தொழில்நுட்ப்ப கல்வி

கார்த்திகேயன் ஸ்ரீநிவாஸன்

Karthigeyan
Tamizh Publication
3 min readAug 29, 2013

--

கடந்த 30 வருடங்களில் தொழில்நுட்ப்ப வளர்ச்சியும், உலகமயமாக்குதலும் பல நாடுகளின் வர்த்தக-பொருளாதார வடிவத்தையே மாற்றிவிட்டன. இக்காரணத்தால் உலகளவில் தொழிலாளிகள் சந்தை எதிர்பாரா நன்மைகளையும், மாற்றத்தையும், சவால்களையும் சந்தித்தது. இதில் முக்கியமான நன்மை 900 பதின்லக்ஷம் (million) (10 பதின்லக்ஷங்கள் = ஒரு கோடி) மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இம்முன்னேற்றத்தால் முன்னோடி நாடுகள் புதிய தொழில்நுட்ப்பங்களில் முதலீடு செய்தும் வளர்ந்துவரும் நாடுகளின் தொழிலாளிகளை பயன்படுத்தியும் தங்களது உற்பத்தியை பெருக்கிக்கொண்டனர். அதே சமயம் வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள தொழிலாளிகள் தங்கள் வருமானங்களில் முன்னேற்றம்மும் வேலை வாய்ப்பும் பெற்றனர்.

1980 முதல் 2010 வரை உலக தொழிலாளிகளின் எண்ணிக்கை 120 கோடியிலிருந்து 290 கோடிகளாகியுள்ளது. இதற்க்கு முக்கிய காரணம் மக்கள் எண்ணிக்கை பெருக்கும், விவசாயத்திலிருந்து மாறி தொழிற்சாலைக்கு ஏற்பட்ட முக்கியத்துவமுமே ஆகும். இந்த மாற்றத்தினால் 62 கோடி மக்கள் ஏழ்மையிலிருந்து விடுபட்டு முன்னேறியுள்ளனர். அவ்வாறு பயன்பெற்றதில் சீனாவும் இந்தியாவும் பெருவிடத்தை பெற்றுள்ளது.

உலக தொழிலாளிகள் வர்த்தகத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தை அறிய 96 விழுக்காடு பங்களிக்கும் 70 நாடுகள் ஆராயப்பட்டது. அவ்வாறு ஆராய அந்நாட்டின் தொழிலாளிகளின் வயது, சராசரி கல்வி, வருமானம் ஆகியவை கொண்டு அந்நாட்டின் தொழிலாளிகளின் உற்பத்தித்திறன் மற்றும் உற்பத்தி பரிசோதிக்கப்பட்டது. பின் 70 நாடுகளை 8 விதமாக பிரிக்கப்பட்டன. இதில் இந்தியாவும் சீனாவும் தனி தனி பிரிவாகவும், வளர்ந்த நாடுகள் 3 பிரிவாகவும், வளரும் நாடுகள் 3 பிரிவாகவும் பிரிக்கப்பட்டன. வளர்ந்த நாடுகளில் தொழிலாளிகளின் வருமானம் அதிகமாகவும் அதே சமயம் அவர்களுடிய நடுவண் வயதும் அதிகமாகவும் (சுமார் 45-ஆகவும்) உள்ளன. வளரும் நாடுகளில் தொழிலாளர் வர்கத்தின் நடுவண் வயது குறைவாகவும் (சுமார் 20-25) வருவாயும் குறைவாகவே உள்ளது. இந்தியாவும் சீனாவும் இவ்விரண்டு பிரிவுகளுக்கும் நடுவே உள்ளது. சீனாவை காட்டிலும் இந்தியா வருமானத்திலும், வயதிலும் குறைவாக உள்ளது. முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த எட்டு பிரிவின் கல்வி திறனும் உற்பத்தி திறனும் தான். இவ்விரண்டிலும், இந்தியா இதர 3 வளரும் நாடுகளின் பிரிவுகளை போலவே, சீனாவை காட்டிலும் மிக பின்தங்கியும் உள்ளது.

இந்த கருத்தை உள்வாங்கி நாம் நமது பல சிந்தனைகளை மாற்றினால் முன்னேற வாய்ப்பு இருக்கிறது. இன்றைய வளர்ந்த நாடுகளில் தொழில்நுட்ப்ப விபுனர்களுக்கு கெடுபடியான கிராக்கி உள்ளது. ஏன், இந்தியாவிலும் வளர்ந்த நகரங்களில் தொழில்நுட்ப்ப விபுனர்களுக்கு கெடுபடியான கிராக்கி இருக்கத்தான் செய்கிறது. ஒரு புழம்பர் (Plumber / ப்ளம்பர்), தட்சர் வேலைக்கு நிபுணர்கள் கிடைப்பது சாமான்யமாக இல்லையே.

