இன்றைய நாளில் விகடன் தளத்தில் நீங்கள் மிஸ் செய்யக்கூடாத 3 கட்டுரைகள்..!

Vikatan
Vikatan Emagazine
Published in
2 min readJul 3, 2018

ஐ.பி.எல் முடிந்த கையோடு ஃபிஃபா உலகக் கோப்பை தொடங்கிவிட அதுவரை கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்த நாம் திடீர் கால்பந்து ரசிகர்களானோம். மெஸ்ஸி, ரொனால்டோ தவிர்த்து சில வீரர்களின் பெயர்களும், கால்பந்தின் விதிகளும் இப்போதுதான் நமக்குப் புரியத் தொடங்கியிருக்கிறது. கிரிக்கெட்டின் டக்வொர்த் லூயிஸ்போல கால்பந்தில் புரிந்துகொள்ள முடியாத விதிகளில் ஒன்று ஆஃப் சைடு. இடியாப்பத்தைப் பிச்சுப் போட்டதுபோல கொசகொசவென இருக்கும் இந்த விதியை லேயர் லேயராக பிரித்து குட்டி குட்டி அனிமேசன்களோடு பக்கவாக விளக்கும் ஒரு கட்டுரை இன்று விகடன்.காமில் வெளிவந்திருக்கிறது. “மெஸ்ஸிடா… ரொனால்டோடா…” என்று இத்தனை நாள் ஓட்டிக்கொண்டிருந்துவிட்டு “இப்போ ரெண்டு பேருமே இல்லையே என்னடா பண்றது?” என்று கையைப் பிசைந்துகொண்டிருக்கிறீர்களா? இதைப் படித்துவிட்டு இனி “ஆஃப் சைடுடா” என்று சொல்லி சக தோழர்களை மெர்சலாக்குங்கள்.

கட்டுரையைப் படிக்க

அட ஃபுட்பால்ல ஆஃப் சைடைக் கூட நீங்க அந்தக் கட்டுரையைப் படித்து புரிஞ்சுக்கலாம். கட்டுரையாக எழுதி விளக்கினாலும் விளங்க முடியாத ஒரு பிரச்னை ஒன்று இருக்கிறது. அது, நேற்று பிக்பாஸ் வீட்டில் மஹத், ஐஸ்வர்யா, ஷாரிக், யாஷிகாவுக்குள் என்ன பஞ்சாயத்து என்பது. “You are not missing anything. இது அப்படியொன்றும் உலகமகா பிரச்னையில்லை. எனக்கும்தான் புரியவில்லை” என்று சுரேஷ் கண்ணனையே புலம்ப விட்டது இந்த நால்வர் அணி. பிக்பாஸை மிஸ் பண்ணும் வாசகர்கள் பலரும் இந்த தொடரை மிஸ் பண்ணுவதில்லை என்று கமெண்டுகிறார்கள். மமதியின் பிரிவில் வாடும் மும்தாஜ், சென்றாயன், வைஷ்ணவியின் தேர்தல் வியூகம், ஐஸ்வர்யா — யாஷிகாவின் ஊடல், மஹத்தின் கட்டிப்பிடி வைத்தியம் என நேற்று பிக்பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை சுவாரஸ்யமாக அலசும் கட்டுரையை டோண்ட் மிஸ். (குறிப்பா அடைப்புக்குறிக்குள் இருக்கும் குறும்புகளை மிஸ் பண்ணிடாதீங்க)

கட்டுரையைப் படிக்க

தண்ணீர் வணிகப்பொருள் அல்ல நம் உரிமை. ஆனால் கார்பரேட்டுகள் ‘கேன் வாட்டர்’தான் சுத்தமானது என்று நம் மனதில் பதிய வைத்ததின் விளைவு, இன்று நேற்றல்ல… ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே வாட்டர் கேன் பயன்பாட்டில் இந்திய அளவில் சென்னைக்குதான் முதலிடம். சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் வாட்டர் கேன்கள் விற்பனையாகின்றனவாம். உண்மையில் நாம் வாங்கும் குடிநீர் மினரல் வாட்டரா? டீ-மினரலைஸ்டு வாட்டரா? இதை எப்படி சோதிப்பது? டீ-மினரலைஸ்டு வாட்டரை தொடர்ந்து குடிப்பதால் என்ன ஆகும்? மருந்து வாங்கும்போது எக்ஸ்பயரி டேட் பார்த்து வாங்குவதைப் போல தண்ணீர் பாட்டில் வாங்கும்போதும் ஒரு முத்திரையைப் பார்த்து வாங்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நாம் தினமும் குடிக்கும் ‘கேன் வாட்டர்’ பற்றிய உண்மைகளை விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை.

கட்டுரையைப் படிக்க

--

--