ட்விட்டர் பங்குகளை எப்படி வாங்குவது?
பங்குச் சந்தையில் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் IPO முறையில் விற்பனைக்கு வரவிருக்கின்றன என்பது எல்லாருக்கும் தெரியும். அந்தப் பங்குகளை நாம் வாங்க முடியுமா? எப்படி?
1. ப்ரோக்கரேஜ் நிறுவனங்கள்வழியே வாங்குவது
Goldman Sachs, Morgan Stanley, J. P. Morgan Chase, Bank Of America, Merrill Lynch, Deutsche Bank ஆகிய வங்கி நிறுவனங்கள்தான் ட்விட்டரின் IPOவை இயக்கவிருக்கின்றன. இவர்களுடைய ப்ரோக்கரேஜ் நிறுவனங்களில் நீங்கள் வாடிக்கையாளராக இருப்பின், அவர்கள் மூலமாக ட்விட்டரின் பங்குகளை வாங்கலாம்.
பெரும்பாலான ஆன்லைன் பங்கு வர்த்தக நிறுவனங்கள் ட்விட்டரின் பங்குகளை விற்கக்கூடும். நீங்கள் அவற்றை வாங்க விரும்புவதாக அவர்களிடம் முறைப்படி பதிவு செய்துகொள்ளுங்கள். பின்னர் கிடைக்கும் பங்குகளின் அடிப்படையில் அவர்களே உங்களைத் தொடர்புகொண்டு பேசுவார்கள்.
3. ம்யூச்சுவல் ஃபண்ட்வழியாக வாங்குவது
அநேகமாக எல்லாப் பெரிய ம்யூச்சுவல் ஃபண்ட்களுக்கும் ட்விட்டரின் பங்குகள் கிடைக்கும். ஆனால் இன்னும் பங்குகள் விற்பனை தொடங்காத சூழ்நிலையில் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த விவரங்களும் இல்லை.
IPO முடிந்த மறுதினம் பொதுச் சந்தையில் பங்குகள் விற்பனைக்கு வரும். இதற்குமுன் நாம் பார்த்த 3 வழிகளில் $23 முதல் $25 வரையிலான விலைக்குப் பங்குகள் கிடைக்கும். பொதுச் சந்தையில் அதைவிடக் கூடவோ, குறையவோ இருக்கலாம் என்பதை நினைவில் வையுங்கள்.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் IPOவில் ஆரம்பப் பங்கு விலை மிகவும் அதிகமாக இருந்தது. பின்னர் அது சமநிலைக்கு வருவதற்குப் பல மாதங்கள் ஆனது. அதுபோல ட்விட்டருக்கும் நிகழலாம்.
ஆகவே, இதுதான் உங்களுடைய முதல் பங்கு மார்க்கெட் அனுபவம் என்றால், அவசரப்படாதீர்கள். கவனித்துப் பின்னர் பங்குகளை வாங்குங்கள்!
Email me when Tamil News publishes stories
