இன்றைய நாளில் விகடன் தளத்தில் நீங்கள் மிஸ் செய்யக்கூடாத 3 கட்டுரைகள்..!

Vikatan
Vikatan Emagazine
Published in
2 min readJun 28, 2018

கடந்த ஆண்டைப் போலவே விகடன் தளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் போதே, தினம் தினம் அன்றைய முன்தினம் நிகழ்ச்சியின் சுவாரஸ்யங்களையும், சொதப்பல்களையுயும் அலசும் தொடரைத் திட்டமிட்டோம். இத்தனை நாட்களும் நிகழ்ச்சியின் சின்னச் சின்ன சொதப்பல்களைக் கண்டித்து வந்ததைப் போலவே, நேற்றைய நிகழ்ச்சியில் இடம்பெற்ற பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் காட்சிகளை கடுமையுடன் விமர்சித்து இருந்தோம். கட்டுரையின் தலைப்பில் கூட அந்தக் கடுமையைக் காட்டி இருந்தோம்.
கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததைப் போலவே விகடன் வாசகி சரோஜினியும் “ஆண் அதிகாரம் பெண் இழிவு எல்லாம் கொடி கட்டி பறக்குது…” என குறிப்பிட்டிருந்தார். வாசகர்களிடம் அதிகம் பாராட்டுகளை கைத்தட்டல்களாக வாரிக்குவித்த கட்டுரையும் இதுதான்!

Bigg Boss Tamil

பல வாசகர்களும் கமென்ட்களில் மும்தாஜை அடுத்த ஓவியாவாகக் குறிப்பிடுகிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கர்கள்? வாசகர்களுடன் நீங்களும் உரையாடலாம்.

எஜமானர்கள் முன் பெண் பணியாளர்கள் ஆடும் டாஸ்க்… இது வக்கிரம் பிக்பாஸ்! #BiggBossTamil2

காற்று மாசுபாடு, உலகம் முழுவதும் முக்கியமான பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கில்லை. சமீபத்தில் டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசுபாடு, காற்றின் தரம் குறித்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், ஐரோப்பிய விண்வெளி ஆய்வுமையத்தின் புதிய செயற்கைக்கோள் Sentinel-5P இந்திய நிலப்பரப்பைச் சுற்றிலும் காணப்படும் வளிமண்டலத்தில் ஃபார்மால்டிஹைடின் அளவு குறித்து ஒரு படத்தை வெளியிட்டிருக்கிறது. இந்தப் படம் குறித்தும், ஃபார்மால்டிஹைடு குறித்தும், காற்று மாசுபாடு குறித்தும் இன்று “நிறம் மாறிய இந்தியா… அதிர்ச்சியளிக்கும் செயற்கைக்கோள் புகைப்படம்!” என்ற கட்டுரையை வெளியிட்டிருந்தோம். இந்தப் படத்தில் வடமேற்கு இந்தியப் பகுதியில் மாசுபாடு குறைவாக இருப்பதைக் குறித்தும் அதன் காரணம் குறித்தும் அலசி இருந்தோம்.

இந்தக் கட்டுரைக்கு வாசகர் கிஷோர் தமிழகம் தொடர்பான ஒரு கருத்தை எழுதி இருந்தார். அந்தக் கமென்ட்டை அப்ரூவ் செய்தபோது “அட… ஆமால்ல..!” எனத் தோன்றியது.

போரின் கொடுமையை எப்படியெல்லாம் சொல்ல முடியும்?

வீரயுக நாயகன் வேள்பாரி

வீரயுக நாயகன் வேள்பாரியின் இந்த அத்தியாயம் பொருட்சுவையுடனும் சொற்சுவையுடனும் போரின் கொடுமையை வர்ணித்து எழுதப்பட்டிருக்கிறது. தொடரின் மிக முக்கியமானதோர் அம்சமாக பொற்சுவை — திசைவேழரின் உரையாடல் ஓர் அற்புதம். இந்த அத்தியாயத்தைப் படிக்க சராசரியாக 5 நிமிடம் 20 நொடிகள் ஆகும் என விகடனின் புள்ளி விவரப்பிரிவு சொல்கிறது. உங்களிடம் 5:20 நொடிகள் இருக்கிறதா?

--

--