"சூப்பர் சிங்கர் செந்தில், நெடுஞ்சாலைத்துறையில் #ITRaids, பிரான்ஸ் அணியில் அகதிகள்"-பின்னணி என்ன? #BestOfVikatan
இங்கு நடப்பது பாஜக-வின் நேரடி ஆட்சி என எதிர்கட்சிகள் கூறிவரும் நிலையில், அதை உறுதிபடுத்தும் வகையில் தமிழக அமைச்சர்களும் அவ்வப்போது பாஜக-வை புகழ்ந்து பாடி வருகின்றனர். சமீபத்தில்கூட அமைச்சர் உதயகுமாரும் தாய் — பிள்ளை போல உறவு கொண்டு மத்திய — மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன என கூறியிருந்தார். அந்த தாய் — பிள்ளை உறவில் விரிசலா? 7 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி கையில் வைத்திருந்த நெடுஞ்சாலைத்துறையில் ஏன் ஐ.டி சோதனை? எடப்பாடிக்கு மிகவும் நெறுக்கமான அந்த ஒப்பந்ததாரரின் கார் ஏன் திமுக பிரமுகர் வீட்டில் நிற்க வேண்டும்..? மோடி எதிர்பார்காத எதிர்ப்பை தெரிவித்த எடப்பாடி..! அதன் தொடர்ச்சியாக ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்… அதனால் பாஜக-வின் எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்துள்ள எடப்பாடி என தற்போதைய தமிழகத்தின் பரபரப்பு அரசியலை முழுமையாக அலசுகிறது இந்த கட்டுரை
“பேய் ஓட்டப்பாடினான்… அதைப் பாத்துட்டு எங்க வீட்டுக்காரர்தான் பயிற்சி கொடுத்தாரு” என்றபடி பேசத் தொடங்கினார் ‘சூப்பர் சிங்கர்’ செந்திலின் அக்கா சித்ரா. அவர்களின் ஊர்க்கதையில் தொடங்கி காதல் கதை வரை செந்தில் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். “காலேஜ் படிக்கும்போது ராஜியை விரும்பறதை என்கிட்டதான் முதல்ல சொன்னான். என் வீட்டுக்காரரும் அவன் இஷ்டத்துக்கு விட்டுருனு சொல்லிட்டாரு. நாங்க தேடிக் கண்டுபிடிச்சுருந்தாலும் இப்படி ஒரு பெண்ணைக் கட்டி வெச்சுருப்போமான்னு தெரியலை.” என்று ராஜலட்சுமி பற்றியும் பேசினார். செந்திலின் அக்கா சித்ராவின் முழுமையான பேட்டி இங்கே
கால்பந்து விளையாட்டு ஒரு சிம்பொனி இசையைப் போல… நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்கள் ஒரே நேரத்தில் ஒன்றாக ஒத்திசைவுடன் இசைத்தால் மட்டுமே ஒரு உன்னத இசையைப் பிசிறில்லாமல் தர முடியுமோ அப்படித்தான் கால்பந்தும். அத்தனை கால்களும் பந்தை நோக்கியே இயங்கிக்கொண்டிருந்தால் மட்டும் அசாத்தியமான ஒரு ஆட்டம் சாத்தியமாக முடியும். இதைச் சாத்தியப்படுத்த கால்பந்தில் வீரர்களுக்கு இடையிலான கூட்டுறவு முக்கியம். உலகக்கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் அகதிகளின் எண்ணிக்கை அதிகம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், பிரான்ஸ் அணியில் அகதி வீரர்களின் எண்ணிக்கை தொடர்பான வரலாற்றையும் ஒரு அணிக்குள் வெவ்வேறு கலாசாரப் பின்னணி கொண்ட வீரர்களிடையே இந்த கூட்டுழைப்பு எப்படி சாத்தியமானது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்றால் இந்தக் கட்டுரையைப் படித்தே ஆக வேண்டும்.
கிரிஸ்மேன் , எம்பாப்வே… — நேற்றைய அகதிகள் இன்றைய சாம்பியன்கள்! #WorldCup2018