LGBTQIA+ ஒரு அறிமுகம்

~ மௌலி, முன்னுரை Episode 7, நீலம்

Queer Chennai Chronicles
QCC Blog
5 min readMay 29, 2020

--

LGBTQIA+ ஒரு அறிமுகம் | Moulee | முன்னுரை Episode 7

ஜூன் 2015-ல Facebook profile pictures க்கு rainbow filter ஒண்ணு introduce பண்ணி இருந்தாங்க. USA-ல marriage equality-க்கு சாதகமா அந்த நாட்டு உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்ப celebrate பண்றதுக்காக இந்த rainbow filterஐ Facebook introduce பண்ணாங்க. ஒருசில வாரங்களிலேயே உலகம் முழுக்க இந்த filter roll out செய்யப்படுது. நம்ம ஊர்லயும் நெறயபேரு use பண்ணாங்க. Interesting ஆன fact என்னன்னா, நெறய பேருக்கு இந்த rainbow filter எதுக்கு introduce பண்ணினாங்கன்னு தெரியல. எதுக்கு use பண்ணீங்கன்னு கேட்டா , colourful ஆ இருக்கு, அழகா இருக்குன்னு use பண்ணினோம்னு சொன்னவங்களும் இருக்காங்க. ஒருபாலீர்ப்பாளர்கள் கல்யாணம் செஞ்சுக்கலாம்னு US Supreme Court கொடுத்த தீர்ப்பைக் கொண்டாடத்தான் இந்த filterனு சொன்னபிறகு, நிறைய பேருக்கு அது அதிர்ச்சியா இருந்திச்சு. ஒருசில நாடுகள்ல எதிர்ப்பு கூட தெரிவிச்சாங்க. நம்ம ஊர்ல அதுக்கு முன்னாடியே lgbt நபர்களைப் பத்தி LGBT organisations மற்றும் தனி நபர்கள் பேச ஆரம்பிச்சிருந்தாலும், நம்மளோடeveryday conversationல LGBT நபர்களைப் பத்தியோ எங்களோட உரிமையைப் பத்தியோ பரவலா பேசப்படல.

ஆனா இப்போ சில வருஷமா நாம அடிக்கடி கேக்குற வார்த்தை LGBT. முக்கியமா சமூக வலை தளங்கள்ல ரொம்ப பேசப்படுது.. அப்பப்போ நாம print media, TV news லயும் சொல்லப்படுற ஒரு வார்த்தையா இருக்கு.

சிலபேருக்கு LGBTனா என்னன்னு தெரியும். LGBTனா ‘அந்த மாதிரி இருக்குறவங்க ஆனா முழு அர்த்தமெல்லாம் தெரியாது’ன்னு சொல்றவங்க எல்லாம் இருக்காங்க.

சிலவங்க சலிச்சுக்கிறாங்க, என்னங்க நீங்க LGBTனு சொல்றீங்க, ஆனா இப்போ பின்னால QIA plus அப்டி add பண்ணிக்கிட்டே போறிங்க. ஒண்ணுமே புரியல, கொழப்பமா இருக்குன்னு.

இன்னும் சிலர், இத பத்தி எல்லாம் பேசணுமா? இதெல்லாம் நம்ம ஊருலக் கெடையாது. வெளிநாட்டுக்கு வேணும்னா set ஆவும், நம்ம கலாச்சாரத்துக்கு எல்லாம் ஒத்து வராதுன்னு சொல்றாங்க. இப்படி சொல்றவங்களுக்கு நான் கொஞ்ச நேரம் கழிச்சு பதில் சொல்றேன், பிரச்சினை இல்ல.

அதுக்கு முன்னாடி LGBTQIA பத்தி தான் இன்னிக்கு பேசப் போறேன்.

மொதல்ல நாம LGBTனா என்னன்னு பாப்போம்.

L — Lesbian அதாவது ஒருபாலீர்ப்பு கொண்ட பெண்

G — Gay — ஒருபாலீர்ப்பு கொண்ட ஆண்

T — transgender — திருநர் — திருநங்கை, திருநம்பி

B — Bisexual — இருபாலீர்ப்பு கொண்ட பெண் அல்லது ஆண். அதாவது attraction towards more than one gender. திருநர் உட்பட பெண், ஆண் மீது ஈர்ப்பு கொண்டவங்க. சிலவங்க இதை Pan sexual நு சொல்லுவாங்க.

Lesbian, Gay, Bisexual இந்த அடையாளங்கள் sexual orientation அப்டின்னு சொல்றோம். அதாவது, பால் ஈர்ப்பு. நமக்கு யார் மேல romantic or sexual or both attraction வருதுன்னு சொல்றது. ஒரு ஆணுக்கு பெண்மேல மட்டுமோ, ஒரு பெண்ணுக்கு ஆண் மேல மட்டுமோ வர romantic and (or) sexual ஈர்ப்புக்கு பேர் heterosexual — அதாவது எதிர்பாலீர்ப்பு.

