இன்றைய நாளில் விகடன் தளத்தில் நீங்கள் மிஸ் செய்யக்கூடாத 3 கட்டுரைகள்..!

Vikatan
Vikatan Emagazine
Published in
2 min readJul 4, 2018

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மமதி சாரி நேரே வீட்டிற்கு போய் சோபாவில் சாய்ந்த அடுத்த கணம் அவருக்கு ஒரு போன் கால் வந்தது. யார்னு பாத்தா… அட நம்ம விகடன் நிருபர். சாரியைக்கூட மாற்றியிறாத மமதிசாரியிடம் பிக்பாஸ் அனுபவங்களைப் பற்றி சுடச்சுட ஒரு பேட்டி கண்டோம். இந்த வாய்ப்பு பற்றியும், டாஸ்க் பற்றியும், மும்தாஜ் பற்றியும், மற்ற போட்டியாளர்கள் பற்றியும் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை எக்ஸ்க்ளூசிவாக நம்மிடம் பகிர்ந்துகொண்டார். குறிப்பா அவங்க பாடுன அந்த பாட்டைக் கேட்டு அவங்களுக்கே மீம்ஸ் போடணும்னு ஆசை வந்துச்சாம். அந்தப் பேட்டியை இங்கே படிக்கலாம்.

https://cinema.vikatan.com/bigg-boss-tamil/129700-anchor-mamathi-chari-talks-about-her-bigg-boss-experience.html

“ஹலோ.. என் பேரு வினோத்… உன் பேரு என்ன? ஓ திவ்யாவா?” என்று தனக்குத்தானே பேசிக்கொண்ட வினோத்தை ஞாபகம் இருக்கிறதா? அந்த வினோத்தின் காதலுக்கு இன்றுடன் 15 வயது முடிகிறது. செல்வராகவன் இயக்கத்தில் வந்த ‘காதல் கொண்டேன்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 வருடங்கள் முடிகிறது. நம் எதிர்பார்ப்பு கௌதம் மேனன் காதல் கதையைப்போல் இருந்தாலும், நித்தமும் நாம் அனுபவிப்பது செல்வராகவனின் காதல் கதையைத்தான். செல்வராகவன் படங்களைப் பார்ப்பது, நம்மை நாமே கண்ணாடியில் பார்த்துக்கொள்வதுதான். இதுதான். செல்வாவையும் நம்மையும் பிணைத்துப்போடுகிறது. அப்படி ஒரு படமான ‘காதல் கொண்டேன்’ பற்றிய ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக் இந்தக் கட்டுரை. #15YearsOfKaadhalKonden

https://cinema.vikatan.com/tamil-cinema/129713-15-years-of-kaadhalkondein.html

‘சென்னையில் ஐ.டி ஊழியர் ஒன்பதாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை’

இந்த ஒரு வரி செய்தி அப்படியே கடந்துவிட முடியாமல் கொஞ்சம் பின்னோக்கித் தேடியதில் மாதம் இருமுறை இப்படியான செய்திகள் வருகிறது. ஓ.எம்.ஆரில் சம்பாதிக்கிறார்கள் ஈ.சி.ஆரில் செலவழிக்கிறார்கள் என்பதுதான் ஐ.டி ஊழியர்கள் பற்றிய நம்முடைய பொதுவான எண்ணம். ஆனால் இந்த டேட்டாவைக் கேட்டால் திகைத்துப்போவீர்கள். கடந்த 6 வருடத்தில் இந்தியாவில் தற்கொலை செய்துகொண்ட ஐ.டி ஊழியர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டுகிறது. தமிழகத்தில் 8 ஆயிரத்துக்கும் மேல். கிட்டத்தட்ட 14% பேர். இதன் காரணம் என்னவாக இருக்கும் என்று அலசி, துறை சார்ந்தவர்களின் பேட்டியுடன் வெளிவந்திருக்கும் இந்த டேட்டா ஸ்டோரியை படித்துப் பாருங்கள். ஐ.டி துறை பற்றிய ஒரு முழுமையான பிக்சர் கிடைக்கலாம்.

https://www.vikatan.com/news/health/129707-8-thousand-it-employees-suicide-in-tamil-nadu.html

--

--