
உலகின் முதல் ஹீலியம் ஹார்ட் ட்ரைவ்!
WD நிறுவனத்தைச் சேர்ந்த HGST உலகின் முதல் ஹீலியம் ஹார்ட் ட்ரைவை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘6 TB Ultrastar He6’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஹார்ட் ட்ரைவ்தான் இப்போது சந்தையில் உள்ள 3.5 இஞ்ச் ட்ரைவ்களிலேயே அதிக அளவு ஞாபக சக்தி கொண்டது!
இப்போது நாம் பயன்படுத்துகிற வழக்கமான ஹார்ட் ட்ரைவ்களில் உள்ள Platterகள் அனைத்தும், காற்று நிரப்பப்பட்ட பகுதியில் சுழலுகின்றன. அதற்குப் பதிலாக, இந்த ஹார்ட் ட்ரைவில் உள்ள Platterகள் ஹீலியம் நிரப்பப்பட்ட பகுதியில் சுழலும். ஹீலியத்தின் அடர்த்தி காற்றின் அடர்த்தியில் 14%தான் என்பதால், உராய்வு மிகவும் குறைவு, ஆகவே, குறைந்த மின் சக்தியில் மிகுந்த செயல்திறனோடு இயங்கும், மற்ற பிரச்னைகளும் வெகுவாகக் குறையும் என்கிறது HGST.
அதுமட்டுமில்லை, மற்ற ஹார்ட் டிஸ்க்களில் 5 Platterகள் உள்ள இடத்தில், இங்கே 7 Platterகளைப் பொருத்தமுடியும். இதில் உள்ள ஹீலியம் கசியாதபடி, குளிர்வூட்டும் திரவம் ஹார்ட் ட்ரைவினுள் நுழைந்துவிடாதபடி மிகப் பாதுகாப்பான hermetic seal தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
HGSTயின் இந்த முயற்சி, ஒரு மிக முக்கியமான முதல் படி எனலாம். இது வெற்றியடைந்தால் இன்னும் பல புதுமையான படைப்புகள் வெளிவரும் என்கிறார் அந்நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவுத் தலைவர் ப்ரென்டன் காலின்ஸ். ‘இதன்மூலம் Shingled magnetic recording (SMR), heat assisted magnetic recording (HAMR) உள்ளிட்ட பல தொழில்நுட்பங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்படும்!’
ஆனால், ஒருவேளை ஹீலியம் வாயுவை நாம் சுவாசிக்க நேர்ந்துவிட்டால்?
அது ஒரு பெரிய பிரச்னை இல்லை. ஒரு பலூனில் இருக்கும் ஹீலியம் அளவைவிட இதில் குறைவாகதான் இருக்கிறது!
Netflix, CERN, Huawei உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்கள் இந்த ஹீலியம் ஹார்ட் ட்ரைவைப் பயன்படுத்தித் திருப்தி தெரிவித்துள்ளன. அதன்பிறகும் உங்களுக்குச் சந்தேகம் எனில், இது ஐந்து வருட வாரன்டியுடன் கிடைக்கிறது!
Email me when Tamil News publishes stories
