திருமதி சசிகலாவை சிறையில்லிட்ட நீதிபதி அமித் ராய், மக்களுக்கு எழுதிய கடிதத்தின் தமிழாக்கம்

நீதிபதி அமித் ராயின் வார்த்தைகளில்:

“இந்த சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை கூறிவிட்டு, நீதிமன்ற மேடையை விட்டு செல்லும்போது, கடும் துயரத்தில் மூழ்கி இருக்கும் எனது மனதில் இருந்து சில நொந்துபோகவைக்கும் எண்ணங்கள் எழுகிறது. ஆதலால் இந்த கடிதத்தை எழுதுகிறென்றேன்.

இந்த வழக்கை விசாரிக்கும்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள், கொஞ்சம்கூட மனசாட்சி இன்றி, சட்டத்தை ஏமாற்றும் நோக்கத்தோது, பல போலி நிறுவனங்கள் மூலமாக, ஒரு ஆழமான வேரூன்றிய சதி செய்து, எக்கச்சக்கமான சொத்துக்களை சட்டவிரோதமாக கைப்பற்றுவதற்கான செயலில் ஈடுபட்டிருப்பதை நான் அறிகின்றேன்.

இவர்கள் செய்த சதிகளின் புதுமையையும், கொடூர செயலையும், அதன் மூலம் ஈட்டிய லாபங்களை கண்டு எனது மனம் திடுக்கிட்டு இருக்கிறது.

இந்த நாட்டின் ஒவ்வொரு நிலையிலும் உள்ள ஊழல் என்னும் கொடியநோய், வெகுஜனன் மக்களை மீளமுடிய அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒவ்வொரு சாமானிய குடிமகனுக்கு ஏற்படும் தினசரி அனுபவமும், புற்றுநோயை போல திகழும் ஊழலை பற்றி கேட்கும் சம்பவங்களும், அதிகாரம் படைத்த ஊழல் குற்றவாளிகள், நீதிமன்ற தண்டனைகளில் இருந்து சற்றும் பயமில்லாமல் எளிமையாக தப்பித்துக்கொள்வதும், இந்த தேசத்தின் மீது கரை போல படர்ந்திருக்கிறது.

இத்தகைய கொடிய ஊழல்கள் அளிக்கும் மாபெரும் லாபங்கள், இந்த குற்றவாளிகளுக்கு, இந்த சமுதாயத்தை கட்டுப்பதும் மூக்கணாங்கயிறை கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு தனிமனித முயற்சியும், சமுதாய முயற்சியாக மாறி இந்த மூச்சுத்திணறவைக்கும் விலைபோகிவிட்ட அக்கரமங்களை நீக்க வேண்டியது அவசியம்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டத்தில் உள்ள நுணுக்கங்களை புதுமையாகவும், சாட்சி மற்றும் ஆதாரங்களின் பற்றாக்குறை ஏற்படுத்தியும், மிகுந்த புதுமைமிக்க கலைமிக்க தந்திரங்கள் மூலம் வாதிட்டுள்ளனர்.

இவ்வாறு தர்மத்தை அச்சுறுத்தும் சூழ்நிலையில், ஊழல்-எதிர்ப்பு சட்டத்தின் மூலம் வெளியாகும் இந்த தீர்ப்பு, மிகுந்த பொறுப்போடும், சட்ட தொலைதூரப்பார்வையோடும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த ஊழல்-எதிர்ப்பு சட்டத்தை புரிந்துகொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சிகள், சட்டத்தின் குறிக்கோள்களை நிறைவேற்றும் வகையில் இருக்க வேண்டுமே தவிர சட்டத்தின் குறிக்கோள்கள்களுக்கு எதிராக பயன்படுத்தபடக்கூடாது என்பதை நாங்கள் மிக தெளிவாக உணர்ந்துள்ளோம். சூழ்ச்சிகளை எல்லாம் அறிவு முதிர்ச்சியின் உதவியோடு தூக்கி எரிந்து சட்டத்தின் புனிதத்துவதை பேணிகாத்துள்ளோம்.