இந்த சூழ்நிலை அறிந்து, சீனா தொழில் நுட்ப்ப கல்வியில் கவனம் செலுத்தி உற்பத்தியை பெருக்கி உலகின் உற்பத்திக்கு உறைவிடமாக மாற்றிவிட்டது. இன்று நாம் உபயோகபடுத்தும் முக்காலுக்கும் மேலான இயந்திரங்கள்- சிறு ஊசி முதல் கணினி வரை, மருத்துவ கருவிகளாகட்டும், ஏவுகனைகளாகட்டும், மோட்டார் வாகனங்களாகட்டும் அனைத்திலும் உள்ள உபரி பாகங்கள் சீனாவிலிருந்தே ஏற்றுமதி ஆகின்றன. ஆகையால், 30 வருடங்களுக்கு முன்னால் 60 விழுக்கடுக்கும் கீழ் ஏழ்மையில் இருந்த சீன நாடு 2030-க்குள் 60 விழுக்காடு மக்கள் தொகையை பொருளாதாரத்தில் நடுத்தரத்திற்கு முன்னேற்றி விடும் என ஆய்வுகள் கூறுகின்றன. அதே 30 ஆண்டுகளில் இந்தியா என்னவாகும், என்னவாக ஆகவேண்டும் என நாம் சிந்தித்து இப்பொழுதே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவை தொழில் நுட்ப்ப கல்வியை பரப்புவதும், தரமான உற்பத்தியை செய்வதுமே ஆகும்.

1. இன்றைய பள்ளி செல்லும் மாணவர்களில் பலருக்கு தொழில்நுட்ப்ப உயர் கல்வியில் (டிப்ளோமா) விழிப்புணர்வு இல்லை.

2. அனைவரும் பட்டப்படிப்பு படித்து ஒரு அலுவலகத்தில் வேலை செய்யவே விருப்பப்டுகிரார்கள். இதை விருப்பம் என்று கூற முடியாது. மற்ற துறையில் உள்ள அருமை பெருமை அறியாமையால் விளைந்தவையே. இக்காரணத்தால் பட்டம் பெற்றும் சிலர் அலுவலர்களாக இல்லாமல் இதர வேலைகளை செய்கிறார்கள். திண்டாடுகிறார்கள்.

3. என்ன படித்தால் என்னவாகலாம் என்ற அறிவை நம் பாட திட்டங்கள் தெளிவுபடுத்தாதது வருத்தப்படவேண்டிய விஷயமாகும். இதை ஒரு பாட திட்டமாக ஏழாம்-எட்டாம் வகுப்பில் சேர்த்தால் நலம்.

4. மதிப்பெண் குறைவாய் எடுப்பவர்களே டிப்ளோமா படிப்பார்கள் நல்ல மதிப்பெண் எடுப்பவர்கள் அதை படிக்க மாட்டார்கள் என்ற அறிவீணத்தை மாற்ற வேண்டும். இவ்வாறான தவறான கருத்தால் தொழில்நுட்ப்பத்தில் நாட்டம் உள்ளவர்கள் நாட்டமின்றி பட்டம் படிக்கச்சென்று மேலோங்க முடியாமல் தடுமாறுகிறார்கள்.

5. பெற்றோர்களும், பள்ளியும், அரசும் இதை மனதில் வைத்து மானக்கர்களுக்கு நன்முறையில் ஆலோசனை வழங்க ஏற்பாடு நடத்தவேண்டும்.

6. வெளிநாடுகளில் வேலை செய்யும் நம் நாட்டு தொழில்நுட்ப்ப நிபுணர்களை கொண்டு பல விழிப்புணர்வு சொற்பொழிவு செய்ய வேண்டும்.

7. வெளிநாடுகளில் ஊடகங்கள் தொழில்நுட்ப்பத்தின் முக்கியத்துவம் செய்யும் வகையில் பல நிகழ்ச்சிகள் செய்து விழிப்புணர்வையும், ஆர்வத்தையும், கௌரவத்தையும் ஏற்படுத்துகின்றனர். அவ்வாறு நமது ஊடகங்களும் செய்ய முன்வரவேண்டும்.

நம் வாழ்வு நம் கையில். மாணாக்கர்களும், பெற்றோரும், பள்ளியும், அரசும், சமுதாயமும், சிந்தித்து செயல்பட்டால் நாளை நமதே, இந்த நாளும் நமதே.

மேற்கோள்: மேக்கின்சே குளோபல் இன்ச்டிடுட் (McKinsey Global Institute) (மேக்கின்சே உலகளாவிய காரணாலயம்- மே.உ.கா) ஜூன் 2012-ல் வெளியிட்ட (The world at works) என்ற அராய்ச்சி கட்டுரை. மே.உ.கா 1990-ஆம் ஆண்டு, உலக வளர்ச்சியை தெளிவுற அறிந்துகொள்வதற்க்காங்க நிறுவப்பட்ட ஆராய்ச்சி காரணாலயம (institute) ஆகும். ஆராய்ச்சியின் முடிவில் தெரியப்படும் கருத்துக்களை கொண்டு தொழில், சமுதாயம் வளர்ச்சி, அரசாங்கம், ஆகிய துறைகளில் இருப்பவர்கள் தாங்கள் எடுக்கும் முடிவுகளை செரிவர தெளிவாக எடுக்க பயன்படடுத்துவார்கள்.

--

--

Karthigeyan
Tamizh Publication

Budding Entrepreneur, Credit Bureau Professional, Banking Technologist.