செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து

செவியுணவிற் கேள்வி யுடையார்: கேள்விகள் கேட்டு அதற்கான விடையை அறிந்துகொண்டு ஆனந்தப்படுவபர் (இங்கு பிறரை கேட்ட்கும் கேள்வியை மட்டுமின்றி, தன்னைத்தானே கேட்டு, சிந்தித்து விடையை அறிந்துக்கொள்வதும் கூட அடங்கும்);

அவியுணவின் ஆன்றாரோ: அவியுணவு — நெருப்பில், ஹோமத்தீயல் இடும் நெய், அன்னம் போன்ற ஆஹுதியை உட்கொள்ளும் ஆன்றோர் — தேவர்கள்;

தனக்கு அறியாத விஷயங்களை அறிந்துகொள்ளும் அறிவுப்பசி கொண்டு, பிறரை கேட்டோ, தானாகவே சிந்தித்து விடை அறிந்துகொண்டோ அறிவுப்பசியை தீர்துக்கொள்ளும் மானுடர் நிலவுலகில் இருந்தாலும், ஹோமத்தீயல் இடும் நெய், அன்னம் போன்ற ஆஹுதியை உட்கொள்ளும் மேலுலகில் உள்ள தேவர்களுக்கு ஈடாகவே கருதப்படுவர்.

Men, who are hungry of knowledge and satisfy their hunger by listening to the wise, or focus their thought and finds knowledge, though are from this earth, they will be considered as equals to those who are lords of heaven.

Like what you read? Give Karthigeyan a round of applause.

From a quick cheer to a standing ovation, clap to show how much you enjoyed this story.