அரசு துறையில் உள்ள பெரிய பதவிகளை கொண்ட நேர்மையற்ற சுயநலவாதிகள் தனக்கு இருக்கும் செல்வங்களால் திருப்தி அடையாமல், தனக்கு கீழே வேலை செய்யும் சில விசுவாசிகளின் உதவியோடு, மக்கள் சொத்தை ஆக்கிரமிக்கின்றனர். குற்றம் செய்தவர் இந்த சமுதாயத்திற்கும் மட்டுமல்லாமல், மொத்த நாட்டிற்கும் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

நமது தேசத்தின் தர்மத்தை , சுதந்திரத்தை, சமத்துவத்தை, மரியாதையை, ஒற்றுமையை, ஒருமைப்பாட்டை உயிரூட்டவேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். அதிலும் மிகமுக்கியமாக மக்களால் தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகள் தங்களுடைய கடமைகளையும், இந்த நாடு அவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் உடைத்து, பயமில்லாமல் நம் அரசியல் அமைப்பு சாசனத்தை மீறும் செயல். தண்டிக்கப்படவேண்டிய துரோகமாகும். இப்பேற்பட்ட நடத்தை, நமது நாட்டின் ஜநாயகத்தின் அடித்தளமாக இருக்கும் அரசியல் அமைப்பு சாசனத்தை கொலைசெய்யும் தாக்குதல். இது நிச்சயம் மன்னிக்க முடியா பாவச்செயல்.

சட்டத்தை அச்சுறுத்தும் இந்த குற்றவாளிகள் செயல், நாட்டின் தார்மிக நிலையை சீர்குலைப்பது மட்டுமல்லாமல், தவறு செய்யும் ஒவ்வொருவருக்கும், நேர்மையானவர்களை காட்டிலும் ஒரு நியாயமற்ற நன்மையை பயக்கின்றது.

இது ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையில் இருக்கும் ஒரு இடைவெளியை பெரிதாகிக்கொண்டே போகிறது. இந்த தீயவர்களின் தீய செயல்களின் ஆதிக்கங்கள், நேர்மையான, பகுத்தறிவு மிக்க நல்ல மக்களையும் மனம் நொந்துபோகவைத்து, தன்னை போன்றவர்கள் இந்த சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் என்று தவறான எண்ணம் எழுந்து, இந்த சமூகத்தால் ஏமாற்றப்பட்டு, தன்னுடைய நன்நடத்தையை துறக்கின்றனர்.

இந்த அக்கிரம செயல்கள், நேர்மையானவர்களை தீய பாதையில் செல்ல தூண்டுவதுமட்டுமிலால், இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த நாட்டை நல்ல செழிப்பான நாடாக மாற்றும் கடமையிலும்குறுக்கிட்டு அவர்களை தீய வழியில் செல்ல தூண்டுகிறது.

ஆதலால் இந்த சூழலில் மிகவும் தைரியமான, ஒருமைப்பாட்டு மிக்க மாற்றம் என்பது, இந்த கோடி நோயில் இருந்து நமது நாடு தப்பிப்பதற்கு மிகமிக அவசியம்.

ஒவ்வொரு குடிமகனும் பங்கேற்று இந்த கொடிய நோயை நீக்கும் அறப்போராட்டத்தில் ஈடுபட்டால்தான், நமது முன்னோர்கள் கடும் தியாகங்கள் செய்து, மிகுந்த பாடுபட்டு நமக்கு பெற்றுத்தந்த விடுதலையை நம்மால் மகிச்சியோடு அனுபவிக்கமுடியும்”.

இப்படிக்கு ,
அமித் ராய்.

தமிழாக்கம் ,
விக்னேஷ் பாஸ்கரன்.

திருமதி. சசிகலாவையும், செல்வி ஜெயலலிதாவையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளித்துவிட்டு, நீதிபதி அமித் ராய், இந்த நாட்டின் நிலையை கண்டு மிகுந்த மனவருத்ததோடு ஒரு கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதினார். இந்த கடிதம் நமது நாட்டையே புரட்டிபோடவைக்கக்கூடியது. அதுமட்டுமின்றி நமது நாட்டின் தர்மத்தை காப்பாற்றும் நீதிபதி இந்த நாட்டு மக்களுக்கு கூற விரும்பும் செய்திகளை நாம் அனைவரும் அறியவேண்டும் என்ற எண்ணத்தோடு அவர் எழுதிய தமிழ் கடிதத்தை தமிழாக்கம் செய்துள்ளேன்.

இந்த கடிதத்தின் எளிமையான ஆங்கில ஆக்கத்திற்கு இங்கு செல்லவும்.

To know the conspiracy and how Ms. Jayalalitha and others, earlier escaped from the High court read this article

Reference: http://www.thehindu.com/news/national/tamil-nadu/article17300801.ece/BINARY/DAcase