“நம் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் நமது தேசத்திற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்; அவர் நம் தேசத்தின் பெருமை”

நானும் எல்லா இளைஞர்களை போல அரசியல் பிடிக்காது என்றும், அது ஒரு சாக்கடை என்றும் அதில் நாம் ஈடுபட கூடாது என்றும் எண்ணி வந்தேன். ஆனால் நமது பிரதமர் மோடி அவர்கள் செய்த சாதனைகளை தெரிந்து கொண்ட பின்பு அரசியலை நேசிக்கும் ஒருவனாக மாறி உள்ளேன்.

திரு.மோடி அவர்கள் விவசாயிகளின் தோழன் மற்றும் நவீன விவசாய சிந்தனை உடையவர்:-

 • மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் விவசாயிகளிடம் கரும்பு வாங்கியதில் ரூ.17,000 கோடியை நிலுவையில் வைத்தது. மோடி அவர்களின் தலைமையி்லான பா.ஜ.க(BJP) அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களில் சுமார் ரூ.15000 கோடி விவசாயிகளிடம் திரும்ப செலுத்தி உள்ளது.

கடந்த பட்ஜெட்டில் உள்ள விவசாயிகளுக்கான முக்கிய அம்சங்கள்:-

 • 28.5 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு பாசன வசதிகள் செய்து தர நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 • மொத்தம் 89 திட்டங்கள் மூலம் 80.6 லட்சம் ஹெக்டேர் நீர் பாசன வசதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான முதல் கட்ட நிதி ரூ.17000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 • NABARD மூலமாக நீண்ட கால நீர் பாசன வசதிக்காக ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 • “தூய்மை இந்தியா” திட்டத்தின் மூலம் நகரங்களின் குப்பைகள்/கழிவுகள் மூலம் இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம் உருவாக்கப்படும். இதன் மூலம் சுமார் 55% நிலம் நம்மாழ்வார் கனவு கண்டது போல் இயற்கை விவசாய வசதி பெறும்.
 • விவசாயத்திற்கு இ-சேவை இணையதள வசதி தொடங்கப்படும் என்று அறிவித்து இதை Dr.அம்பேத்கர் அவர்களின் 125-வது பிறந்த தினமான ஏப்ரல் 14-ல் e-NAM என்ற பெயரில் பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்தார். இதன் மூலம் 585 மண்டிகள் online ல் இணைக்கப்பட்டு முறையான விலை விவசாய பொருட்களுக்கு கிடைக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது .
 • இந்த வருடம் வரலாற்றில் முதல்முறையாக விவசாய கடனுக்கு அதிகபட்சமாக ரூ.9 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 • ரூ.15,000 கோடி விவசாய வட்டி சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 • ரூ.5,500 கோடி விவசாய பயிர்காப்பீட்டு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
 • “பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டம்”(Pradhan Mantri Fasal Bima Yojana) சீரமைக்கப்பட்டுள்ளது. இதன்படி மிக குறைந்த சந்தா மூலமாக (1.5 to 2 %) அனைத்து பயிர்களுக்கும் காப்பீடு பெறமுடியும்.

“பிரதமர் எப்பொழுதும் சாதி, மத வேற்றுமைகளை கடந்து செயல்படுபவர்”. சாதி மதங்களை மதிக்க தெரிந்தவர். தீவிரவாதம் மற்றும் நாட்டிற்கு எதிராக செயல்படுபவர்களை கட்டுப்படுத்துபவர்.

