ஹரப்பா நாகரீகத்தை போன்று தமிழகத்தில் 2500 வருடங்கள் பழைமையான நாகரீகம்

சங்க காலத்துக்கு முந்தைய தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு — மனஸ் சென் குப்தா

தமிழ்நாட்டில் சங்க காலத்துக்கு முந்தைய நாகரிகத்தின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் ஹரப்பாவில் உள்ளதுபோல கழிவுநீர் அமைப்பும் உள்ளது.

Shivganga-768x507

தென்னிந்தியாவில் சங்க காலத்துடன் தொடர்புடைய ஓரிடத்தில் அகழ்வாய்வு செய்த தொல்பொருள் ஆய்வாளர்கள், பண்டைய நாகரிகத்தின் அடையாளங்களைக் கண்டறிந்துள்ளனர். இதன் கழிவுநீர் அமைப்பு, சுமார் 8000 ஆண்டுகள் பழமையான சிந்து சமவெளி நாகரிகத்தின் அமைப்பை ஒத்திருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தின் சந்தைப்புதூர் கிராமத்தின் கீழடி பள்ளை பகுதியில் சுமார் 3000 புராதனப் பொருட்கள் கிடைத்துள்ளன. வாள்கள், அம்புகள், முத்திரைகள், இரும்பு மற்றும் தாமிரத்தில் செய்த ஆயுதங்கள், நகைகள், எழுத்தாணிகள், பாத்திரங்கள் ஆகியவையும் இதில் அடங்கும். அந்தக் காலத்தின் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கிய போர்ப்படைக் குடியினர் இங்கே வாழந்திருக்கிறார்கள் என்று புலனாகிறது.

இந்த இடம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது (கிமு 500) என்றும், பாண்டியர் காலத்தைச் சேர்ந்த்து என்றும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை கருதுகிறது.

அதாவது, வடக்கே பிம்பிசாரரின் ஹர்யங்கா வம்சம் உருவாகும் முன்பே, புத்தரின் காலத்தில் தெற்கே திராவிட நாகரிகம் செழித்திருந்தது என்பதை இது காட்டுகிறது.

Keezhadi-2
Keezhadi-3

தமிழ்நாட்டின் இந்தத் தொல்பொருள் ஆய்வுப்பகுதியின் குறிப்பிடத்தக்க அம்சம் அதன் கழிவுநீர் அமைப்பாகும். சுட்ட களிமண் குழாய்களைக் கொண்டு நிலத்துக்கடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, ஹரப்பா பகுதியில் உள்ளதை ஒத்திருக்கிறது. “கழிவுநீர் அமைப்பு ஹரப்பா நாகரிகத்தின் அமைப்பை ஒத்திருக்கிறது” என்றார் தொல்பொருள் ஆய்வுத் துறையின அதிகாரி ஒருவர்.

இந்தக் குடியிருப்புப் பகுதி, வர்த்தகர்கள் பயணத்திற்காகப் பயன்படுத்திய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருந்த்து என்பதை இங்கே கிடைத்துள்ள முத்திரைகள் காட்டுகின்றன.

Keezhadi-768x510
Sword

“பண்டைக்கால கட்டுமான அமைப்பு சிதையாத நிலையில் கிடைப்பது மிகவும் அரிது. இந்தக் கண்டுபிடிப்பு சங்க கால நாகரிகத்தைப் பற்றி மேலும் தகவல்களை அளிக்க உதவும்” என்றார் அவர்.

பாடநூல்களில் தரப்படும் தமிழ்நாட்டு வரலாறு சங்க காலத்திலிருந்தே (கிமு 3ஆம் நூற்றாண்டு முதல் கிமு 4ஆம் நூற்றாண்டு) துவங்குகிறது. அதற்கும் முன்னதாக, கிமு 3ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் வடபகுதி மௌரியர்கள் வசம் இருந்தது. அசோகர் காலத்துத் தூண்களும் சேர, சோழ, பாண்டிய, சத்யபுத்திர வம்சங்கள் தமிழ்நாட்டின் முதல் ராஜவம்சங்கள் என்று குறிப்பிடுகின்றன.

இந்தக் கண்டுபிடிப்பில் கிடைத்த தொல்பொருட்களின் மூலம் சங்க காலத்துக்கு வெகு முன்பே பண்பட்ட நாகரிகம் செழித்திருந்தது என்று தெரிகிறது.

இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் 2015 முதலாகவே அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொண்டு வந்த்து. ஆரம்பத்தில் கிடைத்த தொல்பொருட்கள் சங்க காலத்தைத் தொடர்புபடுத்தின, பாண்டியர்கள் ரோமானியர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர் என்பதையும் வெளிப்படுத்தின.

Source — http://topyaps.com/pre-sangam-period-civilization?utm_source=Facebook

தமிழாக்கம் — ஷாஜகான்