சோஸ்த்ரங்கள்

Karthigeyan
Tamizh Publication
Published in
2 min readAug 27, 2013

சோஸ்திரம் என்பது என்ன?

சோஸ்திரம் என்பது சனாதன தர்மம் (இன்றைய நாளில் ஹிந்து) முறையில், இறைவனை வழிபட, புகழ் பாட, குணாதிசயங்களை எடுத்துரைக்க, நம்மை வழிமுறை படுத்த இயற்றிய ஸ்துதிகள் (துதிகள்).

சோஸ்திரங்களை இரண்டு முக்கிய கிளைகளாக பிரிக்கலாம்.

1. புராண காலம் அல்லது வேத காலம், அல்லது சங்க காலம்
2. பிற்காலம்

1. புராண காலம் அல்லது வேத காலம், அல்லது சங்க காலம்

புராண காலங்களில் தோன்றிய முக்கியமான ஆதித்ய ஹ்ருதயம் வால்மீகி இராமாயணதில் ஒரு பகுதி, விஷ்ணு சஹஸ்ரநாமம் மகாபாரதத்தில் ஒரு பகுதி, லலிதா சஹஸ்ரநாமம், லலிதா த்ரிசதி, தேவி மகாத்மியம் இவை மூன்றும் மார்கண்டேய புராணத்தில் ஒரு பாகம், இவ்வாறு பலவை புராண கால இலக்கியங்களில் இருந்து வந்தவை.

2. பிற்காலத்தில் வந்த சோஸ்திரம்

பபிற்காலத்தில பல சான்றோர்கள் பல சோஸ்திரம் எழுதினர். ஆதி சங்கரரால் அவை பிரபல்யம் பெற்றன. இந்த சமயத்தில் தமிழகத்தில் ஆழ்வார்கள், நாயன்மார்கள் தோன்றினர். அவ்வாறே துளசிதாசர், கபீர் தாசர், சுர் தாசர், ஜெயதேவர் போன்ற பல ஆன்மீக சிரோன்மனிகள் பாரதம் முழுவதும் தோன்றினர், அவர்கள் பக்தியால் பல சோஸ்திரங்களை எழுதினர்.

சோஸ்திரங்களை கீழ் வருமாறு பல வகைகள் உண்டு.

1. நாமாவளி—நாமவளியில் சஹஸ்ரநாமம் ( ஆயிரம் நாமங்கள் கொண்டவை), திர்சதி (முன்னூறு நாமங்கள்), அஷ்டோத்ரம் (நூற்றியெட்டு நாமங்கள்), சதகம் (நூறு நாமங்கள்), ஷோதாஸ (பதினாறு நாமங்கள்), த்வாதஸ (பன்னிரெண்டு நாமங்கள்)
2. அஷ்டகம்—எட்டு பதிகள் கொண்டவை
3. கவசம்—மனமும், உடலையும், பற்றுக்களை (குழந்தை, சொத்து, உத்தியோகம்) காக்க வேண்டும் துதிகள் — உதாரணமாக, கந்தர் சஷ்டி கவசம், நாராயண கவசம்
4. தசகம்—பத்து பத்திக்களை கொண்டவை
5. பஞ்சகம்—ஐந்து பத்திக்களை கொண்டவை
6. ஷக்தம்— ஆறு பத்திக்களை கொண்டவை
7. சப்தகம்— ஏழு பத்திக்களை கொண்டவை
8. பஞ்சதசி—ஐம்பது பத்திக்களை கொண்டவை
9. பஞ்ச சதி—ஐநூறு பத்திக்களை கொண்டவை
10. ச்தவராஜா—ஒரு குறிப்பிட்ட தேவதையின் இராஜ சோஸ்திரம்
11. புஜங்க சோஸ்திரம்—புஜங்கம் என்றால் பாம்பு என்று பொருள். சம்ஸ்க்ருதத்தில், வல்லின எழுத்தும், மெல்லின எழுத்தும் வார்த்தைகளை மாறி மாறி வருமானால் அவை பாம்பை போல நெளிந்து நெளித்து வருவது போல் கேட்க்கும். அவ்வாறு அமைக்கப்பட்ட சோஸ்திரம், புஜங்க சோஸ்திரம் எனப்படும். ஆதி சங்கரர் இயற்றிய சுப்ரமணிய புஜங்க சோஸ்திரம் மிகவும் பிரசித்தி.
12. தண்டகம்—வரிகளின் நீள அளவில் கட்டுப்பாடு இல்லாதவை தண்டகம். காளிதாசர் இயற்றிய ஷியாமளா தண்டகம் முக்கியமானது.
13. கரவலம்ப சோஸ்திரம்—இறைவன் தான் திருக்கரங்களை நீட்டி அருள் புரிய வேண்டும் என்ற கருத்துடன் அமைப்பெற்றவை.
14. சுப்ரபாதம்—திருப்பள்ளி எழுச்சியை (தூக்கத்தில் இருந்து எழுப்புதல்) குறித்து வருபவை
15. லஹரி—லஹரி என்றால் அலை என்று பொருள். வரிகள், சப்தங்கள் அலை அலையாக அமையப்பெற்று வரும். ஆதி சங்கரரின் சௌந்தர்ய லஹரி மிகவும் புகழ் பெற்றது.
16. பாசுரம்—ஆழ்வார்கள் இயற்றிவை பாசுரம் என அழைத்தனர்
17. திருவாசகம்—நாயன்மார்கள் இயற்றியவை திருவாசகம் என அழைத்தனர்
18. ஆரத்தி— பூஜை முடிந்து தீபம் சமர்பிக்கும் சமயம் பாடப்படுபவை.
19. சாலீசா— நாற்பது பத்திக்களை கொண்டவை.
20. கத்யம்— உரைநடையாக அமையப்பெற்றவை. இராமனுஜர் எழுதிய கத்ய தரயம் சிறந்தது
21. அபங்— மராட்டிய மொழியில் பந்தர்பூர் பக்தர்களால் இயற்றியவை
22. மங்களம்—-வழிபாடு முடிந்தர்க்கும், அணைத்து நன்மை உண்டாவதர்க்கும் பொதுவாக இருப்பவை

--

--

Karthigeyan
Tamizh Publication

Budding Entrepreneur, Credit Bureau Professional, Banking Technologist.