 • Sufism மாநாடு பிரதமர் மோடியால் இந்தியாவில் நடத்தப்பட்டது. இதில் உரையாற்றிய திரு.மோடி அவர்கள் “ நமது நாடு என்பது இந்துக்கள் , இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் , கிறிஸ்தவர்கள் , சமணர்கள், புத்த மதத்தினர் , பார்சிகள், மதநம்பிக்கை உள்ளவர்கள் மற்றும் மதநம்பிக்கை இல்லாதவர்கள் அனைவரையும் உள்ளடக்கியதுதான்”.
 • மேற்கு வங்கத்தில் உள்ள கரக்பூர் என்கிற ஊரில் தேர்தல் பரப்புரையின் பொழுது அருகில் உள்ள ஒரு மசூதியில் தொழுகை தொடங்கியது இதை உணர்ந்த திரு.மோடி அவர்கள் தொழுகைக்கு மரியாதை அளிக்கும் விதமாக தனது உரையை நிறுத்தினார்.இது அவர் மற்ற மதங்களின் மீது கொண்ட மரியாதையை காட்டுகிறது.
 • நமது மரியாதைக்குரிய தலைவர் மற்றும் நமது Hero Dr.அப்துல் கலாம் அவர்களின் இறுதி சடங்கிற்கு சென்ற திரு.மோடி அவர்கள் Dr. அப்துல் கலாம் அவர்களின் மூத்த அண்ணன் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
 • நமது நாட்டின் பாரம்பரிய வழக்கமான பெரியவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவது, இதை தான் திரு.மோடி அவர்கள் செய்தார். திரு.மோடி அவர்கள் வேற்று மதங்களுக்கு எதிரானவர் என்றால், அவர் ஏன் வேறு மதத்தவரின் காலில் விழ வேண்டும்?. சிலர் இதை திரு.மோடி அவர்கள் விளம்பரதிற்காக செய்தார் என்கிறார்கள். அது உண்மை அல்ல, ஏனென்றால் இதற்கான HD புகைப்படம் எங்கும் கிடைக்கவில்லை. யாரோ ஒருவர் தனது கைபேசியில் படம் பிடித்துள்ளார், அதை இணையதளத்தில் வெளியிட்டும் உள்ளார். இது தான் உண்மை.
ஒவ்வொரு இந்திய குடிமகனையும் இந்தியனாக நினைகிறார்.
 • திரு அப்துல் கலாம் ஐயாவின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கு பெற வரமுடியாத கலைஞர் மற்றும் ஜெயலலிதா, இந்த அனல் பறக்கும் வெயிலில் வெளியே வந்தது எதற்காக…….? மக்களின் ஓட்டிற்காக மட்டுமே……மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அல்ல.ஆனால் நமது பாரத பிரதமர் தனது அயராத பணிகளுக்கும் இடையில் இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிரதமர் மோடி அவர்கள் வெளிநாடுகளுக்கு தேவையற்ற சுற்றுப்பயணம் செல்கிறார் என்று கூறுகிறார்கள்:-

 • திரு.மோடி அவர்கள் எதற்காக வெளிநாடுகள் செல்கிறார்……? அவர் செல்வது அந்நிய முதலீட்டை ஈர்பதற்காக மற்றும் அண்டை நாடுகளின் உறவை பலப்படுத்துவதற்காகவும் தான்.
 • இந்திய ரிசர்வ் வங்கி (RBI)யின் கணக்குப்படி $34.9 பில்லியன் அந்நிய முதலீடு ஏப்ரல் 2014 முதல் மார்ச் 2015 வரை ஈட்டப்பட்டுள்ளது. இது 61.7% கடந்த ஆண்டை விட அதிகம்.
 • கீழ் கண்ட படங்கள் மோடியின் அரசு ஆட்சிக்கு முன் மற்றும் அவரது ஆட்சிக்கு பின் அண்டை நாடுகளுடனான நல்லுறவை காட்டுகிறது.
 • ஏமன் நாட்டு போரின் பொழுது இந்தியர்களை சுலபமாக மீட்டதுடன் அண்டைய நாடுகளுக்கும் (America) உதவியது.
 • “மேக் இன் இந்தியா”(MAKE IN INDIA ) திட்டத்தின் மூலம் ரூ.1.20 லட்சம் கோடி எலக்ட்ரானிக்ஸ்(Electronics) உற்பத்தி -தொழிற்சாலைகளை உருவாக்குவதற்காக முதலீடு செய்ய பல்வேறு நாட்டில் இருக்கும் கம்பெனிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
 • ஜப்பான் (Japan) நாடு வரும் 5 வருடங்களில் $35 பில்லியன் டாலரில் புல்லெட் இரயில் தயாரிக்க முதலீடு செய்யவுள்ளது.
 • ஆஸ்திரேலியா இந்தியாவில் உள்ள அணுமின் நிலையத்திற்கு 500 டன் யுரேனியம் (Uranium) வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
 • இஸ்ரேலுடன் கூட்டு கல்வி ஆராய்ச்சி திட்தத்திற்கு $ 5 மில்லியன் ஒப்பந்தமாகியுள்ளது.
 • கனடாவுடன் அணுமின் நிலையத்திற்கு 3000 மெட்ரிக் டன் யுரேனியம் (Uranium) வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

