“அதிரடி அரசியல் செய்தியும், பின்னணியும்” விகடன் தளத்தில் இன்று நீங்கள் தவறவிடக்கூடாத செய்திகள்

Vikatan
Vikatan Emagazine
Published in
2 min readJun 29, 2018

“குருவியா… காக்காயா… அடுத்த எடத்துல போய் கூடுகட்ட…” என அவர் குரல் கதறுகிறது, கண்ணீர் துளிர்க்கிறது… எங்கே போய் கூடு கட்ட என வார்த்தைகளை முடிக்க முடியாமல் தடுமாற்றத்துடன் அவர் குரல் உடைகிறது. அந்த நொடியில் அவருடைய உடல் மொழி நம்மை என்னவோ செய்துவிடுகிறது.

“தயதயவு செய்து வேண்டாங்க…”

“எங்களுக்கு வேண்டாம்…”

“தேவையில்லை…”

இவை அத்தனையும் மக்களின் குரல், அந்த மண்ணின் மக்களின் குரல்.

புது யுத்தத்தை எதிர்நோக்கி இருக்கும் இந்த நிலத்தின் வரலாற்றைப் பதிவு செய்யும் விதமான ஓர் ஆவணப்படம் தான் “பசுமைவழிச் சாலை — முழு ஆவணப்படம்”

Control Accessed Highway, HIghway Revolt, Autostrade, Autobahn என நெடுஞ்சாலைகளின் வரலாற்றையும் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

தவறாமல் பசுமைவழிச் சாலை குறித்த இந்த ஆவணப்படத்தைக் காணத் தவறாதீர்கள்.

தன் குழந்தைக்கு உணவு முதல் உடை வரை அத்தனையும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் எனத் தேடி தேடி எல்லாம் செய்த ஐஸ்வர்யாவுக்கு ஒரு சந்தேகம் வந்தது, “ஏன் கெமிக்கல் கலந்த சோப்பை குழந்தைக்குப் பயன்படுத்தனும்?” இயற்கை சோப் என கடைகளில் கிடைப்பவைகளிலும் பல கெமிக்கல்ஸ் பயன்படுத்தப்பட்டதைக் கண்டு அதிர்ந்தவர், அதற்குப் பிறகு ஒரு முடிவை எடுத்தார், அந்த முடிவு அவருக்கு என்ன செய்தது? அந்தத் தன்னம்பிக்கை கதை “குழந்தைக்கு கெமிக்கல் இல்லாத சோப் வேண்டும்!’’ — என்ன செய்தார் இந்தத் தாய்?” இதோ கட்டுரையாக விகடன் தளத்தில். வாசகர்களின் பலமான கைத்தட்டல்களைப் பெற்ற கட்டுரையும் கூட இது!

தமிழக பா.ஜ.க தலைவர் பதவியில் இருந்து தமிழிசை சௌந்தரராஜன் நீக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது, அந்தத் தகவல் தவறு என முரளிதர் ராவ் ஒரு ட்வீட் போட்ட பிறகே தமிழக அரசியல் களம் நிதானமடைந்தது. இந்த இரண்டு செய்திகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் ஏற்பட்ட குழப்பத்தைப் போக்குவதற்காக தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை உடனடியாக தொடர்பு கொண்டு பேசினோம். அவருடய அட்டகாசமான பதில்களை “24 மணி நேரமும் வேலை செய்யக்கூடிய தலைவர் நான்!” இங்கே படிக்கலாம்.

--

--