இப்போ திருநர் என்ற வார்த்தை முன்னாடி சொன்ன மாதிரி, திருநங்கை மற்றும் திருநம்பி அப்டின்னு ரெண்டு பாலடையாளங்களை உள்ளடக்கியது. . திருநங்கைன்னா பிறப்புல மத்தவங்களால ஆணாக அடையாளப்படுத்தப்பட்டு இப்போ தங்களை பெண்ணா அடையாளப்படுத்துறவங்க. திருநம்பின்னா பிறப்புல மத்தவங்களால பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டு இப்போ தங்களை ஆணா அடையாளப்படுத்துறவங்க.

I — Intersex — பன்முக பால்பண்பு கொண்டவங்க. பால்பண்புன்னா Englishல sex characteristics, அப்டின்னு சொல்றோம். அதாவது ஆண், பெண் பாலின அடையாளங்கள தீர்மானிக்குற உடல் அமைப்பைத்தான் sex characteristicsனு சொல்றோம். population ல சுமார் 1%-2% பிறக்குறவங்களுக்கு நாம ஆண், பெண்னு சொல்ற உடல் அமைப்பு கட்டத்துக்குள்ள இல்லாம இருக்கும்.. சில intersex persons கு வெளிய தெரியுற பாலின அமைப்பைத் தாண்டி chromosomes இல்ல உடல் உள்ள இருக்க பாலினம் சார்ந்த உறுப்புகள் மாறுபட்டு இருக்கும். Intersex — அதாவது பன்முகப்பால்பண்பு உடையவர்கள் தங்களை ஆணாகவோ , பெண்ணாகவோ அல்லது திருநராகவோ அடையாளப்படுத்தலாம்.

A — Asexuals — அதாவது பாலீர்ப்பு அற்றவர்கள். இவங்களுக்கு யார் மேலயும் sexual attraction இருக்காது. ஆனா romantic attraction இருக்கும், இல்லன்னா ரொம்ப ரொம்ப rare ஆ தான் attraction இருக்கும்.

இது நம்ம ஊர்ல பிரம்மச்சரியம்னு சொல்றோம் இல்ல, கண்டிப்பா அது கிடையாது. அதாவது, sex ல ஈடுபாடு உண்டு- ஆனா நான் sex வச்சுக்க மாட்டேன்னு சொல்றவங்க இல்ல.

இவங்களுக்கு இயல்பிலேயே sex ஈர்ப்பு இருக்காது. அத அவங்க late ஆ, சில experiences க்கு அப்புறம் கூட realise பண்ணிருக்கலாம்.

ஒரு lesbian woman, இல்ல gay man, இல்ல ஒரு bi person, ஒரு transgender person, ஒரு hetero person கூட asexual ஆ இருக்கலாம்.

அதாவது மத்த people மேல romantic ஈர்ப்பு இருக்கலாம் but sexual ஈர்ப்பு இருக்காது.

Q — Questioning அல்லது Queer சொல்றோம். Questioning னா , ஒருத்தவங்க தங்களோட பாலீர்ப்பு, அல்லது பிறப்புல மத்தவங்களால அடையாளப்படுத்தப்பட்ட பாலினத்தை கேள்விக்குள்படுத்துறாங்க. Simple ஆ சொல்லணும்னா தங்களோட அடையாளத்தை தீர்மானமா இது தான்னு சொல்ற இடத்துக்கு பயணிச்சுட்டு இருக்காங்க.. இவங்க confuse ஆனவங்க இல்ல. It’s just that இந்த சமூகம் வரையுற கட்டத்தை கேள்விக்குள்ளாக்குறவங்கன்னு வச்சுக்கலாம்..

Q also stands for Queer. Queer என்ற வார்த்த ஒரு umbrella term ஆ use பண்ணப்படுது. அதாவது நான் முன்னாடி சொன்ன LGBTIA அடையாளத்தை ஏத்துக்குறவங்களும் சரி, இல்ல இந்த அடையாளங்கள் என்னை define பண்ணலன்னு சொல்றவங்களும் Queer என்ற வார்த்தையை use பண்றாங்க. Queer என்ற வார்த்தை தமிழ்ல சில LGBTQIA மக்கள் பால்புதுமையினர்னு சொல்றோம். அதாவது பால் மற்றும் பாலீர்ப்பு அடையாளங்களை இவ்ளோ தான்னு definete ஆ இல்ல, நமக்குத் தெரியாத அடையாளங்கள் நிறைய இருக்கு, அப்படி வார்த்தைகள் இல்லாத அடையாளங்களை உள்ளடக்கவே , ஒரு dynamic ஆன, தன்னைத் தானே புதுப்பிச்சுக்குற வார்த்தையா பாக்கப்படுது பால்புதுமையினர்.