திரு.மோடி அவர்கள் ஒரு எளிய மனிதர்:

 • திரு.மோடி அவர்கள் குஜராத் மாநிலத்தின் முதல்வராக பதவிவகிக்கும் காலத்தில் தனக்கு வரும் அனைத்து பரிசுப்பொருட்களையும் ஏலம்விட்டு, பெண்குழந்தைகளின் படிப்பிற்கு நன்கொடையாக செலுத்தி வந்தார்.
 • நம் தமிழகத்தில் அமைச்சர்களை அடிமைகளாக வைத்து இருக்கும் போது திரு.மோடி அவர்கள் அமைச்சர்களுக்கு சுய மரியாதையை கொடுத்துள்ளார்.
 • திரு.மோடி அவர்களின் மொத்த சொத்துமதிப்பு வெறும் ரூ1.50 கோடியாகும். இது மற்ற அமைச்சர்கள் மற்றும் முதல் அமைச்சர்களை ஒப்பிடுகையில் பல மடங்கு குறைவு. இதில் அவர் 25 ஆண்டுகளுக்கு முன்னதாக ரூ.1.25 லட்சத்திற்கு வாங்கிய வீட்டின் இப்போதைய மதிப்பு உயர்ந்து ரூ.1 கோடியாக உள்ளது மற்றும் 50 லட்சம் அவர் செய்துள்ள காப்பீடுகளின் மதிப்பு. நமது தமிழகத்தின் முதல் அமைச்சர் மற்றும் முன்னால் முதல் அமைச்சர்களின் சொத்து மதிப்பு பல லட்சம் கோடிகளை தாண்டும் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே…….!.
 • திரு.மோடி அவர்கள் சுதந்திர போராட்ட தியாகி திரு. சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் கார் ஓட்டுனர் ஐயா திரு.நிஜாமுதின் அவர்களிடம் மரியாதை செலுத்தினர்.
 • தமிழகத்தை சேர்ந்த ஒரு அன்னைக்கு “விவசாய முன்னேற்ற மாநாடு-2016" விழாவில் சிறந்த விவசாயி பட்டம் வழங்கினார் திரு.மோடி. அப்பொழுது அவரின் காலில் விழுந்து மரியாதை செலுத்தினர்.
 • “தூய்மை இந்தியா” திட்டத்திற்காக ஒரு அம்மையார் தான் வளர்த்த ஆடுகளை விற்று கழிப்பறை கட்டினார். அவரை கௌரவிக்கும் விதமாக அம்மையாரின் காலில் விழுந்து மரியாதை செலுத்தினார் நமது எளிமையான பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள்.
 • திரு.மோடி அவர்கள் முதல் முறையாக வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்குல் செல்கையில் அதன் படிகளை தொட்டு வணங்கி, அதை “Temple of Democracy” என்று கூறி உள்ளே சென்றார்.
 • பின்பு உரையாற்றிய அவர் “இந்தியாவை தனது தாய் என்றும் பா.ஜ.க தனக்கு மற்றொரு தாய் என்றும், அது ஒரு ஏழை மனிதனான தன்னை பிரதமர் ஆக்கியுள்ளது” என்றும் கூறி கண்ணீர் வடித்தார் .
 • மேடை ஒன்றில் உரையாற்றி கொண்டிருந்த ஒரு அம்மையாருக்கு மைக்கின் உயரத்தை சரி செய்து கொடுத்தார்.எவருக்கு வரும் இந்த பணிவு….?.
 • பாராளுமன்றத்தில் அமைச்சர் திரு.வெங்கையா நாயுடு அவர்கள் உரையாற்றி கொண்டிருந்தார். அப்பொழுது அவ்வழியை கடக்க சென்ற திரு.மோடி அவர்கள்அமைச்சரின் உரைமுடியும் வரை பொருத்து நின்று பின்னர் சென்றார்.இது அவரின் அவை மரியாதையை காட்டுகிறது.
 • திரு.மோடி அவர்கள் எதிர்கட்சி உறுப்பினர்களையும் சமமான ஒரு மரியாதை கொடுத்து மதிப்பவர். “ Together with all, Development for all”(sabka saath sabka vikas) என்ற எண்ணம் கொண்டவர்.

எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் அமைச்சர்கள்:

 • திரு.மோடி அவர்களின் ஆட்சி, சாதாரணமானவர்களும் அமைச்சர்களை தொடர்புகொள்ளும் வகையில் உள்ளது.
 • முக்கியமான அமைச்சர்கள் சமூக வலைத்தளம் மூலம் மக்களுடன் தொடர்பில் உள்ளனர். இதற்கு நானும் ஒரு சாட்சி, நான் இரயில் பயணம் செய்யும் போது, என் உடன் வந்த பயணிக்கு நடந்த பிரச்னையை ட்விட்டர்(Twitter) மூலம் தெரிவித்தேன் அதற்கு உடனடியாக பதில் மற்றும் உதவி அளிக்கப்பட்டது.
 • வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி.சுஷ்மா சுவராஜ் அவர்கள் ட்விட்டர்(Twitter) மூலம் வெளிநாட்டில் சிக்கிக்கொண்ட ஒருவரின் உறவினருக்கு பதில் அளித்துள்ளார்.
 • திரு. சுரேஷ் பாபு (இரயில்வே அமைச்சர்) அவர்களுக்கு ஒருவர் தண்ணீர் பாட்டில் விலை அதிகமாக விற்றதாக ட்விட்டர்(Twitter)-ல் தகவல் தெரிவிக்க, அதற்கு உடனடியாக பதில் மற்றும் பணத்தை திருப்பி செலுத்தும்படி செய்தார்.

திரு.மோடி அவர்களின் திட்டங்கள்:

 • மத்திய அரசின் அனைத்து திட்டங்களின் பெயரிலும் “இந்தியா” என்று உள்ளது. ”Digital இந்தியா, Make In இந்தியா, Clean இந்தியா”……etc. தமிழகத்தின் திட்டங்கள் எல்லாம் சுய விளம்பரம் தேடும் வகையில் உள்ளது(அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், கலைஞர் காப்பீட்டு திட்டம்,கலைஞர் தொலைக்காட்சி).

கிராமபுர வளர்ச்சி திட்டங்கள்:

 • திரு.மோடி அவர்களின் கருத்து “ நாட்டின் வளர்ச்சி என்பது கிராமபுர வளர்ச்சியையும் உள்ளடக்கிய ஒன்றாகும்.
 • தீன்தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா ( Deendayal Upadhyaya Gram Jyoti Yojana ) மூலம் இடைவிடாத மற்றும் அனைத்து ஊருக்கும் மின்சாரம் வழங்கப்பட உள்ளது.
 • MGNREGA மூலம் 100 நாள் வேலை வாய்ப்புக்கு ரூ. 38,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 • 100 நாள் வேலை வாய்ப்புக்கான ஊதியம் 10% உயர்த்தப்பட்டுள்ளது, இதன்மூலம் 185ரூ என்பது 203ரூபாயாக உயர்ந்துள்ளது.
 • கிராமபுர சாலை வசதியை கவனத்தில் கொண்டு NABARD மூலம் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திரு.மோடி அரசின் அம்சங்கள்:

