வாணியம்பாடியில் பிளாஸ்டிக் (சைனா) முட்டைகள் விற்பனை?!நகராட்சி அதிகாரிகள் அதிரடி ஆய்வு. முட்டைகள் பறிமுதல்:
வாணியம்பாடி பிப் 20 :
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி முஸ்லிபூர் பகுதியை சேர்ந்தவர் ஹபீப்கான். இவர் கச்சேரி சாலையில் உள்ள ஒரு முட்டை கடையில் முட்டைகளை வாங்கி வீடிற்கு கொண்டு சென்றார்.அங்கு வீட்டில் உள்ளவர்கள் முட்டையை சமைத்த போது அது மிகவும் கெட்டியாகவும்,ரப்பர் போலவும் இருப்பதை கண்டு அதிச்சி அடைந்தனர். உடனடியாக முட்டைகளை அந்த கடைக்கு எடுத்து சென்று திருப்பி கொடுத்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.


அதன் பேரில் நகர் நல அலுவலர் அஜிதா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சீனிவாசன், அலி ஆகியோர் கச்சேரிரோடு சந்திப்பில் ஆற்றின் ஓரமாக மினி வேன் மற்றும் தள்ளு வண்டியில் வைத்து விற்கப்பட்டிருந்த முட்டை கடையில் சோதனை மேற்கொண்டனர். மேலும் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த முட்டைகள் கைப்பற்றி சைனா முட்டைகள் தான என பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர்.


இதுதொடர்பாக அதிகாரி டாக்டர் அஜீதா கூறுகையில் வாணியம்பாடி நகரில் பிளாஸ்டிக் முட்டைகள் விற்கப்படுவதாக தொடர்ந்து பொது மக்கள்யிடம் இருந்து புகார் வந்தது. இதையடுத்து முட்டை கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. முட்டைகள் பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. மேலும் நகரில் உள்ள அனைத்து முட்டை கடைகளிலும் சோதனை மேற்கொள்ளப் படும் என்று தெரிவித்தனர்.
வாணியம்பாடியில் பிளாஸ்டிக் முட்டைகள் விற்கப்படுவது காட்டு தீபோல பரவியதால் நூற்றுக்கணக்கான் பொதுமக்கள் அந்த கடைக்கு முன்பு கூடினர் .இதனால் பெரும் பரபரபப்பு ஏற்பட்டதால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்களை களைந்து போக செய்தனர்.
சீன நாட்டு போலிப் பொருட்களைப் புறக்கணிக்கும் ஹிந்தியம் தமிழகத்திடம் தள்ளிவிடுவது போல் இருக்கிறது. நாம் இன்னும் ஹிந்திய ஒருமைப்பாடென கூவிக்கொண்டிருக்கிறோம். இனிமேலும் விசத்தை உண்டு வாழ்வதை விடுத்து நம் தமிழர் பாரம்பரிய உணவுகளை உண்போம். உள்ளூர் உழவர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்குவோம்.
மறக்க வேண்டாம்: இம்மாதிரியான பிரச்சினைகள் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்திலே அதிகம் உருவாக்கப்படுகிறது.