For example எனக்கு binary gender அடையாளங்கள் வேண்டாம், that is, ஆண், பெண், இல்ல திருநங்கை, திருநம்பி அடையாளங்கள்ல என்னை அடையாளப் படுத்திக்கல. நான் இந்த ஈர்முறைக்கு அப்பாற்பட்டவர்னு சொல்றவங்க non-binary னு தங்களை அடையாளப்படுத்திப்பாங்க. Breaking the binary னு simple ஆ சொல்லலாம்.

இப்போ இங்க சொல்லப்பட்ட அடையாளங்கள் எல்லாமே valid ஆன identities தான். Just because நாம ஒரு சில அடையாளங்களை மட்டும் தெரிஞ்சு வச்சு இருக்குறதால நமக்கு தெரியாததெல்லாம் இல்லங்குறது இல்ல.

Queer என்ற வார்த்தை சொன்னேன்ல. இப்படி தான் English speaking countries ல சில decades முன்னாடி எதிர்பாலீர்ப்பு உடையவங்க — ஆண் பெண் என்ற அடையாளத்த மட்டுமே recognise பண்ணவங்க , மத்த எல்லாரையும் Queer nu சொன்னாங்க. Queer னா ஆங்கிலத்துல “strange” னு அர்த்தம். அப்போ LGBTQIA மக்களுக்கு இது ஒரு வசைச் சொல்லா தான் இருந்துச்சு. பின்னால LGBTQIA உரிமைக்கு போராடுறவங்க இந்த வார்த்தையை reclaim பண்ணிட்டாங்க. இப்போ இது ஒரு positive term, அதே வேளைல LGBTQIA movementல ஒரு political term ஆகவும் use பண்ணப்படுது. பால்புதுமையினர்னு ஒரு வார்த்தை சொன்னேன்ல, தன்னைத் தானே புதுப்பிச்சுக்குற term, அதே மாதிரி english ல define பண்ணப்பட்ட அடையாளங்கள இருக்கறவஙக இல்ல இந்த அடையாளங்கள் என்ன குறிக்கலனு சொல்ரவங்களும் தங்களை queerனு அடையாளப்படுத்திக்கறோம்.

சிலவங்க இந்த LGBTQIA அடையாளங்களை மாற்றுப் பாலீர்ப்பு, பாலினம்னு சொல்லுவாங்க. That is alternate gender and sexualities.

என்னய்யா இவ்ளோ குழப்பமா இருக்கு. ஏன் complicate பண்ணிக்குறேங்கன்னு கேக்குறவங்களுக்கு என்ன சொல்லலாம்னா, இது ஒரு நபரோட அடையாளம். நமக்கு புதுசா இருக்குறதால இதை நாம நிராகரிக்குறது சரி இல்ல.

சிலவங்க male — female; heterosexual — homosexual கு நடுவுல வர identities ஆ மத்ததுன்னு கேக்குறதும் உண்டு.

ஒரு exampleகு சொல்லணும்னா ஒரு நாளை இப்போ எடுத்துக்கிட்டோம்னா இரவு, பகல் இருக்கு. அதே நாள்ல மதியம், சாயந்தரம், முற்பகல், பிற்பகல்னு நிறைய வேளைகள் இருக்கு. இந்த எல்லா வேளையுமே ஒரு நாள்ல இருக்கு. ஆனா ரெண்டு வேளையை mix பண்ணினது இன்னொரு வேளை கிடையாது. They are their own time period which falls on a spectrum. அதே மாதிரிதான் மேலே சொன்ன அடையாளங்களும். இப்போ பார்க்க bisexual என்னவோ heterosexuality — homosexuality க்கு நடுவுல இருக்குற மாதிரி இருக்கும், but உன்னிப்பா பாத்தோம்னா, bisexuality is its own identity. அதே மாதிரிதான் transgender identity கூட. ஆண், பெண்ணுக்கு நடுவுல இல்ல, but திருநர் ஒரு தனி அடையாளம்.

அட போப்பா இதெல்லாம் English வார்த்தைங்க. இந்த identities எல்லாம் இறக்குமதி பண்ணப்பட்டதுன்னு சொல்றவங்க இருக்காங்க. English as a language நம்ம நாட்டுக்குள்ள கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்ன தான் வந்துச்சு. அப்படி பாத்தா நாம use பண்ற பல அன்றாட வார்த்தைகள் இல்ல expressions இதுக்கு முன்னாடி இல்லாமப் போகல. Language exchange நடக்கும்போது நமக்குள்ள சில வார்த்தைகளை பரிமாற்றம் செய்துக்குறோம். அதுக்காக அதெல்லாம் முன்னாடியே இல்லன்னு ஆகாது.