 • கடந்த 2 வருடமாக ஊழல் இல்லாத ஒரு மத்திய அரசு ஆட்சி நடந்து வருகிறது.
 • திரு.மோடி அவர்களின் ஆட்சிக்கு பிறகு இலங்கை இராணுவ படையால் கடந்த 2 வருடமாக மீனவர்கள் யாரும் சுடபடவில்லை, மற்றும் கைதான அனைத்து மீனவர்களும் வெளியுறவுத்துறை மூலம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இதை நான் தமிழர்களுக்கு கிடைத்த வெற்றியின் தொடக்கமாக உணர்கிறேன்.
 • குஜராத்தில் விவசாய கால்வாய்கள் அதிகமாக உள்ளது,அதற்கு மேலே சூரிய மின்சக்தி ஆலை குழு, 1 கிலோ மீட்டருக்கு 1 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதுடன் ஒவ்வொரு ஆண்டும் 1 கோடி லிட்டர் தண்ணீர் ஆவியாவதில் இருந்து தடுக்கப்படுகிறது.
 • வறட்சி காரணமாக மராத்வாடா பகுதியில் லாத்தூர்க்கு முதல் கட்டமாக 5,௦௦,௦௦௦ லிட்டர் தண்ணீர் இரயில் மூலம் கொண்டு செல்லப்படுள்ளது. கீழே உள்ள படம் வறட்சி காலத்தில் திரு. மோடி அவர்களின் செயலும் அதற்கு கீழே திரு. அஜித் பவாரின் (இழிவான)அலட்சியத்திற்கும் உள்ள ஒரு எடுத்துக்காட்டு.
 • குஜராத்தில் திரு.மோடி அவர்கள் முதல்வராக இருந்த போது அமலுக்கு வந்த மதுவிலக்கு இன்றும் அங்கே கடைபிடிக்கப்படுகிறது.ஆனால் தமிழகத்தில் இப்போது தான் அதை பற்றிய விழிப்புணர்வு வந்துள்ளது……ஆனால் திரு.மோடி அவர்கள் அதை பல ஆண்டுகளுக்கு முன்னரே செய்துள்ளார்.
 • நதி நீர் இணைப்பு திட்டம் பற்றி இன்னும் நாம் பேசிக்கொண்டு மட்டுமே இருக்கின்றோம். ஆனால் திரு. மோடி அவர்கள் முதல் முறையாக குஜராத்தில் நதி நீர் இணைப்பு செய்து சாதனை படைத்துள்ளார்

சமையல் எரிவாயு மானியம் ( LPG Subsidy)

 • இதுவரை சுமார் 1 கோடி அளவிலானவர்கள் LPG (or) சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். இதன் மூலம் மிச்சப்படுத்தப்பட்ட பணத்தின் மூலம் கிராம மற்றும் ஏழை மக்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு வழங்கப்பட உள்ளது.
 • சமையல் எரிவாயு(LPG)க்கான மானியம் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.

திரு.மோடி அவர்களின் காப்பீட்டுத் திட்டங்கள்:

நமது மோடி ஜி அவர் இந்தியாவிற்கு சிறிந்த திட்டங்களை செய்து வரும் ஒரு உண்மையான தலைவர்.

நம் பிரதமரின் நல்ல செயல்கள் மற்றும் திட்டங்கள் பிடித்து இருந்தால் அவருக்கு ஆதரவு கொடுத்து இந்தியாவை வளப்படுத்துவோம். நம் பிரதமரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால்,ட்விட்டர்(twitter)-ல் என்னை பின்பற்றவும் https://twitter.com/VeluNarain

கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வரவேற்கிறேன்:

பெயர்: வேலு.

Mail Id : vadivelu_mani@yahoo.co.in

WhatsApp :+91 97 40 28 58 58.

Like what you read? Give Velu Narain a round of applause.

From a quick cheer to a standing ovation, clap to show how much you enjoyed this story.