Velu Narain
Tamilnadu Politics
Published in
1 min readMar 1, 2016

--

2016–17ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்.

  • விவசாய திட்டங்களுக்கு கடந்த நிதியாண்டில் 8.5 லட்சம் கோடி, நடப்பு நிதியாண்டில் ரூ.9 லட்சம் கோடி ஒதுக்கீடு.
  • நீர் பாசனத்தை மேம்படுத்த நபார்டு வங்கி மூலம் ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பிரதம மந்திரி பயீர்க்காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த ரூ.5,500 கோடி ஒதுக்கீடு.
  • கிராமங்களை இணைக்கும் வகையில் 2.25லட்சம் கிலோ மீட்டருக்கு சாலைகள் அமைக்கப்படும்.
  • சாலை திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ 97,000 கோடி நிதி ஒதுக்கீடு.
  • அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் குறைந்த செலவில் டயாலிசிஸ்சேவை.
  • 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ 38,500 கோடி நிதி ஒதுக்கீடு.
  • வேளாண் பொருட்களுக்கான ஆன்லைன் சந்தை அம்பேத்கர் பிறந்தநாளில் தொடங்கப்படும்.
  • விவசாயிகளின் வருமானம் 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கப்படும்.
  • மத்திய பட்ஜெட்டில் விவசாயத் துறைக்கு ரூ 35,984 கோடி ஒதுக்கீடு.
  • 3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் நிலம் இயற்கை விவசாயத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
  • 10 அரசு மற்றும் 10 தனியார் கல்வி நிறுவனங்கள் உலகத் தரத்தில் மேம்படுத்தப்படும்.
  • புதிய தொழிலாளர்களுக்கு சேமநல நிதியில் 8.3 சதவீதத்தை அரசு வழங்கும்.
  • புகையிலைப் பொருட்களுக்கான உற்பத்தி வரி 15% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை!.
  • கருப்புப் பண விவரங்களை தெரிவிக்கும்போது 45 விழுக்காடு வரி மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
  • ரூ.10 லட்சத்திற்கு மேல் கார் வாங்கினால் ஒரு சதவீத செலவு வரி விதிக்கப்படும்.
  • முதன் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு வருமான வரியில் ரூ.50 ஆயிரம் வரை சலுகை.
  • வீட்டு கடனுக்கான வட்டியில் ரூ.2 லட்சமாக இருந்த வரிச் சலுகை ரூ.2.5 லட்சமாக உயர்வு.
  • அரசு பொதுத்துறை வங்கிகளுக்கு கூடுதல் மூலதனமாக ரூ.25000 கோடி வழங்கப்படும்.
  • ஊரக ஏழைக் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு வழங்கும் புதிய சுகாதார திட்டம் செயல்படுத்தப்படும்.
  • சாலைப் போக்குவரத்து துறை மற்றும் ரயில்வே துறைக்கு ரூ.2.80 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

--

--