இன்றைய நாளில் விகடன் தளத்தில் நீங்கள் மிஸ் செய்யக்கூடாத 3 கட்டுரைகள்..!

Vikatan
Vikatan Emagazine
Published in
2 min readJul 16, 2018

பார்க்கப் பார்க்கச் சலிக்காது கடல்.. ரயில்… யானை… என்பார்கள். பார்க்க மட்டுமல்ல அது பற்றிய கதைகளும் படிக்கச் சலிக்காது. ஒரு பக்கம் யானை பற்றிய தொடர் விகடன்.காமில் செம ஹிட் என்றால் இன்று இந்த ரயில் பற்றிய கட்டுரை விகடன் ட்ரெண்டிங்கில் ஃபுல் ஸ்பீடில் தடதடத்தது. இந்த ரயிலில் என்ன ஸ்பெஷல்? முதல் ஸ்பெஷல் இதன் நீளம். முதல் பெட்டியில் இருந்து நடக்கத் தொடங்கினால் கடைசிப் பெட்டி அடைய நீங்கள் 3 கி.மீ நடக்க வேண்டும். இரண்டாவது ஸ்பெஷல் இது போகும் இடம் பாலைவனம். ஆனால் இந்தக் கட்டுரை ரயிலைப் பற்றியது மட்டுமல்ல. அதில் பயணிக்கும் மனிதர்களைப் பற்றியது. 40 டிகிரி செல்சியஸ் வெயிலில் பாலைவனத்தில் இரும்புத் தாதுக்களின் மீது அமர்ந்து இந்த மனிதர்கள் எதற்காகப் பயணிக்கிறார்கள்? படித்துப் பாருங்களேன்…! https://www.vikatan.com/news/miscellaneous/130947-whats-the-purpose-of-this-long-train-which-runs-in-sahara.html

— -

“எந்த ஹீரோவுடன் நடிக்க விருப்பம்?”

“நடிக்குறதுக்கு வீட்ல எப்பிடி ஓக்கே சொன்னாங்க?”

“சமைக்கத் தெரியுமா?”

பொதுவாக நடிகைகளின் பேட்டி என்றாலே இப்படி சில டெம்பிளேட் கேள்விகள் இருக்கும்தானே. இது எதுவும் இல்லாமல் அரசியல்… நிறம்… சாதி.. பயணம் என சீரியஸ் விஷயங்களைத் தெளிவாகப் பேசியிருக்கிறார் ‘புயல்’. மற்ற படங்களில் இவர் பெயர் அஞ்சலி ‘பாட்டில்’ காலா படத்தில் மட்டும் இவர் பெயர் ‘அஞ்சலி’. அந்த சுவாரஸ்யக் கதையை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

படிக்க: https://cinema.vikatan.com/tamil-cinema/interview/130944-an-interview-with-kaala-actress-anjali-patil.html

“எடப்பாடி அரசைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதால் மோடிக்குத்தான் கெட்ட பெயர். ‘மோடியால்தான் இந்த அரசு நீடித்துக்கொண்டிருக்கிறது’ என்ற விமர்சனத்தை அமித் ஷா கவனத்துக்கும் பா.ஜ.க நிர்வாகிகள் கொண்டுசென்றுள்ளனர். மத்திய அரசின் ’ஒரு நாடு, ஒரு தேர்தல்’ என்ற முயற்சிக்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவிக்கவில்லை. அதன் விளைவுதான் இந்த ரெய்டு” அதிரடி ரெய்டு குறித்து அரசியல் வட்டாரம் சொல்லும் பரபர பின்னணி…!

படிக்க: https://www.vikatan.com/news/tamilnadu/130956-these-are-the-reasons-for-it-raid-explains-thangatamilselvan.html

--

--