நம்ம சுத்தி இருக்குற மக்களை, சமூக சூழலைப் பாக்குற விதத்தை தீர்மானிக்குற சக்தி ஒரு மொழிக்கு இருக்கு. அதே மாதிரி ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை எப்படி பாக்குறோம்ங்குறது அந்த சமூகத்தை என்ன வார்த்தைய வச்சு refer பண்றோம்ங்குறதுல இருக்கு. சரியான பதத்தை use பண்ணும்போது அதோட precise ஆன அர்த்தத்தை தெரிஞ்சுக்கும்போது நம்மளோட பார்வையும் மாறுது. அதே நேரத்துல அந்த சமூகத்துமேல நமக்கு இருக்குற தப்பான அபிப்ராயம் மாறுரதுக்கான வழி இருக்கு. அதே நேரத்துல மொழி daily evolve ஆகிட்டு தான் இருக்கு. வார்த்தைகளும் அதனுடைய அர்த்தமும் நம்முடைய சமூக சூழலுக்கு ஏத்த மாதிரி evolve ஆகிட்டு இருக்கு.

நம்மோட இலக்கியங்கள்ல, புனைவுக்கதைகள்ல எல்லாம் ரொம்ப குறைவா தான் references இருக்கு. அதே மாதிரி நம்மளோட பேச்சு வழக்குல Queer persons-ஐ இழிவாக பேசுற நிறைய சொல் தமிழ்ல இருக்கு. Positive representation னு பாத்தா இல்லவே இல்லன்னு தான் சொல்லணும். ஆனா இதெல்லாம் நம்ம நாட்டுக்கு புதுசுன்னு சொல்றவங்க கொஞ்சம் யோசிச்சுங்கன்னா, நம்ம நாட்டுல இல்லாத நபர்கள குறிக்க நம்ம மொழியில வசைச்சொற்கள் மட்டும் எப்படி வந்துச்சுன்னு பாக்கணும். ஒரு சமூகத்த பெரும்பாலும் வசை சொற்களா மட்டுமே use பண்ணப்பட்டு இருக்காங்க, அவங்கள பத்தின positive representation மற்றும் அவங்களோட இருப்பு நம்முடைய வரலாற்றுல erase பண்ணப்பட்டு தான் இருக்கணும். அப்படி record பண்ணாலும் positive ஆ record பண்ணப்படல.

அதே போல செரி இந்த அடையாளம் எல்லாம் இருக்கு சொல்றீங்க, அப்போ ஏன் மறஞ்சு வாழுறீங்க?, இல்ல ஏன் கொழப்பமா இருக்கீங்கன்னு கேக்குறவங்களும் இருக்காங்க.

இப்போ பாத்தீங்கன்னா நாம ஒரு கட்டமைப்புக்குள்ள தான் வாழுறோம். ஒரு ஒரு காலகட்டத்துல அந்த கட்டமைப்பை நாம கேள்வி கேக்குறோம். கேள்வி கேக்குறது எங்க start ஆகுதுன்னா, ஒண்ணு நம்ம உரிமையைப்பற்றி பேசும்போது, ரெண்டு நாம empower ஆகும்போது. அடுத்து நாம இப்டி ஒடுக்கப்பட்ட இல்ல மறுக்கப்பட்ட அடையாளங்களைப்பத்தி பேசுறதுக்கான சமூக சூழல் உண்டாகும் போது . கடந்த 80 வருஷமாத்தான் உலக அளவுல LGBTQIA உரிமைகளைப்பத்தி பேச ஆரம்பிச்சு இருக்கோம். India ல தோராயமா கடந்த இருபது வருஷமா தான் பேச ஆரம்பிச்சு இருக்கோம். அப்படி பாக்கும்போது LGBTQIA உரிமையில இந்தியா கொஞ்சம் பின்தங்கி தான் இருக்கு.

அப்படி இருக்கும்போது இந்த conversations ஐ முன்னெடுக்கும்போது நமக்கு முதல்ல வார்த்தைகள் தேவைப்படுது. அந்த வார்த்தைகள LGBTQIA உரிமைகள்ல கொஞ்சம் முன்னாடி இருக்க நாட்டோட மொழியை நாம எடுத்து, நம்ம சமூகத்துக்கு தேவையான அளவுல உபயோகிச்சுக்கிறோம். இது LGBTQIA மக்களின் உரிமையைப் பேசுற முதல் அடின்னு வச்சுக்கலாம்.

~*~*~

--

--