Google Helpouts — புதிய சேவையை அறிமுகப்படுத்துகிறது கூகுள்


இன்றைக்குப் புதிய விஷயங்களைப் பழகிக்கொள்ள விரும்புகிற யாரும் கூகுளைதான் நாடுகிறார்கள். ஒரு க்ளிக்கில் எல்லாம் நம் விரல் நுனிக்கு வந்துவிடும்!

இதன் அடுத்தகட்டமாக, கூகுள்+ ஹெல்ப்அவுட்ஸ்’ என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்துகிறது கூகுள். இதில் பல துறை சார்ந்த நிபுணர்கள் வீடியோ வழியாக நமக்குத் தங்களுடைய நுட்பங்களைச் சொல்லித்தருவார்கள், நாமும் அவர்களிடம் சந்தேகம் கேட்டு விளக்கம் பெறலாம்.

கூகுள் நிறுவனம் ஏற்கெனவே சிறப்பாக வழங்கிவரும் ‘ஹேங்க்அவுட்’ தொழில்நுட்பத்தின்கீழ் இயங்கும் இந்தப் புதிய சேவைக்காக, பல்வேறு நிபுணர்களைத் தொடர்புகொண்டுவருகிறார்கள். இவர்கள் இலவசமாகவோ ஒரு குறிப்பிட்ட தொகைக்கோ தங்களுடைய சேவைகளை வழங்குவார்கள்.

இதனை உபயோகப்படுத்திக்கொள்ள விரும்புகிறவர்களிடம் கூகுள்+ கணக்குமட்டும் இருந்தால் போதும். எந்தத் துறையில் எந்தெந்த நிபுணர்கள் உள்ளார்கள் என்று பார்த்து தங்களுடைய விருப்பப்படி தேர்ந்தெடுக்கலாம். பின்னர் அந்த நிபுணருடன் அவரவர் வசதிப்படி கம்ப்யூட்டரிலோ ஸ்மார்ட்ஃபோனிலோ தொடுதிரைக் கணினியிலோ வீடியோவழியாகப் பேசலாம்.

கூகுளுக்கு முன்பே, அமேசான் (Mayday one-on-one Video Help), மேஸ்ட்ரோமார்க்கெட், க்ரியேட்டிவ்லைவ் போன்ற பல சிறிய, பெரிய தளங்கள் இதுமாதிரியான வீடியோ நிபுணர் சேவைகளை வெவ்வேறுவிதங்களில் அறிமுகப்படுத்தியுள்ளன. இவைதவிர கான் அகாதெமி, கோர்ஸெரா போன்ற பல நிறுவனங்கள் வழங்கும் வீடியோ வகுப்புகள் (Massive Open Online Courses: MOOCs) கணிசமான மக்களை ஈர்த்துவருகின்றன.

Email me when Tamil News publishes stories