில் சோகமான வயலின் பிஜிஎம் வருகிறது. நீதிபதி கண்ணாடியை கழற்றி விட்டு, அந்தப் பெண்ணை பரிதாபமாக பார்க்கும் காட்சி க்ளோசப்பில் எடுக்கப்படுகிறது.

இப்படியே ஒவ்வொரு மாதமும் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வருவதும், அந்தப் பெண் ஆஜராவதும், தொடர்ந்து நடைபெறுகிறது. இத்தனை நாள் அவர் கணவன் ரூபன் திரும்பி வருவார் என்று காத்திருந்த நம்பிக்கை பொய்த்துப் போகிறது. ஒரு கட்டத்தில் அந்தப் பெண் மனம் வெறுத்து, நான் விவாகரத்து தரச் சம்மதிக்கிறேன் என்று எழுதிக் கொடுக்கிறார். விவாகரத்தும் நீதிமன்றத்தால் வழங்கப்படுகிறது. அந்தப் பெண்ணின் கேரக்டர் அத்தோடு ஃபேட் அவுட் செய்யப்படுகிறது. இந்த இடத்தில் அகிரா குரோசாவா, பெல்லினி, போன்ற திரைப்பட உலகின்
ஜாம்பவான்களே வியக்கும் வகையில் திரைக்கதையில் பல்வேறு உத்திகளை புகுத்தியுள்ளார் இயக்குநர். மகாலட்சுமியும் ரூபனும் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் க்ளைமாக்ஸ். ஆனால் விவாகரத்து வழங்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும், ரூபன் மகாலட்சுமி திருமணம் நடைபெறவில்லை.
மகாலட்சுமியும், ரூபனும், தடா சந்திரசேகர் என்ற வழக்கறிஞரிடம் ஜுனியராக பணிபுரிந்து, இவர்கள் எல்லோருக்கும் சேர்த்து கொட்டிவாக்கத்தில் தனித்தனியான வீடுகள் கட்டப்பட்டு வருவதெல்லாம், ஆங்கில படத்தில் வருவது போல பின்னால் காட்டப்படுகிறது. இந்த இரண்டு பேர் ஏழு காதல் திரைப்படம் ரசிகர்களிடையே எப்படிப்படட வரவேற்பை பெறப்போகிறது… இது உலக சினிமா என்று கொண்டாடப்போகிறார்களா ?இல்லை ஆபாசத் திரைப்படம் என்று காறி உமிழப்போகிறார்களா என்பதை வைத்தே தமிழ்த் திரைப்பட உலகின் எதிர்காலம் அமைந்துள்ளது. இசை படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இது போன்ற ஒரு ஏழு கோண காதல் கதையை காப்ரியேல் மார்க்வேஸ் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள் கூட எழுதவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா, இந்தப் படத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், “என்னுடைய ஸீரோ டிகிரி நாவலில் இருந்து பல காட்சிகள் இந்தப் படத்தில் திருடப்பட்டிருக்கின்றன. ஆனாலும் இது ஒரு கொண்டாடப்பட வேண்டிய ஒரு படம். இதே படத்தை பொலிவிய மொழியில் எடுத்திருந்தால், ஆஸ்கார் நிச்சயம். தமிழில் எடுக்கப்பட்டதால், அம்பாசிடர் கார் கூட கிடையாது. இந்தப் படத்தைப் பற்றி

சிறப்பாக ஒரு ஆய்வுக் கட்டுரை எழுத உள்ளேன். என்னுடைய அக்கவுன்ட் நம்பர் என்னுடைய இணைய தளத்தில் உள்ளது. அதில் பணத்தைப் போட்டு விட்டு ரெமி
மார்ட்டினோடு வந்து என்னைப் பார்க்கவும்” என்று தெரிவித்தார். இணைய உலகைப் பொறுத்தவரை, இந்தப் படம் உலக படமா… உல்லாச படமா என்பதில் கடும் கருத்து
வேறுபாடு நிலவுகிறது. உல்லாச பட ரசிகர்கள் ஒரு புறம் இந்தப் படத்தை
கொண்டாடுகிறார்கள். ஆனால் இது ஒரு மிகப்பெரிய பண்பாட்டுச் சீரழிவு என்று மற்றொரு புறம் இந்தப் படத்தின் மீது கடும் விமர்சனமும் உள்ளது.

கான்ஸ் திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலுக்கு இந்தத் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டபோது, பிரபல இயக்குநர் சோடர்பெர்க், இத்திரைப்படத்தின் இயக்குநரைப் பார்த்து, மொத்தம் எட்டு காதல் என்று சொல்லியிருக்கிறீர்களே… ஆனால் எப்படிக் கூட்டிப் பார்த்தாலும் ஏழு காதல்தானே வருகிறது என்று கேள்வி எழுப்பினார். அவருக்கு பதிலளித்த இயக்குநர், படத்தின் இறுதியில், கதாநாயகி மகாலட்சுமியின் தாயாரும், தம்பியும் வரதட்சிணை கொடுமை வழக்கில் கைதாவார்கள். அப்போது அவருக்கு உதவுவதற்காக, வந்து இணைகிறார் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார். இந்த கிருஷ்ணகுமாரும், மகாலட்சுமியும், தடா சந்திரசேகர் தொடங்கிய புதிய வழக்கறிஞர் சங்கத்தில் நிர்வாகிகள். இந்த புதிய சங்கத்தை காரணம் காட்டி, கிருஷ்ணகுமார், அடிக்கடி அலுவலகத்திலேயே தங்கி விடுவார். இப்படி ஒரு நாள் தங்கியிருந்தபோது, காலை ஆறு மணிக்கு அலுவலகம் வந்த கிருஷ்ணகுமாரின் மனைவி, கையும் களவுமாக, கிருஷ்ணகுமார் மற்றும் மகாலட்சுமியை பிடித்து, அந்த கட்டிடமே அதிரும் அளவுக்கு இருவரையும் பின்னிப் பெடலெடுப்பார். இப்படி ஒரு காட்சி எடுக்கப்பட்டு படத்தின் நீளம் கருதி பின்னால் வெட்டப்பட்டது என்று தெரிவித்ததும், ஸ்டீவன் சோடர்பர்க், அந்தக் காட்சியை படத்தின் க்ளைமாக்ஸாக வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இரண்டு பேர் ஏழு காதல், காதல் காவியமா இல்லை கழுவி ஊத்துன ஓவியமா என்பதை ரசிகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.