#இதுஉங்கள்வாழ்க்கை | உங்கள் பெற்றோர் | உங்கள் வாழ்க்கையின் முதல் படி

Priya Sri
2 min readFeb 27, 2022

--

Note : The English version of this is here

வாழ்க்கைல நம்ம வளர வளர, நம் கருத்துக்கள் மாறுது. நம்ம உலகத்தை, நம்ம அப்பா அம்மா வை தாண்டி, வேற மாதிரி பார்க்க தொடங்கறோம். இது ஒரு நல்ல விஷயம் தான்.

வாழ்க்கையின் அனுபவங்கள் நம்மில் கொண்டு வரும் மாற்றங்கள்.
ஆனா இது நாலே நம்ம அப்பா அம்மா ஓட நறிய சின்ன சின்ன (சில சமயம் பெருசாக கூட) சண்டைகள் வருது. ஏன்னா இப்போ உங்க கருத்துக்கள் அவங்களோட ரொம்ப வித்யாசமா ஆயிடுச்சு. அவங்களே சில சமயம் உங்களோட கருத்துக்களை பார்த்து தடுமாறி போயிடறாங்க. “ஏன் டா … நீயா இப்படி பேசுறே??!” ன்னு ஆச்சர்யமா கேட்குறாங்க. நீங்களும் “ஆமாம், நான் மின்ன மாதிரி இல்லை” ன்னு ஒரு ஷார்ட் ஆ சொல்லிட்டு அங்கேர்ந்து நகர்ந்ந்து போயிடறீங்க. இது எல்லாம் இருக்கட்டும். ஆனா ஒன்னு … அவங்களை என்னிக்கும் நீங்க கை விட கூடாது. என்ன தான் பிரச்சனைகள் வந்தாலும் … என்ன தான் உங்களுக்குள்ள வித்யாசங்கள் வந்தாலும் … ஒன்னு மட்டும் நிச்சயம் தானே … நீங்க இந்த உலகத்துக்கு வந்ததுக்கு அவங்க தானே மூல காரணம்? இது ஒன்னு போதும். இதுக்காகவாவது அவங்கள வாழ் நாள் முழுக்க சப்போர்ட் பண்ணுங்க. அவங்க என்னிக்குமே “என் பசங்க என்னை கை விட்டுட்டாங்க” ன்னு நினைக்க வைக்காதீங்க. அந்த எண்ணம் ஒரு மனுஷனுக்கு வர கூடிய மிக கொடூரமான எண்ணம். அதை என்னிக்குமே அவங்களுக்கு கொடுக்காதீங்க . கொஞ்சம் நெனச்சு பாருங்க … நீங்க குழந்தையா இருந்தப்போ, அவங்க எவ்வளவு தியாகம் பண்ணிருப்பாங்க நீங்க இப்படி என்ன கூடாதுன்னு ? அதுனால, அந்த எண்ணத்தை அவங்களுக்கு வர விடாதீங்க . அவங்களுக்கு என்னிக்கு வேணும் நாளும் நீங்க ஓடி வருவீங்கன்னு எண்ண வைங்க.
இதை படிச்சு யாராவுது ஒருத்தர் வாழ்க்கையிலே மாற்றம் வந்துச்சுன்னா, அதுவே எனக்கு பெரிய வெற்றி

--

--